நீயே கதி காப்பாற்றும்.

231

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•01•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(214) மனிதனே புனிதன் —
நீயே கதி காப்பாற்றும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதன் இறைசக்தியின் உணர்வுடன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வர வேண்டும். அத்துடன் உள்ளத்தில் அடக்கத்தோடு இருந்து வாழவும் வேண்டும். இறைவன் மீது என்றென்றும் பக்தி உணர்வு பெருக சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். உலகில் நீதி, நேர்மையுடன் வலம்வர வேண்டும். இப்படிப்பட்ட வாழக்கை மனிதனுக்குப் பெருமையைப் தேடித் தரும். ஆனால் மனித வாழ்வை வீணாக்குவதில் அகம்பாவம், கர்வம் இவைகள் துணை புரிகின்றன. சிலர் வெளியே அடக்கத்தின் மொத்த உருவமாக விளக்குவார்கள். ஆனால் உள்ளத்தில் அகம்பாவம் நிறைந்திருக்கும். வெளியில் அகம்பாவத்தோடு நடந்து கொள்பவர்களைக் கூட இயற்கையின் இயல்பு ஏற்றுக் கொள்ளும். உள்ளத்தில் அகம்பாவம் கொண்டவர்களைக் கொடிய அகம்பாவிகள் என ஈஸ்வர நீதி உரைக்கின்றது. அடக்கமுடைமை இனிய வாழ்வு நெறிக்கு உகந்தது!

நாயனாவும், கிராமத்து பூஜாரியும் சுப்பிரமணியைப் பார்க்கப் போனார்கள். அவன் எலும்புக்கூடு உடலுடன் பாயில் படுத்திருந்தான். அந்த அறை முழுக்க செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நாயனா குசலம் விசாரித்தார். பக்கத்து வீட்டில் இருந்தெல்லாம் தைரியம் மிகுந்த பிள்ளைகள் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். ” நாயனா உனக்கெதற்கு இந்த விபரீதமான புத்தி. என்னோடு மோத வந்திருக்கின்றாயா? நீயோ பிள்ளை குட்டிக்காரன். புவனேஸ்வரி பூஜையை செய்தாயா? குடும்பத்தினரைக் காப்பாற்றினாயா? என்று இருந்து கொள்! நான் மந்திரீகர்களுக் கெல்லாம் தலைவன். அநேக பூதகணங்களை ஆட்டிப் படைத்தவன். எனது அகம்பாவத்தினால் தெய்வீக சக்திகளால் தண்டிக்கப்பட்டேன். ஸ்ரீ பிள்ளையார் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அதனால் என்னோடு மாந்திரீகம் பயின்ற எனது நண்பனால் வஞ்சிக்கப்பட்டேன். பரீட்சை செய்து பார்க்கவே என்னையும் ஏவலுக்கு ஆட்படுத்தினான். எனது கட்டுப்பாட்டில் என்னையே வைக்கும் சக்தி, ஸ்ரீ கணபதி ஒருவருக்கு மட்டுமே உண்டு. மீண்டும் எனது அகம்பாவத்தைத் தூண்ட வராதே. ஓடிப் போய் விடு” என சுப்பிரமணி உள்ளேயிருந்து மாந்திரீகத் தலைவன் பேசினான்.

கிராமத்து பூஜாரியும், நாயனாவும் பணிவாகப் பேசத் துவங்கினர். ” ஐயா, யாருக்கோ செய்த வினை, ஏதும் அறியாத சிறுவனைப் பற்றியுள்ளது. துன்பப்படும் இவனின் நிலை பரிதாபமானது.தாங்கள் தான் இதற்குத் தகுந்த ஆலோசனைகள் கூற வேண்டும். அதற்கு உண்டான தகுதியைப் பெற்றிருக்கின்றீர்கள். தாங்களோ மிகப்பெரிய சக்தி பெற்றவர்.ஸ்ரீ கணபதிக்குக் கட்டுப்பட்டவர்கள். நீங்கள் நினைத்தால் இவரைக் காப்பாற்ற முடியும். உதவி செய்யுங்கள் ” என்று வேண்டிக் கொண்டனர். சுப்பிரமணி மேலும் கீழுமாகத் தீர்க்கமாக அவர்கள் இருவரையும் பார்த்து அமைதியானான்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button