ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
07•08•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(403) மனிதனே புனிதன் —
பரிகாரம் சொல்பவனுக்குப் பரிகாரம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது நாகராஜன் சுவாமியின் முன்பு அமர்ந்திருந்த ஜோதிட நிபுணர் திரு ஷண்முகம் அவர்கள், ” ஈஸ்வர குமாரனே சுவாமி நீங்கள் எனக்குப் பரிகாரம் கூற வேண்டும் என்பது கருவூரார் ஆக்ஞை” என்றார். நாகராஜன் சுவாமி, ” ஜோதிடர் ஐயா அவர்களே நீங்கள் என்னிடத்தில் கூறுவது அதிசய செய்தியாக உள்ளது. நான் ஏதோ சற்குரு நாதரின் ஆசியினால் தவத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அவர் கூறி வருகின்ற பரிகாரம் அனைத்தும் எனக்கு மலைப்பை உண்டாக்குகிறது. இன்னும் அநேக அனுபவ ஞானங்களை அடியேன் அடைய வேண்டி யுள்ளது. உங்களுக்கு என்னால் ஆகவேண்டிய காரியம் எது என்று கணிக்கும் பொருட்டு சற்று கால அவகாசம் தேவை ” எனவும் அவர் சம்மதித்தார். தனது சற்குருநாதருடன் அன்று இரவு தியானத்தில் தொடர்பு கொண்டார். சற்குரு நாதர், “இந்தப் பணி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்றும், அதற்கு ஜோதிடர் ஷண்முகம் ஏற்றவர் என்றும் கூறினார். அவரை சித்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ வித்யா பீடத்தின் அருகில் உள்ள காட்டு ஓடைக்கு உடன் அழைத்துச் சென்று தான் பரிகாரம் காண வேண்டும். எனவே அழைத்துக் கொண்டு செல் .. ஏற்கனவே நீ அகத்தியர் முனிவரிடம் சீடனாக இருந்த போது, விளையாட்டும், விகடமுமாய் இருந்தாய். அவர் பூஜை நேரத்தில் மற்ற மாணவர் களுடன் விகடம் செய்த உன்னை ‘இவ்வுலகில் அநேக துன்பங்கள் பெற்று அனுபவிப்பாய் ‘என சபித்து விட்டார்.”
“சாபவிமோசன மாகத் தானே நேரில் வந்து துன்பத்தை நீக்கித் தருவதாக வாக்களித்தார். அதனை அவர் சிறுவன் வடிவில் வந்து நிறைவேற்றப் போகின் றார். நீ பவானி சென்றதும் உன்னைச் சந்திக்கத் திருநெல்வேலி அருகே உள்ள ஊரில் வசிக்கும் இசக்கி என்பவரின் மகனுடைய உடலில் இருந்து உன்னுடன் பேச விரும்பி வருவார். உனக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார். பற்றிக் கொண்டு விடு. இப்போது நீயும், ஜோதிடர் ஷண்முகத்துடன் தோப்பு மலைக்குச் செல்ல வேண்டும். பரிகாரம் பெற்றுக் கொண்டு விஸ்வாமித்திர ராஜரிஷியின் யாககுண்டத்தில் இருந்து விபூதி சேகரித்துக் கொண்டு வரவேண்டும் . பிறகு கருவூரார் கூறியுள்ள பரிகாரமு டன், நமது பரிகாரத்தையும் ஒப்பு நோக்கித் தீர்வு காண வேண்டும் ” எனாறார். சற்குரு நாதர் தமது சமாதியினுள் இருந்தபடியே, நமது நாகராஜன் சுவாமியிடம் தொடர்பு கொண்டார்.
மறுநாள் காலையில் ஜோதிட நிபுணர் திரு.ஷண்முகம் அவர்கள் நமது சுவாமியைக் காண வந்தார். வனப்பகுதி யினுள் ஓடுகின்ற ஓடையில் செய்கின்ற பரிகாரத்தை விளக்கவும் அவர் புரிந்து கொண்டார். அதன்படி தோப்பு மலைக்கு அவருடன் நமது சுவாமியும் சென்றிருந்தார். அது சாரல் மழைக் காலம் ஆதலால் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் பொங்கி ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டி ருந்தது. மாடுகளை மேய்க்கும் வனவேடர் ஆதிவாசி விடலைப் பையன்கள் துணிந்து நீர்வீழ்ச்சி யில் குளித்து மகிழ்ந்து கொண்டி ருந்தனர். ஜோதிடர் திரு. ஷண்முகம் அவர்கள் வனத்தின் இயற்கை எழிலில் மெய்மறந்து போனார். மலைப்பாதையில் மெதுவாக நடந்து வனத்து தேவதைகளை வழிபடும் இடம் வந்து சேர்ந்ததும் சிறிது நேரம்
பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிறகு அருவியின் உச்சியில் வெள்ளம் வழிந்து செல்லும் பாதையில் ஓடையைக் கடந்து சென்றனர். மலையின் மீது மிக அழகுற அமைந்துள்ள நந்த கோபால சுவாமியின் கோயிலை அடைந்தனர். கோயில் பூட்டப் பட்டு இருந்ததால், அதன் தென் கிழக்குப் பகுதியில் கோயிலின் அருகில் மரங்கள் அடர்ந்த பகுதி யில் விஸ்வாமித்ர மகரிஷி அமர்ந்து தவம் செய்த புனிதம் மிகுந்த ஓர் மேடை உள்ளது. அந்த மேடையில் பச்சிலைகள் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு பரிகாரம் செய்யும் ஓடையின் கரைக்குச் சென்றனர்.
அங்குதான் உயர்ந்தநிலை பெற்ற
இயற்கையின் சக்தியில் உறையும் பராபரத்துடன் மனதை நிலை நிறுத்தி ஒன்றிப்போய் பிரார்த்தனை செய்யப்படும் போது, இறைவனால் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. யாருக்காகப் பிரார்த்தனை செய்கின்றோமோ, அவரை எண்ணி, ஜனசந்தடி இல்லாத வனத்தில் ஓடும் ஓடையில் முதலில் குளித்து விட வேண்டும். நீருக்குள் இறங்காமல் கரையில் அமர்ந்து நீரை இரு கரங்களால் எடுத்து ஜெபத்தை மனதினுள் ஜெபித்தபடி தலையில் இருந்து உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். 108 முறை நீரை அள்ளி எடுத்து தனது உடல் முழுவதும் ஜெபித்தபடியே ஊற்றிக் குளித்தார். இப்படித்தான் சித்தர்கள் பிறரின், நோய்கள், சாபங்கள் போன்றவற்றை நீக்குவதற்காகக் கைக்கொண்ட முறை. பிரபஞ்ச இயற்கையில்
மனம் ஒன்றி மனதை நிலை நிறுத்திச் செய்யப்படும் இதனால் சாபத்தை நீக்க இறைவன் ஆணையைப் பெறும் இவற்றில் ஜோதிடர் திரு.ஷண்முகம் வெற்றி பெற்றார். அது எப்படி?
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.