பள்ளி நண்பர்கள் கடமை.

0 171

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•07•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(17) மனிதனே புனிதன் –
பள்ளி நண்பர்கள் கடமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“எல்லோரும் பள்ளியை விட்டு உடனடியாக வெளியேறி வர வேண்டும்” என்ற கூச்சல் பள்ளிக்கு
வெளியே இருந்து கேட்டது. பெரும் கூட்டமாகக் கல்லூரி மாணவர்கள் முனிசிபல் பள்ளி முன்புறமாகத் திரண்டு இருந்தனர். ஹிந்தி எதிர்ப்புக் கோஷங்களை ஆர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் கூவியபடியே பள்ளி வளாகத்திற்குள் வந்து விட்டனர்.
ஆசிரியர்கள் ஏதும் பேசாமல் மெளனம் காத்தனர். கொஞ்சம் பேர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். என்ன செய்வது? எங்கே போவது? என்ற நிலை! கையில் தடியுடன் வந்ததால் சுவாமியும் வீதியின் ஓரத்தில் பெரிய புளிய மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டார்கள். சுவாமி எட்டாம் வகுப்பு படிக்கும் காலம்.

வண்டி வாகனங்கள் இயக்கப்படாமல் நின்று போயிருந்தன. வீடு திரும்ப வழி? எல்லோரும் நடந்து கிராமம் வந்தனர். வீடு வந்த பிறகு தான் போராட்டத்தின் தீவிரம் புரிய வந்தது. திருப்பூரில் ஆரம்பித்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மளமளவென்று பரவி அதன் எதிரொலி எங்கும் கேட்டது. இரயில் மறியல் வரையிலும் சென்றது.

இதில் தீ வைப்பு கொள்ளை என சமூக விரோதக் கும்பல்களும் நுழைய பொள்ளாச்சியின் மிகப்பெரிய வர்த்தக ஸ்தாபனமாய் விளங்கிய சந்தைப் பேட்டை தீயின் பசிக்கு எரிந்து சாம்பலானது. எங்கும் சென்று வர இயலாத நிலை. போராட்டத்தின் உச்ச கட்டமாகப் பழனி, பொள்ளாச்சிப் பாதையில் இருந்த சமத்தூர் இராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளியை தீயிட்டுக் கொளுத்திக் கல்வியின் சிறப்பைக் கேடுறுத்தினர். தீயவர்களால் சமுதாயக் கேடும், மாணவ சமுதாயத்திற்குக் கெட்ட பெயரும் ஏற்பட்டது. இதில் தலைகுனிய வைக்கும் சம்பவங்களும் அரங்கேறின.

ஹிந்தி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சொல்லவொண்ணாத் துயரத்திற்கு ஆளாகினர். பள்ளி விட்டுச் செல்லும் போது துஷ்டத்தனம் உள்ள மாணவர்கள், கல்லினாலும், அழுகிய தக்காளி, முட்டை இவைகளைக் கொண்டு ஆசிரியர்கள் மீது வீசி குருசாபத்திற்கும் ஆளாயினர். ஒரு பள்ளியில் ஹிந்தி கற்றுத்தரும் பெண் ஆசிரியை புடவையைப் பிடித்து இழுத்து துன்பப்பட்டு படுத்தி மகிழ்ந்தனர்.

இப்படிப்பட்ட சில துர்குண மாணவர்களால் ஒழுக்கமான மாணவர்கள் அத்தனை பேருக்கும் இந்தச் சம்பவம் மனதில் வேதனையை உண்டாக்கியது. இராணுவம் வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதில் பள்ளி மாணவன் காலில் குண்டு பட்டுக்
கால் இழப்பு ஏற்பட்டது.ஒரு காலை இழந்த அவன் ஊன்று கோலை ஊன்றியபடியே பள்ளிக்கு வந்தான். இதனால் படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்கள் உள்ளத்தில் வைராக்கிய சிந்தனையை ஏற்படுத்திற்று.

பள்ளிக்கட்டிடம் மீண்டும் கட்டி முடிக்கும் வரை, பொள்ளாச்சி முனிசிபல் பள்ளியில் காலை மதியம் இரண்டு வேளையும், இரண்டு பள்ளி மாணவர்களும் படித்து வந்தனர். போராட்டம் ஒரு வழியாக நிறைவடைந்து மாணவர்கள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று வரலாயினர். இதன் பாதிப்பு பல மாணவர்களுக்கும் உண்டானதை பரீட்சையில் பெற்ற மார்க்கும், இருந்த தகுதியும் நிரூபித்தது.

வன போஜனம்.
°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி என்ற கிராமம் ஆழியார் அணைக்கட்டிற்குச் செல்லும் வழியில் உள்ளது.
அங்கிருந்து நடந்து சென்றால் ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் கொண்டிருக்கும் மலைக்குச் செல்லலாம். மிருகங்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாக மலையேறிச் சென்று வழிபட்டு வருவர். உணவு கையில் எடுத்துக் கொண்டு போவது அவசியம். பூஜைக்குத் தேவையானவற்றை கீழே கிராமத்தில் வாங்கிச் செல்வர். பூஜாரி ஒரு வயோதிகரும் அவரது மகன் பள்ளி ஆசிரியர் ஒருவரும் வந்து ஜனங்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தனர்.

சிலர் வேண்டுதல் இருந்தால் அன்னதானம் செய்து பக்தர்களுக்கு வழங்க கோயிலில் பாத்திரங்கள் இருக்கும். அடுப்பு எரிக்க அங்குள்ள மலை மக்கள் காய்ந்த விறகுகள் சேகரித்துத் தருவர். அன்னதானத்திற்கு பூஜாரி மகன் ஆசிரியர் அவர்கள் எங்கிருந்தோ பொருட்கள் பெற்று வந்து சிறப்பாக நடத்தினர்.

நமது சுவாமியின் நடபடிக்கைகளைக் கவனித்து வந்த திரு.ஆறுமுகம் கவுண்டர் ஐயா அவர்கள், சுவாமி வீட்டாரிடம் அனுமதி பெற்று வனபோஜனத்திற்கு அழைத்துப் போனார். சுவாமி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமான நிகழ்ச்சிகள் அதிலிருந்து ஆரம்பமானது.

நன்றி! வணக்கம்!

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button