நாகம் தீண்டியது!

277

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•10•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(84) மனிதனே புனிதன் —
நாகம் தீண்டியது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“சாமி! சாமி! வணக்கம் சாமி!” இது பைத்தியம் போல் திரியும் வைத்தியரின் மருமகன் குரல். தினமும் பலசரக்குக் கடையின் ஓரமாக நின்று, தலையை நீட்டி, “பீடி குடுங்க சாமி! குடிக்க பீடி குடுங்க சாமி!” என்று பாட்டுப் போலப் பேசி வருவார்.”இங்க யாரு சாமி. நீங்கதான் சாமி. பீடியக் குடுங்க சாமி! ” 10-ம் நெ. பீடி இரண்டு வாங்கிக் கொண்டு போவார். ” நீங்க நிஜமாலும் பைத்தியமா?” என்று கேட்டால், “நிஜமாகவே எல்லோருமே பைத்தியம் தான் ” எனச் சிரிபபார்.

ஆற்றங்கரைப் பாலத்தின் வடக்குப் பக்கம் பெரிய புற்று ஒன்றினுள் ராஜநாகம் ஒன்று வாழ்ந்து வந்தது. காலை, மாலை இரண்டு வேளையும் நாள் தவறாமல், அந்தப் புற்றருகே அவர் அமர்ந்து கொண்டிருப்பார். அல்லது புற்றுக்குள் கையை விட்டு, “என்னைக் கொத்து, கடி” என்ற படி கத்துவார். உள்ளூரில் வயல் வேலைகளுக்குச் செல்லும் பெண்களில் வயோதிகப் பெண்கள் மூன்று பேருக்கு இந்தக் காட்சி பெரும் பயத்தை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக ‘வெள்ளக்கிணறு’க்கார அம்மா வுக்கும், அவரின் மகளுக்கும், ‘கானான்’ என அழைக்கப்படும் தொழிலாளி ஒருவரின் தாயாருக்கும் தான்! மாலை நேரத்தில் சிறு கயறு பாதையில் கிடந்தாலும் கூட அதைக் கண்டு பாம்பு என நினைத்து பயந்து போய் அலறிக் கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விடுவார்கள். ஒருபுறம் புற்றுக்குள் கையை விட்டு ‘என்னைக் கொன்று விடு’ என்று கூறும் வைத்தியரின் மருமகன்; மறுபுறம் எதைப் பார்த்தாலும் பாம்பு கடிக்க வருகிறது என்று பயந்து கத்தும் மூன்று வயோதிக மகளிர் அணி! இவர்களால் ஊரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

பயங்காளிகளைக் கண்டால் மற்றவர்களுக்குக் குறிப்பாக சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தானே! கயறு, பழந்துணி இவைகளை வீசிப் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது. இவர்கள் இருக்கும் இடம் சத்தமும், கூச்சலுமாகி பாம்பு பயம் உள்ளுர் மக்களுக்குப் போய் விட்டது. வைத்தியர் மருமகன் எந்த உணவுமின்றி மூன்று நாட்கள் புற்றை விட்டு நகராமல் அங்கேயே இருந்து கொண்டு, பாம்பும் புற்றினுள் கையை நுழைத்தபடி படுத்துக் கிடந்தார்.

நான்காம் நாள் கிராம மக்கள் புற்றின் முன்பு கூடி விட்டார்கள். சர்பம் தீண்டிய உடல் நீலம் பாரித்துக் கிடந்தது. பைத்தியம் போல் திரிந்த ஒரு மனிதாபிமானியுனுடைய அகால மரணம் கிராமத்தையே உலுக்கி விட்டது. சுவாமி கடையின் மேற்குப் புறம் உள்ள இடத்தில் அவர் உடல் புன்சிரிப்பு மாறாத முகத்துடன் கிடந்தது. அவரை வேடிக்கைப் பொருளாக நினைத்த குழந்தைகள் எல்லோரும், “பைத்தியம் அண்ணா போயிட்டீங்களா?” என்று கதறி அழுதது நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. கானானின் தாயாரும், வெள்ளக்கிணறுக்கார அம்மாவும் அவர் தலையை மடிமீது போட்டுக் கொண்டு, அந்த வயோதிகப் பெண்களும் அழுதனர். நல்லடக்கம் சிறப்பாகச்செய்தனர்.

கிராமத்தில் ஓடும் ஆழியாற்றின் மேற்குப் கரையில் இருக்கும் பள்ளிவாசலில் அநேக பைத்தியம் பிடித்தவர்களைப் பராமரித்து வந்தனர். அதில் தப்பி ஓடிவரும் பைத்தியங்களைப் பிடித்து மீண்டும் அங்கு ஒப்படைக்கும் வேலையைக் கிராம குழந்தைகள் சேவையாகச் செய்து வருகின்றனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button