ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
02•04•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(276) மனிதனே புனிதன் —
பஞ்ச பூதங்களின் அடக்கம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகிய பஞ்சபூதங்கள் மனிதனது சரீரத்தின் இயல்பு நிலைக்கு ஏற்றாற்போல் அமைந்து இருக்கின்றன. ஆனால் உண்மையில் அவைகளின் சொந்த இயல்பு நிலைக்கு மாறாகத்தான் மனிதனின் சரீரத்தில் அடங்கி நிற்கின்றன. பஞ்சபூதங்களின் ஆற்றல் சக்திகள் அளவிட முடியாத இயல்புத் தன்மையில் இருப்பது இறைசக்தியின் படைப்பில் ஓர் அற்புதம். இவைகளில் தீயும், காற்றும் மேல் நோக்கிச் செல்லுகின்ற இயல்பும்; நீரும், மண்ணும் கீழ் நோக்கிச் செல்லும் இயல்பும் சிருஷ்டியின் காரணமே. இறைசக்தி தனது படைப்பின் ஆற்றலை வெளிப்படுத்தும் போது, பஞ்சபூதங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடாமல், தங்களது இயல்புத் தன்மையை விடுத்து, படைக்கப்படும் சரீரத்தில் அதனை விட்டு பிரிந்து விடாமல் இருக்கின்ற இடத்தில் நிலை பெற்று நிற்கின்றன. அது மாத்திரம் அல்லாமல் பஞ்சபூதங்கள் என்னென்ன செயலுக்கு, எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றனவோ, அந்தந்த இடங்களில் நின்று தமது செயலைச் செய்து கொண்டிருக்கின்றன. உடலை விட்டு உயிர் பிரிந்து செல்லும் வரைக்கும் பஞ்சபூதங்கள், தங்களது வீரியத்தைக் குறைத்துக்கொண்டு, தங்களது இயல்பைத் தடுத்து நிறுத்தியபடி, ஆண்டவன் கட்டளைக்கு அடங்கி நடந்து வருகின்றன. ஆனால், மனிதனது மனம் மட்டும் ஏன் நல்லவைகளைக் கடைப்பிடிக்க இணங்காமல், ஏன் வருத்தப் படுகின்றது? — ஸ்ரீ ஈஸ்வர நீதி!
திரு.பாஸ்கரன் அவர்கள் தனக்குள்ளே மெளனமாகச் சிந்திக்கத் துவங்கி விட்டார்.
” மனித மனதினை எதுவும் தாக்காமல் இருக்கும் படிக்கும், சத்திய, தர்மத்தைக் கடைப் பிடிக்கும் படி சுதந்திரத்தை, கடவுள் தந்திருக்கும் போது மனமே ஏன் வருத்தப் படுகின்றாய்? பஞ்சபூதங்கள் எத்தகைய சக்தி பெற்றிருந்தும், புறப்பொருள்களால் தாக்கப்படும் நிலை அவைகளுக்கு இருந்தும் கூட, ஆண்டவன் கட்டளைக்கு அடிபணிகின்றனவே! ஆனால் மனமே, சர்வ சுதந்திரம் பெற்று விட்ட நீ, நல்ல சொல் பேச்சைக் கேட்க மறுப்பது ஏன் மனமே? உண்மையைச் சொல்வ தென்றால், நீ அநியாயம் செய்ய விரும்புவதென்ன, சொல் மன மே? அடக்கம் என்பது இல்லாமல் நடந்து கொள்ள முயல்வது ஏன் மனமே? சொல்!
நீ பயப்படுகிறாய், அதற்கான காரணம் என்ன சொல்வாய் மன மே? ஒன்றை நீ புரிந்து கொள்ள வேண்டும் மனமே! எப்போது நீ இறைவன் கட்டளையை மதிக்காமல் மீறி நடக்கத் துவங்கினாயோ, அப்போதே உன்னையும் தாக்கும்படி உன்னையே நீ கேடு செய்து கொண்டு விட்டாய் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஏன் திகைக்கின்றாய் மனமே? உடனே நீ இறை வழியில் சென்று விடு! ஸ்ரீ ஈஸ்வர நீதியைப் புரிந்து கொள்வாய் மனமே! அதுவே உனக்குப் பாதுகாப்புத் தரும். நன்றி ”
தியானம் செய்த பிறகு அவர் தனக்குள் அதைத் தேடிக் கண்டு கொண்டு விட்டார்.
அதன் பிறகு திரு. பாஸ்கரன் அவர்களால் நமது சுவாமியைக் கண்டு பிடிக்க இயலவில்லை. தியான நண்பர்கள் சங்கம் ஒன்று சோமனூரில் தோற்றுவித்த பிறகு நமது திரு.பாஸ்கரனின் சொந்த மைத்துனர் திரு.பசுபதி அவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொண்டார். பிறகுதான் உப்பு மாமா, செபஸ்டின், அந்தோணிராஜ் எல்லோரும் தியானக் கூட்டத்திற்கு வந்து போகத் துவங்கினார்கள். நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் சற்குரு நாதரிடம் பாடங்களைப் படிக்கத் துவங்கி இருந்ததினால் வெளியே எங்குமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஞானச்சுடர் பாடங்கள் நிறைவடைந்த பிறகு அநுபூதி மாலை பாடம் கிடைத்தது. நட்சத்திரம் பாடங்களுடன், சாகாக்கலை என்று பாடங்கள் தொடர்ந்ததால் , மூன்று வருட காலங்களாக நமது சுவாமியைப் பார்க்காமல் தேடியலைந்து கொண்டிருந்தனர். அப்போது நமது சுவாமியைத் தவத்தினிலும், தெய்வீகத் தொடர்பிலும் ஈடுபடுத்த வைக்கப்பட்டார். யாரால்?
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.