ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
04•05•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(308) மனிதனே புனிதன் —
நிகழ்காலத்தைக் கவனித்தல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“போதும்” என்று சித்தர்கள் கூறுவதற்குப் பொருள் உண்டு. போதும் என்பதற்கு மூன்று வகையான விஷேசத் தன்மை களைக் குறிப்பிட்டனர். நிகழ் காலம், கடந்த காலம், எதிர் காலம் என்பதையே அவைகள்.
இவைகளில் நிகழ் காலம் என்று நடந்து கொண்டிருப்பது என்று மேலோட்டமாகப் பொருள் கூறினால், அதன் உண்மைகள் மறைந்து விடும். “உண்மை களைப் பேசும் அறிவுடன் கூடிய எண்ணங்களை மனதினில் இருத்திக் கொள்வதுடன், நமக்கும், மற்றவர்களுக்கும் பிரயோஜப்படக்கூடிய செயல் களையே செய்து கொண்டி ருப்பது” என்பதை, வாழ்க்கை நடைமுறை “இச்சா சக்தி “என்று அறிந்திருந்தனர். படைக்கும் அறிவு எனப்படுகிறது.
இரண்டாவதாக, “நமக்கு முன்பாக நமது கட்டுப் பாட்டினுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளில், மனது திருப்தி யை அடைகிறது. அதைப் போலவே நமது அறிவினில் தனது ஆதிக்கமின்றி நடை பெறும் நிகழ்ச்சிகளை நிறைவு டன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ” இதனைக் வாழ்வின் நடைமுறை “கிரியா சக்தி ” என்றும், காக்கும் அறிவு என்றும் கூறினர். மூன்றாவதாக “ஞான சக்தி ” எனப்படும் வாழ்வின் நடைமுறைகள் எனப்படுவதை “நீக்கும் சக்தி “அல்லது “அழிக்கும் சக்தி” என்று சித்தர்கள் தனது பால் பற்றுக் கொண்டவர்களுக்கு விளக்கம் கூறினர். அதாவது, “நடந்து முடிந்து போன எந்த நிகழ்ச்சி களையும் மீண்டும் நினைவு கூறாமல் இருப்பதோடு, இனி நடைபெறப் போகும் அல்லது வரப்போகும் நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது. ”
இனிப் “போதும்” என்பதனைப் பார்ப்போம். மேற்கூறிய மூன்று நிகழ்வுகளையும் “நிகழும் காலத்தில்” கவனித்து வரவேண்டும். இந்த மூன்றை யும் நிகழ்ச்சி நடை பெறும் போது ஒரு மனிதன் தன்னிடம் உள்ள மற்றொரு பொக்கிஷ மான விவேகத்தை உபயோகப் படுத்தி மகிழ்வுடன் வாழ வேண்டும். இந்த ஸ்ரீ ஈஸ்வர நீதியைப் போதனைப் படுத்திய தோடு நில்லாமல் மனதிலும் பதிய வைத்தார். சற்குரு நாதர் இன்னொரு காரியத்தையும் செய்து வந்தார். தனது குழந்தையாகப் பாவிக்கும் சீடன் ஸ்ரீ நாகராஜன் சுவாமிக்கு தேவையற்ற விஷயங்களைப் “ஸ்பரிச தீக்ஷை” செய்யும் போதே நீக்கி விடும் காரியத்தை யும் செய்து வந்தார். தனது வலது கைக்கட்டை விரலை சுவாமியின் நெற்றிப் பொட்டில் வைத்து ஏதோ கூறுவார். பிரபஞ்ச சக்தியாக விளங்கும் அவரால் “முடியாது” என்பதும் “இல்லை” என்பதும் கிடையாது. நடக்கும், கிடைக்கும், ஆகட்டும் என்ற மந்திரம் அவருடைய தே!
ஒருமுறை, “வீடு எங்கும் குப்பை யும், கூலமுமாய் கிடக்கின்றதே. சாமான்கள் அதுஅது இடத்தில் ஒழுங்காக வைக்கப்படாமல் இறைந்தும், கலைந்தும் கிடக்கின்றதே” என்று நமது சுவாமி கூறிக்கொண்டிருந்த போது, “யாரது வீட்டுல? யாருமில்லையா? ” என்ற அதட்டும் குரல் கேட்டது. நாச்சியார் அவர்கள் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தார். அப்போது குழந்தைகள் இருவரும் விளையாட்டுப் பொருட்களைக் கலைத்து எறிந்து சப்தமிட்டபடி தங்கள் காரியத்தில் கவனமாக இருந்தனர். வீடே அமர்க்களமாக அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. சுவாமி தியானப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்த நேரம். குழந்தை களை அதட்டும் போது அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். வெளியில் இருந்து சற்குரு நாதரின் குரல் கேட்டது மே அவரைப் பார்த்து வணங்கி விட்டுப் பூஜை அறைக்குள் சென்றனர். அங்கு தேவஜோதி விளக்கின் முன்பாக அமைதி யாக அமர்ந்து கொண்டனர்.
சற்குருநாதர் மெல்ல வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார். தவத்திருமதி. பொன்னம்மா பாட்டி அவர்க ளுக்கு அவர் வருகை ஏகமான சந்தோஷம். சற்குரு நாதரின் வளைந்த உருண்டை வடிவக் கம்பைப் பார்த்தபடி பாட்டி அருகே அமர்ந்து கொண்டார். “என்னம்மா பொன்னம்மா நாச்சியாரே! உம்பேரனுக்கு என்ன கோபம் அதிகம் வருது? இதுதான் பாட்டி வளர்ப்பா? ” என்று கேட்டதும் அவர்கள் கண்ணில் நீர் சுரந்து விட்டது. சற்குருநாதரைக் கையெடுத்துக் கும்பிட்ட பாட்டி, ” பகவானே ஈஸ்வரா! இதில் எங்கள் பொறுப்பு என்பது வளர்த்த தாயிடம் பெற்ற அன்பு, உலக பழக்க,வழக்கம் அறிவதில் உதவிய தந்தை, மற்றும் பாட்டி இவர்கள் எல்லாம் பேரனின் இப்பிறப்பின் உதவியாளர்களே! எல்லாம் வல்ல குருவன்றோ துவிஜன் என்ற நிலை காட்டி, இப்பிறப்பிலேயே மறுபிறவியை அடைய வைக்கின்றார். எனது பேரனை உங்கள் வசம் ஒப்பு வித்து விட்டோம். அவனின் நன்மை, தீமைகள் அனைத்தும் இனி தங்களையே சாரும் ஐயனே! பேரனுக்கு நல்ல குணமாக மடை மாற்றும் வித்தையினைத் தாங்கள் தான் படிப்பித்து ஆளாக்க வேண்டும். தவறு செய்தால் கண்டித்தும், தண்டித்தும் நல்ல மனிதனாக்கித் தரவேண்டும் அப்பா ஈஸ்வரா” என்று மனம் திறந்து பேசினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.