பாதுகாப்புச் சக்தி.

0 169

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•08•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(32) மனிதனே புனிதன் —
பாதுகாப்புச் சக்தி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும் ஒருவிதமான காந்தசக்தி யானது சூழ்ந்து கொண்டிருக்கின்றது. அது நமது உடலையும், உயிரையும் பாதுகாக்கின்ற சக்திக்கு, ஒரு விதமான தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டே உள்ளது. மறை பொருளாக இருந்து கொண்டு பாதுகாப்புக் கொடுக்கின்ற அதனையே இறைசக்தி என்றனர் ஆன்றோர்.

நமது உடலைக் சுற்றிலும் சூக்கும சரீரம் இருக்கிறது. நமக்கு என்னென்ன பண்பின் குணங்கள் இருக்கிறதோ அவைகள் சூக்கும சரத்தில் பதிவாகின்றன. மட்டுமல்லாது நாம் செய்யும் நன்மை தீமைகளின் காரியங்களுக்கு உண்டான பலாபலன்கள் அனைத்துமே சூக்கும சரீரத்திலேயே பதிவுகளாகிப் படிந்து விடுகிறது.

மனிதனின் மனதிற்கும் குறிப்பிடத்தக்க விஷேசமான உணர்வு சக்திகள் உண்டு. தனது சூக்கும சரீரத்தில் பதிவின் படிவுகளைப் பதிப்பிப்பது போன்று, மனிதன் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மீதும், அவனுடன் பழகும் ஒவ்வொருவரிடத்திலும், மனதின் உணர்வின் சக்திப் பதிவுகளின் சாயல்கள் படிவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறினார்கள்.

மனிதன் ஒன்றை நினைத்துக் தீவிரமாக ஆழ்ந்து சிந்தித்தால், அவன் சிந்திக்கும் பொருட்களின் மீது அவனுடைய சக்தி உருவேறுகிறது என்பது ஞானியர் வாக்கு! தகுதி வாய்ந்த
குருநாதர் கிடைக்கப் பெற்றதால் நமது சுவாமியின் வாழ்வும் பயனானது. மூன்று வருடத்தில் அதே சுவாமிகளுடன் சபரிமலை யாத்திரை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் சூலக்கல் மாரியம்மன் வந்த பாடத்தில் முன்னமே படித்து இருக்கிறோம்.
சுவாமி கண்ஒளி பெற்ற
தெய்வீகப் பாடம் அது!

சுவாமி அவர்கள் குரு காட்டிய வழியில் தவத்தில் அமர்ந்திருந்தார்.சபரிமலை ஐயப்பனின் ஆசி பெற வேண்டும் என்று மூன்று வருட காலம் விரதமும் தவயோகமும் நல்ல பக்குவத்தைத் தந்து உதவியது. இதனால் தந்தையின்
அன்புக்கும் பாத்திரமானார்.

முதன்முறையாக மலைக்கு மாலையணிந்து அவர்கள் சொல்படி கேட்டு, இருமுடி கட்டிப் போனவர் அனேக துன்பத்திற்கு ஆளானார்.சிலர் மாலையணிந்து செய்யும் தவறுகளால்தான் மற்றவர் பாதிக்கப்படுவதை எண்ணுவதே இல்லை. கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்களைப் புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைக் கைவிடாமல் இருப்பது தான்.

நமது சுவாமி அப்படிப்பட்ட இரண்டு ஆ சாமிகளிடம் அகப்பட்டார். சமைத்து சாப்பிடத் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பெருவழிப் பயணம் மூன்று நாட்கள் காட்டினுள் தங்கி செல்ல வேண்டும். இன்று போல் அன்று இவ்வளவு வசதிகள் இல்லாத காலம்.எருமேலியில் பேட்டை துள்ளல் முடிந்து சமையல் பாத்திரங்கள் வாங்கியதை, சாமி ஹோட்டல் நடராஜசாமி காட்டு வழியில் புறப்படும் போது மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். அதனால் சமையல் செய்து சாப்பிடும் சுவாமியின் குழுவில் கஞ்சா சாமிகள் கலந்து விட்டனர்.

