ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
28•06•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(363) மனிதனே புனிதன் —
பிரபஞ்சத்தின் திறவு கோல்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இளம் துறவி சற்குரு நாதரிடம், “தாங்கள் அறியாதது ஒன்று உண்டோ? பிரபஞ்ச ரகசியத்தை அறியும் திறவுகோல் பற்றிக் கூற வேண்டும் ” என்றார். அவருடன் வந்திருந்த இரண்டு நாய்களில் ஒன்று கரிய நிறமாகவும், மற்றது தூய வெண்மை நிறமாக வும் இருந்தது. இளம் துறவியின் முகத்தைப் பார்த்தபடி இருந்தன. இளம் துறவியின் தேஜஸ் சூரிய வெளிச்சத்தில் கண் கூசும்படி செய்தது. எத்தகைய ஆற்றல் சக்தி நிறைந்திருக்க வேண்டும். ஆப்பிள் பழம் போன்ற சிவந்த மேனி படைத்த சற்குரு நாதர், “அப்பா திரிமூர்த்தி அதோ பழனி மலை தெரிகின்றதல்லவா? அங்குதான் நீ கேட்கும் பிரபஞ்ச ரகசியப் பூட்டின் சாவி உள்ளது. முருகா என்ற மகா சக்தியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர் கைலாயத்தின் வட பால் தேவ முனி ரிஷகளுக்குப் பாட போதனைகளைத் தந்த ஞான பண்டிதனே ஆவார். அவர் அங்கிருந்து தெற்குதிசை வந்து தமிழில் அநேக தெய்வீக உண்மைகளை சித்தர்களுக்குப் போதித்து வருகிறார். வேத ரகசியம் அறிந்தவர்களுக்கே அந்த சாவி கிடைக்கும்” என்று சற்குருநாதர் கூறினார். இளம் துறவி புன்னகைத்தார். “ஆகட்டும் அப்பா, அதையும் தங்களின் திருவாக்கினால் கேட்க விழைகிறேன். கூறுங்கள் அப்பா” திருமூர்த்தி என்ற பெயர் கொண்ட சத்திய தர்மமே வடிவெடுத்து வந்தது போல் இருந்த, அந்த இளம் துறவி கேட்டுக் கொண்டார். ஸ்ரீ ஈஸ்வரர் கூறுகிறார், “வேதங் கள் கூறும் மகத்துவம் உடைய இந்த உண்மைகளைக் கடைப் பிடித்து வருபவர்கள் உண்மை யில் பாக்கியம் பெற்றவர்களே. இவைகளை அறநெறிகள் என்று அகிலமே கொண்டாடுகிறது.”
“இதோ வேதம் கூறும் அறநெறி, 1.உண்மையைச் பேச வேண்டும். 2.என்றும் எப்போதும் தர்ம வழியில் தான் செல்ல வேண்டும்.
3.கற்ற கல்வியைக் கொண்டு தினமும் புதுப் புது விஷயங்க ளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி அறிவைப் புறக்கணிக்காமல் பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். 4.ஞானத்தை வழங்கிய குரு வுக்கு விரும்பிய செல்வம்தந்து, அவருக்கு மன நிறைவு தர வேண்டும்.
5.இல்லறத்தை விட்டு விலகக் கூடாது. சந்ததியினர் விருத்தி வேண்டும்.
6.நன்மை தருபவன வற்றிலி
ருந்து விலகாமல், நற்செயல் களைச் செய்து வரவேண்டும்.
7.குலசாமி களாகிய முன்னோர் களுக்கும், தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து வரவேண்டும். நைவேத்தி யம்,படையல், படைத்தல் மற்றும் தர்ப்பணம் செய்தல் ஆகியன முறையாகச் செய்தல் வேண்டும்.
8.போற்றப்பட வேண்டியவைகள் சில உள்ளது. மாதா, பிதா, குரு, மற்றும் விருந்தினரை என்றுமே போற்றிப் சிறப்பாக நடத்தி வர வேண்டும்.”
“9.மற்றவர்களுக்குத் தீமை
விளைவிக்காத செயல்களையே செய்து வரவேண்டும். மற்றதைச் செய்யக் கூடாது.
10.நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களைத்தான் செய்ய வேண்டும். மற்றவற்றை செய்யக் கூபாது.
11.நம்மை விட உயர்ந்த வர்கள், தூயவர்கள் வரும் போது எழுந்து வரவேற்று, அவர்கள் அமர இருக்கைதந்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.
12.வருமானத்திற்கு ஏற்ப தகுந்த அறிவுடன் தானம் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று செய்யாமல், பணிவுடனும், மரியாதையுடனும் தக்க தானம் செய்ய வேண்டும்.
13.நமது கடமைகள் என்ன? குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்?
என்பன பற்றிய அறிவு விருத்தி வேண்டும்.
14.ஆழ்ந்து சிந்திக்கின்ற மனமும், மனஒருமைப்பாடு மிக்க உணர்வும், சுதந்திரம் மிக்க எண்ணம் உள்ளவராகவும், நல்ல வழியில் செல்பவராகவும் இருக்க வேண்டும்.
15.குற்றம் புரிந்தவர்களை அணுகும் போது குணமுடைய சான்றோர், அறிஞர் பெரு மக்களின் ஆலோசனைகளை, அவர்கள் கையாண்ட முறைக ளையும் பின்பற்ற வேண்டும்.”
“மேற்கூறியவற்றை வேத ரகசியம் என்றும், இதுவே இறையாணை என்றும், இந்தக் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என்றும், அதனால் நன்மைகளே விளையும். அருளாசிகள் ” என்றார் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி. அதனை ஆமோதித்த இளம் துறவியாகிய திரிமூர்த்தி , “ஐயனே தாங்கள் உரைத்த மாதிரி இறைவனை எண்ணி வாழும் தவ வாழ்க்கை யில், தாங்கள் எடுத்துக் கூறிய வேதசாரத்தைக் கடைப்பிடித்து வரும் மெய்யன்பர்கள், உறுதியாக வெற்றி பெறுவார்கள்.
பிரபஞ்ச உண்மைகளை அறிந்து கொள்வார்கள்” என்றார். பிறகு முருகனை எண்ணி சிறிது நேரம் மெளனமாக அமர்ந்து இருந்த னர். அப்போது இனம்புரியாத, ஏதோ மாற்றமொன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் நீருண்ட மேகங்கள் திரண்டெழுந்தன. வெயில் பொன் நிறமாக மாறியது. மிகவும் லேசான மழைச்சாரல் துளிகள் வர்ஷித்தன. தென்றல் காற்று இனிமையான நறுமணத் துடன் வீசியது. சிறிது நேரத்தில் வானம் நிர்மலமாக மாற வெயில் பளீரென ஒளி வீசியது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.