ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•04•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(293) மனிதனே புனிதன் —
நல்ல குருநாதனே நிறை வாழ்வு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோமனூர் தியான அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சுவாமி அவர்கள் புன்சிரிப்புடன், அமைதியாகப் புரியும்படியாகப் பதில் கூறி வந்துள்ளார். இவர்களின் பலவிதமான ஆன்மிக சந்தேகங்களை எல்லாம் தெளிய வைத்தார்கள். ‘சந்தேகம் தெளிதல்’ என்னும் பாடத்தையே அவர்களுக்குப் போதித்தார்கள். இரவு 2 மணி சமயத்தில் சிறிது நடைப்பழக்கம் அப்போது சுவாமி அவர்களுக்கு இருந்தது. சுவாமி அவர்கள் திரு.பாஸ்கரை அழைத்து அவரின் தோள்மீது தனது கரத்தைப் போட்டுச் சிறிது தூரம் நடப்பார்கள். அப்போது சுவாமிகள் திரு. பாஸ்கரனிடம் பல கருத்துக்களைக் கேட்பார்கள். ஒரு நாள் இரவு நடக்கும் போது, ” உனக்கு என்ன வேண்டும் பாஸ்கரா?” என்று கேட்டார். திரு.பாஸ்கரன் உடனே,” எனக்கு ஞானம் வேண்டும்; ஆத்மபலம் வேண்டும் சுவாமி ” என்று பதில் கூறினார். அதற்கு சுவாமி அவர்கள் சிரித்தபடியே, “இந்த இளம் வயதில் சினிமா, ட்ராமா என்று கேளிக்கையில் மனம் நாட்டத்தைச் செலுத்துவது வழக்கம். ஆனால் நீ ஞானத்தைப் பற்றிக் கேட்கிறாய், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ” என்றார்கள். ” உண்மையில் எனக்கு ஆத்ம ஞானம் என்றால் என்னவென்று அப்போது தெரியாது. ஆனால் நான் அப்படித்தான் சுவாமி அவர்களிடம் கேட்டேன்” என்று அந்த சம்பவத்தைத் திரு. பாஸ்கரன் அவர்கள் நினைவு கூறுகிறார்.
மேலும் கூறுகிறார், “எனது மைத்துனர் திரு.பசுபதி அவர்கள் சுவாமிகளின் பக்தரானார். அவர் இயல்பாகவே தியானத்தில் நாட்டமும், ஆர்வமும் இயல்பாகவே கொண்டிருந்தார். விடாமுயற்சியும், வைராக்கிய மும் அவரிடம் இருந்தது.சுவாமி அவர்களின் அன்பு க்கும், நம்பிக்கைக்கும் உரியவரானார்” என்று அன்றைய நிகழ்வுகளை நினைவு கூறுகின்றார் திரு. பாஸ்கரன் அவர்கள்! சுவாமி அவர்களிடம், பிரம்மதண்டம், சக்கர வியூகம், பூஞ்சிறகு போன்ற அபூர்வமான பாடங்களையும், சித்தர்களின் அருளாசிகளுடன் கூடிய கோயில்களில், தெய்வங்களின் உயர் சக்திகளாகிய அனுக்கிர ஹம் பெறும் வழிகள் பற்றிய உயரிய பாடங்களை சுவாமிகள் தந்தருளினார்கள் ” என்கின்றார். அவர்களுக்கு நட்சத்திரப் பாடங்களில் ஜீவிதத் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை வானியல் பாடங்களாகப் போதித்து, அதன் ஒலிகளை ஈர்த்து எடுக்கும் யோக சாஸ்திரம் பற்றியும் கற்றுக் கொடுத்து ள்ளார்கள். மேலும் திரு.பாஸ்கரன் கூறுகையில், “நமக்கு ஒரு குரு அமைய வேண்டும் என்றால், தினமும் சிவ விஷ்ணு ஆலயங்களை, மூன்று வருட காலம் நாள் தவறாமல் வலம் வந்து, இறைசக்தியை வணங்கி வர வேண்டும். அல்லது திருவண்ணாமலையை மூன்று வருட காலம் கிரிவலம் வரவேண்டும். அப்படி வந்தால்தான் நல்ல குருநாதர் அமைவார் என்ற வாசகத்தை நான் ஒரு நூலில் படித்துள்ளேன். ஆனால் நமது சுவாமிகள் எங்களைத் தேடி வந்து ஆட் கொண்ட தெய்வம். நாங்கள் செய்த மிகப் பெரிய புண்ணியம் இந்த நிகழ்வு.”
“பவானி ஆசிரமத்தில் இருந்து ஞானகுரு தவத்திரு வேணு கோபால சுவாமிகள் விலகிச் தனியே புஞ்சைப் புளியம் பட்டியில் ஆசிரமம் தொடங்கி னார்கள். பின் அவருடனான எங்களின் தொடர்பு விலகியது. பிறகு நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி பவானி ஆஸ்ரமத்திற்கு வரும்போது, நாங்களும் அங்கு செல்வோம். சிலசமயம் நாங்கள் நாட்கணக்கில் தங்கி சுவாமி களின் உபதேசங்களையும், பாடங்களையும் கேட்டு குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வோம். அங்குள்ள தியான மண்டபத்தில் கூட்டுத் தியானமும், பிரார்த்த னையும் நடக்கும். சுவாமி அவர்கள் எங்களுடன் சேர்ந்தே சமையல் பணிகளை யும் செய்வார். நாங்கள் அனைவரும் சேர்ந்தே சமைப்போம். எங்களுக்கு அவரே உணவு பரிமாறுவார். எங்களோடு சேர்ந்து அந்த மண்டபத்தை தூய்மைப் படுத்துவார்கள். தரையைப் பெருக்குவார். பாத்திரங்களை அவரே நன்றாக அலம்பி வைப்பார். எங்களோடு கலந்து ஒன்றாக, நல்ல நண்பராக, நல்ல சகோதரராக, நல்ல ஆசானாக வேறுபாடின்றிப் பழகுவார்கள். அவரிடத்தில் எப்போதும் தற்பெருமையோ, ஆணவ அகங்கார குணங்களை யோ, வேண்டாத பழக்க வழக்கங் களையோ, நாங்கள் இதுவரை பார்த்ததும், கேட்டதுமில்லை. உறங்கும் போதுகூட தனியே அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருப்பது வழக்கம். இரவு தவத்தின் போது அருகில் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். எங்களையும் பகவானை எண்ணி தியானம் செய்யும்படி கேட்டுக் கொள்வார் கள். அவர் எப்போதும் ஸ்ரீ ஈஸ்வரருடனான தொடர்பில் வாழ்ந்து வருகின்றவர். இதனால் தான் அவர் வாழும் மகா ஞானி யாகவே இருக்கின்றார்கள்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.