ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
12•11•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(135) மனிதனே புனிதன் —
நீரினுள் ஓங்கார நாதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“அப்பனே என்னைக் கோபிப்பது கயிலை நாதனின் கோபத்தைக் கிளறுவதாகும். சிவனடியார் சாபம் பொல்லாதது. எங்கே உங்க சுவாமி வெற்றிலையில் தீர்த்தம் வரச் செய்து காட்டட்டும்” என்றார் போலிச் சிவனடியார். சுவாமி எழுந்து பூஜை அறையில் இருந்து விபூதியை எடுத்து வந்து வெற்றிலை மீது வைத்து, அதனைக் கையில் எடுத்ததும் தீர்த்தம் நிறைய வெளிப்பட்டது. இப்போது தீர்த்தத்தை முகர்ந்து பார்த்துக் கண்னையா அவர்கள், “ஆஹா, சபாஷ்! இது தீர்த்தம்!” என்று உரத்துச் சப்தமிட்டார். சுவாமி மெதுவாக குரலில் அவரிடம்,”தீர்த்த்தைக் குடிக்க வேண்டாம்” என்று கூறக் கீழே கொட்டிவிட்டார்.
“நீ சுவாமியானால் தண்ணீரில் சப்தம் வரச் செய், பார்க்கலாம்” என்று கோடாங்கி கொக்கரித்தார். “இது பள்ளியில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. நான் ஏற்கனவே நண்பர்களிடம் செய்து காட்டி இருக்கிறேன்” என்றதும் புரிந்து கொண்டார். திரு.கண்னையா அவர்கள், “சுவாமி இந்த போலிக்கு அதையும் செய்து காட்டுங்கள். இவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள்” என்றார் கோபமாக.
“கண்னையா சுவாமி நீங்கள் கோபம் படும் அளவிற்கு அவர் எவ்விதக் குற்றமும் செய்து விடவில்லையே” என சுவாமி அனுதாபத்துடன் பேசினார். அதற்குத் திரு.கண்னையா அவர்கள், “தெய்வமே, கண் தெரியாத எனக்கு எதற்காக இந்த சோதனை? நாகராஜ் சுவாமி, கேளும்! இந்தப் போலித்துறவி தான் தினமும் உடுத்தும் கோவணத் துணியை நீரில் நனைத்துக் கை விரல்களில் மறைத்து வைத்து, உள்ளங்கையில் வெற்றிலை மீது விபூதி போட்டு, விரல்களால் அழுத்திக் கோவணத் துணியில் நனைத்த நீரை, வடியச் செய்து கொடுத்தான். தவிரக்குடிக்கவும் கூறினான். இதற்குக் கைலாயசிவன் இவருக்குத்தான் தண்டனை கொடுப்பான். துறவிகளின் பெயரைக் கெடுக்க வந்த இந்தப் போலித் துறவியைக் காவல்த்துறை வசம் ஒப்படைத்து விடலாம்” என்று மரியாதையைக் கைவிட்டுப் பேசினதும், அந்தப போலித் துறவி ஓடிய ஓட்டம் கண்டு அங்குள்ள குழந்தைகள் எல்லாம் “ஆத்தா நீ செடிமேலே, பக்தன் நான் மேலே…ஆ.ஆ” என்று பாட்டுப்பாடி சப்தமிட்டனர்.
ஜடா மகுடம் கழன்று கீழே விழுந்து விட, கோவிந்தன் தனது ஊன்று தடியை அக்குளில் வைத்து ஊன்றியபடியே சென்று அதனை எடுத்து அவர் கையில் கொடுத்தார். “யோவ்..ஜடாமுடி நாத்தந் தாங்க முடியல! போயி சோப்புப் போட்டுக் கழுவப்பா” என்று கூறி விட்டு தனக்கே உரிய பாணியில் இடிஇடிப்பது போலச் சிரிக்க, அந்த ஆள் நந்தவனத் தோப்புக்குள் ஓடியே போனார். “நீருக்குள் ஓங்காரம் எப்படிக் கேட்கும்?” என்று திரு.கண்னையன் வினவினார்.
சுவாமி அவர்கள் ஒரு தம்ளரில் நிறைய நீர் எடுத்துக் கொண்டு அதன் மீது மெல்லிய வாயில் துணியைப் போட்டார். துணி நீரில் நனைந்தது. துணி நனைந்த பகுதியில் இருந்து ஒரு மேஜைக்கரண்டியினால் சிறிது நீரை வெளியேற்றினார். பிறகு துணியால் தம்ளரை இறுகச் சுற்றி அதன் அடிபாகத்தில் துணியைப் பிடித்தபடி தம்ளரைத் தலை கீழாகக் கவிழ்த்தார்.தம்ளருக்குள் சப்தம் கேட்கத் துவங்கியது. இது பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரும் விஞ்ஞானப்பாடம். இதையும் வைத்துத்தானா ஏமாற்றிக் கொண்டுள்ளனர் என்று திரு.கண்னையா ஆச்சரியப்பட்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.