நெற்றியில் துளைத்த கல்.

0 249

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•07•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(8) மனிதனே புனிதன் —
நெற்றியில் துளைத்த கல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் தாயாருக்கும் “தனது மகன் நல்லவனாகவும், ஒழுக்கம் நிறைந்தவனாகவும், பிறரை மதிப்பவனாகவும், மரியாதை செலுத்துபவனாகவும் இருக்க வேண்டும்.வாழ்க்கையில் பெற்றவர்களுக்குப் பெருமையை சேர்ப்பவனாகத் திகழ வேண்டும்.”

“அதற்கான பயன் வேண்டும் என்றால் கண்டிப்பதும் அவசியம். எல்லாம் அவன் நல்லதுக்காகத்தான்” என்று அடித்த பிறகு இப்படிச் சொல்லி தெய்வப்படம் மீனாக்ஷி அம்மன் முன்பு மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொள்வார். மகனுக்கு ஆதரவு கொடுத்துப் புத்திமதி
சொல்வார்.சுவாமி எதுவுமே பேசாமல் தாயார் அமைதி ஆகும் வரை அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்.

பாட்டியோ,” வலியப்போய் யாரும் தண்டனையைப் பெற மாட்டார்கள். நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்பார்.

சுவாமி அவர்கள், “அம்மாயி அவர்கள் பாடு மிகவும் அதிகம். எனது விருப்பங்கள் அவருக்குப் பிடிக்காது போகலாம்! அம்மா கண்டிப்பதும் எனது நன்மைக்குத்தானே! அவருக்கு என்மீது மிகவும் அதிகமான பாசம்.மிக அதிகமான பாசம் ஒரு நாள் என்மீது வெறுப்பாகவும் மாறி விடலாம். ஆனால் எனது நினைவில் அவர் தெய்வமாக இருப்பார்” என்று பதில் கூறுவார். பாட்டியும் கடவுளுக்கு நன்றி கூறிப் பேரனை ஆசீர்வதிப்பார்.

தாயார் நீர் எடுத்து வர அருகில் இருந்த ஆழியாற்றுக்குச் செல்லும் போது உடன் செல்வதும் “நீரைச் சுமக்கும் நீங்கள் என்னையும் சுமந்து செல்லுங்கள் ” என்று சொல்லி அடம் பிடித்தலும் அடிக்கடி நடக்கும்.

இதனைக் குறித்து சுவாமி அவர்களிடம் ஒருமுறை மதுரைக்கு அவர் வந்த போது விளக்கம் கேட்டேன். அதற்கு சுவாமி நாகராஜ் அவர்கள், “பெற்றவர்களின் கோப குணங்களை மாற்றித் திருத்துவதற்காக வழிபடும் தெய்வங்களின் ஏற்பாடு இது.பெற்றோர் கோபத்தை விட்டு விட்டால் குழந்தை குறும்பு செய்வதை நிறுத்தி விடும். தெய்வங்களுக்கு உணவு படைக்கும் வீடுகளில் அறிவுசால் குழந்தைகள் பிறப்பார்கள்” என்றார்.
“அவர்களிடம் இருந்து இதனைத் தெரிந்து கொண்டேன்” என்று பேச்சை நிறுத்தி தியானத்தில் ஆழ்ந்து போனார்.

இந்த வார்த்தையின் அர்த்த்தைக் கேட்டு அறிந்து கொள்ள எனக்கு ஆவல் அதிகமானது.பிறிதொரு நாளில் மீனாட்சி அம்மன் கோயில் சன்னிதி முன்பு எனக்கும் எனது மகன் அருணேஸ்வரராய் முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்றுதான் சுவாமியைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டோம்.

அதனைப் பற்றிய செய்தியை “சண்டாளம் தீர்த்தல்” பாடத்தில் எழுதி வைத்திருக்கிறேன். இனி இவர் துடுக்குத்தனம் பற்றிப் பார்ப்போம்.

நீர் கொண்டு வரச் செல்லும் தாயாரிடம் தன்னையும் இடுப்பில் வைத்து எடுத்துச் செல்லும்படி அழுது கொண்டே, உடைகளை எல்லாம் களைந்து எறிந்து விட்டு, நிர்வாணமாகப் பின்னால் ஓடினவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டது.

ஆற்றின் கரையில் சுண்ணாம்பு படிவக்கல் பாறைகள் நிறைந்திருக்கும். அதன் வழித் தடத்தில் ஓடிய போது கால்கள் தடுமாறிக் கீழே விழுந்ததில் கூர் முனைக்கல் நெற்றியைத் துளைத்து விட்டது.

குழந்தை மயங்கிக் கிடக்கின்றது.தாயாரின் நிலையோ அளவிட முடியாத துயரம். அப்போது அவர் கர்ப்பமாக இருந்த நிலை.அவரும் மயங்கிய நிலையில் அங்கு வாழ்ந்த முஸ்லிம் பெருமக்கள் ஆண்களும்,பெண்களும் உதவி செய்து, இருவரையும் வீடு கொண்டு சேர்த்தனர்.

மருத்துவம் தெரிந்த உசுனத்தா என்று அழைக்கப்படும் திரு.உசேன்பாய் அவர்கள் நெற்றியில் பதிந்த கல்லை அகற்றிட முயன்றார். ஒரு பற்றுக் கொரடாவின் மூலமாக நெற்றியில் பதிந்த கல்லைப் பற்றி இழுக்க, குழந்தை கண்விழித்து வேடிக்கை பார்க்கும் காட்சி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், தைரியத்தை தந்தது.

சுவற்றில் சாய்த்து நிறுத்தி பிடித்துக் கொள்ளச் செய்து, மருத்துவர்பாய் கொரட்டின் உதவியினால் பிடுங்கியுள்ளார்கள். அச்சமயம் நமது சுவாமி அவர்கள் விழிப்பு நிலையில் இருந்துள்ளார்கள்.

கல்லை நெற்றியில் இருந்து அகற்றியவுடன் பீச்சியடித்த இரத்தம் மருத்துவர் சட்டையை நனைத்துவிட்டது.மாதக்கணக்கில் பச்சிலை வைத்தியம் செய்து மீண்டும் பிழைத்த வாழ்வு மறு வாழ்வு என்றே சொல்லலாம்.
இஸ்லாமிய மக்களுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். இறையருள் சித்தம் நல்லபடியாகவே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சாந்தமாகி விட்டார். பாட்டியுடன் சேர்ந்து தியானம் செய்ய அனுமதி கிடைத்து விட்டது. அப்படிச் செய்ய வேண்டுமானால் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நதியில் நீராடிவிட்டு, கணபதிக்கு செம்பில் நீர் ஊற்றி பிறகு வீட்டிற்கு வர வேண்டும். இது
அன்னாரின் கட்டளை. ஒழுங்காக தினமும் அதிகாலையில் இக் கடமையை
செய்து வந்தார். மாலையிலும் கோயிலில் விளக்கு ஏற்ற வேண்டும். இவருடன் சேர்ந்து கிராமக் குழந்தைகளும் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.

நன்றி! வணக்கம்!

–ஸ்ரீ ஈஸ்வர குமாரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button