சுவாமி தவம் செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.எனவே சுவாமி சாப்பிடும் முன்பு உணவை மண்ணில் கொட்டி விடுவார்கள். சுவாமி ஆகாரம் இன்றி பட்டினியாக சன்னிதானம் வரை சென்றார். ஐயப்பன் தரிசனம் செய்து விட்டு அங்குள்ள விரிக்கு(தங்குமிடம்) வந்தவர் , மூன்று நாட்கள் நடந்த களைப்பு மற்றும் பட்டினி பசி காரணமாக மயங்கிக் கீழே தரையில் விழுந்து விட்டார். அங்கு விஷயத்தைச் கேள்விப்பட்டு மற்ற குருசாமிகள் வந்து பார்த்து, மயக்கம் தெளியவைத்து, அவர்கள் உணவைக் குழந்தைக்கு ஊட்டுவது போல் சாப்பிட வைத்து மகிழ்ந்தனர். பெரு வழியில் சாப்பிடாமல் இருமுடி சுமந்து வருவது அசாத்தியம். சுவாமி ஐயப்பன் துணை இருந்து அழைத்து வந்துள்ளார் என்று பெரிய வயோதிக சுவாமிகள் விபூதிபூசி ஆசீர்வதித்தனர்.

அவர்கள் கூறியபடி பஸ்மக் குளத்தில் நீராடி(இப்போது அந்தக் குளம் இல்லை), சயனப் பிரதட்சணம் செய்து வழிபட்டார். பழைமை வாய்ந்த அந்த ஐயப்பன் கோயில், நாகராஜா பஸ்மக்குளங்கள் இரண்டு, மணிமண்டபம் மிகப் பெரியது, மாளிகைபுரத்துக்கு அம்மன் இருக்கும் இடத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயில், புல்மேடு பாதையில் உள்ள உரல் குழி தீர்த்தம் எல்லாமே இன்று இல்லை! ஆலயம் பெரிய மாறுதலுக்கு உட்பட்டு விட்டது.

வானில் மகர நட்சத்திரம் தைமாதம் முதல் தேதி அன்று கண்ட பிறகு மகர விளக்கு தரிசனம் சுவாமி பார்த்தார். அந்த ஒளி அவருள் பாய்வது போன்று இருக்க மின் அதிர்ச்சி போன்று உடல் எங்கும் பாய அப்படியே மயக்கமாகிப் போனார்.

இரண்டு நாட்கள் விரியில் மயங்கியபடி இருந்து பிறகு மயக்கம் நீங்கி கண்விழித்தார். திரு. நாகப்பநாயுடு, திரு.சிங்கத் தேவர், திரு. பேச்சிமுத்து ஆகியோருடன் சாமி ஹோட்டல் நடராஜூம் இருந்தனர். மற்றவர்கள் புறப்பட்டுப் போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. நமது சுவாமி எழுந்து விட்டதும் சந்தோசம் அடைந்தனா. பதினொட்டாம் படியில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

பதினெட்டாம் படியின் அருகில் சமாதி ஆகி இருக்கும் வாபர் நடையில் தீயசக்திகள் விலகப் பிரார்த்தனை செய்து விட்டு மலை இறங்கினர். பம்பையில் குளித்து பம்பா சக்தி வழிபாடு நடத்தினார் சுவாமி. மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தனர்.

நமது சுவாமி சபரிமலை சென்று வந்த பிறகு மீண்டும் தவத்தில் இருக்க ஆரம்பித்து விட்டார். கிராம சாபநிவர்த்திக்காக சுவாமி தவம் இருப்பதை அறியாத தகப்பனார் மீண்டும் கடுமையாக நடந்து கொள்ளத் துவங்கி விட்டார்.

தனது மெளனத்தால் அதனை ஏற்றுக் கொண்டு தவத்தில் தனது சிந்தையைச் செலுத்தி அமைதியானார். மற்ற வேலைகளில் தகப்பனார் மகிழ நடந்து கொண்டார். அடுத்த ஆண்டு கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஐயப்பன் விரதம் துவங்கும் வரை காணப்படாத அந்த மகான் தவயோகி மீண்டும் சுவாமி அவர்களிடம் வந்தார். “இனி விமோசனம் பெற்று விடலாம், அதற்குண்டான தகுதி உனக்கு வந்து விட்டது” என்றார். வழிமுறைகள் கூறினார். “கார்த்திகை மாதம் முடிந்து வரும் மார்கழி மாதத்தில் ஐயப்பன் மண்டல பூஜை நடந்து முடிந்த பிறகு நாகதேவி கோயிலுக்குப் போய் வா” என்ற உத்திரவு பிறப்பித்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!

— ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button