நிழல் விழா உடல், ஒளி உடல்!

250

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•06•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(364) மனிதனே புனிதன் —
நிழல் விழா உடல், ஒளி உடல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இளம் துறவி திருமூர்த்தி அவர்கள் சற்குரு நாதரிடம் விடை பெற்றுக் கொண்டார். அவருக்கு நமது நாகராஜன் சுவாமி வணக்கமுடன் நன்றியும் கூறினார். நாய்கள் இரண்டும் எழுந்து நின்றன. கண்டால் களிப்பை உண்டாக்கும் அவைக ளிடம் ஏதோ வித்தியாசம் தென் படவே முதலில் அது என்ன வென்று நமது சுவாமிக்கும் தெரிய வில்லை. சற்குருநாதரி டம் அது பற்றிக் கேட்பதற்கும் துணிவில்லை. அதனை உணர்ந்து கொண்ட குருநாதர்,, “நாய்களின் நிழல் தரையில் தென்படவில்லை. கவனித்தாயா மகனே” என்றதும் உண்மை புரிந்து விட்டது. காலைப் பொழுது சுமார் பத்துமணி அளவில், பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் இளம் துறவி யின் நிழல் பூமியில் விழ வில்லை. நாய்களின் நிழலும் தென்படாதது ஆச்சரியத்தை உண்டு பண்ண வியப்புடன் நமது சுவாமி பார்த்துக் கொண்டிருந் தார். தமது குருநாதரிடம், “ஐயனே, எமது கலிதீர்க்க வந்த வரே, இப்போது சென்று கொண்டி ருக்கும் இந்தப் புனிதரைப் பற்றிக் கூறியருள வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு சற்குரு நாதர், “மகனே நாகராஜா, நீ புனிதன் என்று குறிப்பிட்ட இவர் ஓர் அவ தூதர் தான். இவரிடம் மற்றவர்களிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் உள்ளது. நாம் எதை எண்ணி இவரைப் பார்க்கின்றோமோ அதனைப் போலவே இவர் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வார். திரி மூர்த்தி என்று சிறப்புடன் அழைக்கப் பெறும் இவர் தான் தத்தாத்ரேய சுவாமி” என்றார். பிறகு, “சிவ சக்தியாய் விளங்கும் இறை அருள் எப்படி அநாதியானதோ, அப்படித் தனது ஜீவனை சிவமயமாக மாற்றிக் கொள்ளும்ஆற்றல் கைவரப் பெற்றவர்கள் அவதூதர்கள். இறைவனை அடைந்து வாழும் சிவ நெறியை, அறிந்து, உணர்ந்து், அவ்வழி யைக் கடைப் பிடித்து, என்றும் எங்கும் நிறைந்த இறைவனுடன் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்.”

“ஈஸ்வரசக்தி ஆகாய வடிவில் என்றும், எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது. இதன் நாதவடிவம் ‘ஹம்சம்’ என்ற மந்திரத்தின் நுட்பமாக இறை சக்தி விளங்குகிறது. ஹம் என்பதில் ‘ஹ’ என்பது ஆகாய வடிவமாகிய ‘நான்’, ஈஸ்வர ராகிய பரம் பொருளைக் குறிக்கும். சம் என்பதில் ‘ச’ என்பது மூலாதாரத்தைக் குறிக்கும் சக்தி பீடமாகும். சம் என்பது ‘அவன்’ என்ற பொருளில் பிறப்பினுக்கு வரும் ஜீவனைப் பற்றிக் கூறுகிறது. மூலாதாரத் தில் உள்ள சக்தியின் ஆற்றலால் தான் உடலில் எல்லா அசைவும் உண்டாயிற்று. அசைவினால் தான் ஈஸ்வர அறிவு தோன்று கிறது. அறிவை முதன்மைப் படுத்தியே செயல் படுவதால் ஈஸ்வரர் வழியே சக்தி செல்கி றது. அதனால் இப்போது ஹம் சம் என்பது சோகம் என்று மாறு பாடு அடைகிறது. இதைத்தான் மகா ஞானியர்கள் ஆன்மவிடுதலை பற்றி அறிந்து கொண்டனர்.”

“ஆலயங்களில் கொடி ஏற்றுதல் என்ற வழிபாடு நடைபெறுகிறது அல்லவா? அது சதா சர்வ காலமும் ஆகாயத்தில் அசைந்து கொண்டே இருக்கும் ‘நான் அவன்’ என்று மறை பொருளில் கூறும், ஹம்ச மந்திர நாதத்தில் உள்ள ஆகாய வடிவமாக உள்ள ஈஸ்வரனை , ஜீவனை குறிப் பிடுகிறது. இந்த ஜீவன் உலகில் பிறப்புக்கு வரும் போது அது மூலாதாரத்தில் உள்ள மகா மாயை எனப்படும், உலக மாயை யில் சிக்குண்டு, அறியாமையில் மூழ்கி மனிதன் கிடக்கச் செய்கி றது. இதே மகா மாயை தனது ஆற்றலால் உடலில் சகல அசைவுகளையும் ஏற்படுத்துவ தால், அறிவாகிய ஈஸ்வரர் துணையோடு, உடலைக் கடக்கச் செய்யும் தவத்தில், மகாமாயை என்னும் அறியாமை நீங்கி விடுவதால், ஜீவனை சிவம் ஆகாய வடிவமாக்கி, பிறவிக்கு வரும் முன் உள்ள நிலைக்குத் கொண்டு செல்கிறது. மரணத் திற்குப் பிறகு மனிதன் அடையும் நிலையும் அதுவென அறிந்து கொள்கிறான். சித்தர்களாகிய அறிஞர் பெருமக்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் போதே, தவத்தினால் ஆகாய வடிவமாகி விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு இறைவன் ஆத்ம தரிசனத்தை நல்குகின்றார். ஆத்ம தரிசனத்தைப் பெற்றவரி டம், சகல தத்துவங்களும் மாறி, ஆகாய வடிவின் ஹம்சோ மந்திரமும் மாறி, அசையும் நிலையும் மாறி, ஹம்சோ வானது சோகம் என ஆகின்றது. சோகம் என்பதில் உள்ள மெய் எழுத்துக்களும் நீங்கிப் போய், சோகம் என்பது ‘ஓம்’ என ஆகிறது.”

“பிரணவ மந்திரத்தை உள்ளடக் கிய ‘சோகம்’ என்பது பற்றிய விளக்கம் ஆத்மதரிசனசம் பெற்ற ஞானியர் கூறுவது, பிறவி என்பது சக்தியின் வழி ஏகும் ஈஸ்வரர் என்றும் (சக்தி சரீரத் தில் உள்ள ஆற்றலாக இருந்த போது ஈஸ்வரர் அந்த ஆற்றலின் உள்ள அறிவாக விளங்கினார்) , பிறவி முடித்தல் என்பது ஈஸ்வரரின் வழி ஏகிய சக்தியான போதுதான், (சக்தி ஒளி வடிவாக மாறிடும் போது ஈஸ்வரசக்தி ஒளி வடிவான ஆற்றலாகி விடும்) சக்தி தனது உருவை இழந்து, சூட்சும ஒலியாகிய ‘ஓம்’ எனத் துலங்கியது! ஓரெழுத்து மந்திரம் மனித உடலில் தொப்புள் பகுதி யில் தான் உதயம் பெறும்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)’

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button