ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•04•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(297) மனிதனே புனிதன் —
நீல வண்ணப் பிறைச் சந்திரன் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலையின் உச்சியில் தோன்றி, மலையெங்கும் எதிரொலிக்கும் சிரிப்பு சப்தம் அடங்குவதற்குள், எங்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாலிபரை எங்களால் தொடர்ந்து பின் பற்றிச்செல்ல இயலாமல் போனது. காரணம் அவர் செல்வதும், மறைவதும் தான். நடந்து சென்று கொண்டு இருக்கின்றாரா? அல்லது பறந்து செல்கின்றாரா? என்ற தர்க்கம் எங்களுக்குள் எழுந்தது. நாங்கள் நின்று கொண்டும், அவருடன் பேசிக் கொண்டும் இருந்த இடத்தில் இருந்து மலை உச்சியை அடையச் சுமாராக மூன்று மணிநேரம் பிடிக்கும். எங்கள் முன்பு வேகமாக எவ்வளவு விரைந்து சென்றாலும் கால நேரம் எங்களுக்குத் சவாலாக இருந்தது. மலை உச்சியில் அவர் சிறிது நேரத்திற் குள்ளாகத் தோன்றியது எப்படி? என்பதுதான் எங்கள் வாதம். மலை உச்சியில் இருந்து எங்களை அழைத்ததும் வியப்பாக இருந்தது. நாங்கள் நமது சுவாமியைப் பார்த்து வழிகாட்ட வந்தவரைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் கூறினார். ” மலைப் பாதையில் நமக்கு வழிகாட்ட வந்த வாலிபர், வேறு யாருமில்லை. சித்தேஸ்வரரான காலாங்கி நாதர்தான்” என்று கூறினார். சந்திரன் வானில் உதயமாகி வெகுநேரத்திற்குப் பின்புதான் எங்களால் மலையின் உச்சிப்பகுதியை அடைய முடிந்தது. அந்தநேரத்தில் காற்று வீசி உடல் நடுக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மாடுகள் அந்த மலைப் பிராந்தியத்தில் நின்று கொண்டும், படுத்தபடி அசைபோட்டபடியும் இருந்தன. அவை அத்தனையும் கோயில் மாடுகளா? அல்லது தனியாருக் குச் சொந்தமானவைகளா என்பது தெரியவில்லை. ஆனால் அவைகளின் சாண எருவுகள் பக்தர்கள் தங்களின் நடுக்கும் குளிரைப் போக்கிக் கொண்டிட, நெருப்புக் கனலை பக்தர் களுக்குத் தந்து உதவிக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்.
அங்கு ஒரு பெரிய மரமும், மரத்தடியில் மேடையும் தனித்துவமாகத் தெரிய, மரக்கூட்டங்கள் சற்று தூரத்தே தெரிந்தன. கஞ்சமலையின் மீது போகும் ஒற்றையடிப் பாதை சேலம் பகுதியை நோக்கிக் கீழே இறங்குகிறது. வழியில் பற்பல தெய்வீக உண்மைகளைக் கூறும் சித்தர்களின் வாழிடங்கள் அவர்களால் மிகவும் ரகசிய மாகப் பாதுகாக்கப்படுறது. கன்னிமார் இருப்பிட வழிபடு ஸ்தலம் அவ்வழியில் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒற்றை மரத்தடியில் விஷயம் தெரிந்த பக்தர்கள் ஹோமங்கள் செய்கிறார்கள். அம்மரத்தில் இருந்து தென்கிழக்கே ஓர் ஒற்றையடிப் பாதை கீழ் நோக்கி இறங்குகிறது. நன்கு நடப்பவர்கள் சுமார் முப்பது நிமிடப் பயணகாலத்தில் அங்கே மிகவும் சரிவுடன் கூடிய இடமொன்று உள்ளது. இரவு காலங்களில் மலையடிவாரக் கிராமங்கள் மின் விளக்கு களினால் ஒளிந்து கொண்டி ருப்பது கண் கவரும் காட்சி யாகும். நாம் நிற்கின்ற இடத்தில் இடக்கைப் பக்கமாக ஓர் ஆள் உயரத்திற்கும் மேல் மூன்று பெரிய பாறைகள் அடுப்புக்கல் கூட்டியது போல் நிற்கின்ற தல்லவா? ஒவ்வொரு பாறை மீதும ஒரு ஆள் படுத்து உறங்குமளவு இடம் உள்ளது. இவைகள் மூன்றுமே சித்தர்கள் தவம் புரிவதற்கான இடங்களே! சிரமம் பாராது இதன் மீது அமர்ந்து கொண்டால், உயர் மின் நுண்காந்த சக்தி உடல் எங்கும் நிலவின் ஒளி வெள்ள மாய்ப் பரவும். இந்த ரகசிய இடத்தில் ஓர் அபூர்வ வித்தையை சற்குருநாதரிடம் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் பெற்றிருக்கின்றார். அதனை நாங்களும் உபதேசமாக சுவாமியிடம் பெற்றோம். இதில் முக்கியமானது கவனித்தல் தான். நமது நெற்றி நடுப் பொட்டில் நீலவண்ணம் உடைய பிறைச் சந்திரனை எண்ணுவதும் அதனைக் கவனித்துக் கொண்டும் இருப்பதுவும் மட்டுமே நாம் ஆரம்பத்தில் செய்து வரவேண்டும். ஓம் ஸ்ரீ என்று மூச்சை மெதுவாக உள்ளே இருப்பதும், ஈஸ்வரா என மூச்சை மெதுவாக வெளியிடுவதும் எவ்வித இம்சையுமின்றி இயல்பாகச் செய்து வரவேண்டும்.
மூச்சுக் காற்றை மெதுவாக மந்திர ஒலியுடன் வெளியிடும் போது சந்திரனை அவசியம் எண்ணவேண்டும். ஆரம்பத்தில் சற்று ஒரு மாதிரியாகப் போதை உண்டாவது போல் தோன்றும். பிறகு நீலவண்ணப் பிறைச் சந்திரன் ஒளியானது மெல்ல மெல்ல, சிரசில் இருந்து உடல் முழுவதுமாக பெளர்ணமி நில வின் ஒளியாய் பாயத் துவங்கும். இந்த சமயத்தில் தூங்காமல் தூங்கிடும் ஹரிதுயில் ஏற்பட்டு விடும். உடலில் புத்துணர்ச்சியும், பொலிவும், ஆரோக்கியமும் உண்டாகும். நல்ல சுகமான பயிற்சி தொடர்ந்து செய்திட, பிராணவாயுவின் தேவைகள் குறைந்து கொண்டே வரும். அதனைப் போன்றே கரியமிலவாயு வெளியேற்றப் படுவதும் குறைந்து கொண்டே வரும். இந்தக் காரியத்தால் உடல் வயோதிகம் அடைவதும் தடுக்கப்படுகிறது. மூச்சை வெளியிடும் போது, சந்திரனை எண்ணி வெளியிட வேண்டும் என்பதுதான் முக்கியம். சித்தர்கள் இந்தப் பயிற்சியில் சாதனைகள் செய்து இளமை உடலைத் திரும்பப் பெற்றனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.