பழனியில் புனித தவம்!

139

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

14•09•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(67) மனிதனே புனிதன் —
பழனியில் புனித தவம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“மகனே நாகராஜா இன்று உன்னுடன் சாந்தமாக ஞான உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நமக்கு இன்னொரு முகம் இருக்கிறது. பழனியில் என்னைப் பைத்தியம், பித்தன், கிறுக்கன் என்கிற பெயர்களில் மக்கள் அறிவார்கள். என்னைக் கண்டு பயம் கொள்பவர்களுக்கு நான் ஒரு பைத்தியமாகக் காட்சி தருகின்றேன். எனது தெய்வீக உண்மைகளைப் புரிந்து கொள்ள எண்ணுபவர்களைச் சோதனை செய்து பார்க்கிறேன். அருளாசிகள் தருகின்றேன். என்னிடத்தில் நம்புவது போல் நடித்து நம்பாமல் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுக்கின்றேன். அவர்கள் புரியாத காட்டு பாஷையில் பேசிக்கொண்டு வருகிறேன். அது தீயஎண்ணம் உள்ளவர்கள் என்னை நெருங்காமல் இருப்பதற்காக!”

“ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் தனது ஏட்டில் ‘நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர்’ பற்றி பதிவு செய்து இருக்கிறார். அகத்திய மாமுனிவனின் நோக்கம் நிறைவேறியதாக வேண்டும். அவர் தெய்வங்களும், ஞானியர்களும் வரும் ‘குரு ஈஸ்வராலயத்தை’ உலகினுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தை பராபரத்திடம் வெளிப்படுத்தி உள்ளார்.”

“இக் கலியில் தெய்வீகப் பரிகாரங்களில் உண்மை பக்தர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் மனத்தூய்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ வழிகள் சொல்ல வேண்டும். உலக மாற்றம் ஏற்படும் காலங்களில் இறைவன் அருள் பெற்ற மக்கள், மீண்டும் இப் பூமியில் பிறந்து மனிதவர்க்கம் காப்பாற்றப்பட வேண்டும். மனிதனின் தெய்வீகத் தன்மை வளரவளர, வானுறையும் தெய்வங்களுக்கு இறைவன் கட்டளையின் பேரில் நைவேத்தியம் படைக்கப்பட வேண்டும். அவர்களின் ஆற்றலில் அவை ஆயிரம் மடங்காகப் பெருகச் செய்து, மீண்டும் பூவுலக மக்களுக்குத் திரும்பக் கிடைத்தால் அவர்கள் வாழ்வு சிறக்கும்.”

“அதனைப் போன்றதே யக்ஞங்களும்! மகனே நாகராஜா நான் கல்கத்தா காளி கோயிலை விட்டு நீங்கிப் பழனிதான் வந்தேன். அதிகமாக ஐவர் மலையில் ஏகாந்தத்தில் இருப்பேன். பழனி மலை முருகனை அங்கேயிருந்து நன்றாகப் பார்க்க முடியும். என்னுடைய முதல் சீடப்பிள்ளையாக லைன்மேன் நடராஜனைத் தேர்வு செய்தேன். பழனி மலை அடிவாரத்தில் சிறு பெண்குழந்தை ஒன்று மாந்திரீகர்கள் ஏவலினால் துயரம் உற்றபோது அதனை குணமாக்கி விட்டேன். அப்போது சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தவர்களில், நடராஜனும் மற்றும் வேணுகோபாலனும் இருந்தனர். என்மீது மதிப்பும், மரியாதையும் நடராஜனுக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடராஜனும் வயிற்று நோவு தாளாமல் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தான்.”

“நடராஜாவின் வயிற்றின் நோயை நீக்கியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் எனது தீவிர பக்தனாகினான். எல்லோரும் என்னைக் கிறுக்கன் என ஏசியவர்கள் மெளனமாகினர். தினமும் என்னைத் தேடி வந்து அன்பைப் செலுத்தினான். நடராஜன் எனது பெயரைப் பணிவுடன் கேட்க கூறினேன். இருக்க எனக்கு இடம் தந்து எனது யாகபூஜைகளுக்கு உதவி செய்த உபகாரி! இப்போது எனது சமாதிக் கோயிலைப் பூஜித்து வருகிறான். நீ நடராஜனைச் சந்திக்கும் காலம் வரும். அப் பொது என்னைப்பற்றி அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாய்.”

சைக்கிள் கடை வைத்திருந்த வேணுகோபாலன் தெலுங்கு பேசுபவன். அவனது மனைவிக்குப் பாரிசவாதம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலையில், பெரிய நாயகியம்மன் கோயிலில் ஜெபம் செய்து கனிவிபூதி தந்தேன். முதலில் என்னைச் சந்தேகித்தான். நான் நன்மை செய்து குணம் பெற வழி காட்டினேன். இடும்பன் மலை அடிவாரத்தில் எனது சமாதியில் நடராஜன் தினமும் பூஜித்து வருகிறான். எனக்கு மிகவும் பிரியமானவன். இருவருமே ஒன்றாக சமாதியில் பூஜித்து வந்தவர்கள் தான். காலம், கருத்து வேற்றுமை இருவரையும் பிரித்து விட்டது. வேணுகோபால் பவானியில் ஒரு தியான சங்கம் அமைய வைத்து அதில் ஞான விஷயங்களைக் கூறி வருகிறான். நீ அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டும். அதற்கும் உரிய காலத்தைத் தேர்வு செய்தும் விட்டேன். உனக்கு ஞான போதனையைக் கொடுக்க சூரிய சக்தி தயாராக உள்ளது. ஒழுங்காகப் படித்து வர வேண்டும். என்னை இனிமேல் பலமுறை சந்திப்பாய். என்னைப் பற்றியோ, உன்னுடன் இருப்பதைப் பற்றியோ யாரிடமும் எதுவும் கூறாதே. நான் புறப்படுகிறேன்.”

எலுமிச்சை கனியில் என்னை நடராஜன் அழைக்கின்றான். கனியில் காட்சி தரவேண்டும் என லைன்மேன் நடராஜன் கேட்டுக் கொண்டான் என் மகனே! கனியில் என்னைப் பார்த்து சமாதிக்கு வருபவர்களுக்கு, நான் கூறும் பதில்களைக் கேட்டுச் சொல்வது யார் தெரியுமா? உனது பெரியம்மாவின் மகள் குப்பம்மாளின் மூத்த மகள் மாணிக்காள் தான். சரி நடராஜனுக்கு உதவப் போகிறேன். விடிந்ததும் வீட்டிற்குப் புறப்பட்டுப் போ.வருகிறேன்” என்று அந்த நடு இரவில் புறப்பட்டுச் சற்குரு நாதர் சென்று விட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button