நல்ல குணங்கள் மேலோங்கும்!

159

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•09•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(59) மனிதனே புனிதன் —
நல்ல குணங்கள் மேலோங்கும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களிடம் நாங்கள் பழகிய காலம் தொட்டு இன்று வரையில் சிறுகச்கிறுக நமது குணங்களில் நல்ல மாற்றமும் அவர் எதிர்பார்க்கும் நல்ல குணங்கள் நம்மிடம் வளர்ச்சி பெற்று வருவதை நம்மால் உணர முடிகிறது.

தெயவீக பக்தி உணர்வுகளும், பணிவு குணங்களும் குடும்பத்தினரிடம் வளர்ந்து இருக்கிறது. நாவடக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை செலுத்தும் தன்மைகள் வளர்ந்து வருகிறது. குரு ஈஸ்வராலயத்தில் நமக்கு இது அனுபவமாகிறது. மற்றவர்களுடைய கருத்துக்கும் மதிப்பு தரும் பக்குவம் வருகிறது.இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.நன்றி!

நாச்சியார் மீனாம்பாள் அவர்களிடம் தாம் உணர்ந்த வழிமுறைகளை முதலில் எடுத்துக் கூறியதால் இறையருளுக்கு இருவருமே பாத்திரமானார்கள்.
இறைவனைப் பற்றி ஆன்றோர்கள் கூறியுள்ள கருத்துக்களைப் பற்றி சுவாமியம்மா அவர்களிடம் சுவாமி கூறுவதைக் கேட்டு, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் விட்டார். சுவாமியும் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

ஒருமுறை தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் அமர்ந்து இருந்தனர். சுவாமி அவர்கள் தனது துணைவியாரிடம்,”நீங்கள் இல்லறத்தில் நாட்டம் அற்று இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர்,” அது என்னுடைய இயல்பான விருப்பம். பெற்றோர் உங்களை எனக்குத் தகுந்த துணை என்று தேர்வு செய்து விட்டனர். உங்கள் கிராமத்து ஜனங்கள் உங்களுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி, எனது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். எனது துறவர நெறிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்பி உளப்பூர்வமாக உங்களை எனது கணவனாகவே மனதில் வரித்து விட்டேன்.உண்மையைச் கூறி விட்டேன் இனி உங்களது இஷ்டம்தான் எனது வாழ்வு” என்று சொல்லி அமைதியானார்.

என்ன ஒற்றுமை இருவருக்கும்!
மறுநாள் தனது குருநாதரை சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. தனது மனையாளின் கருத்து பற்றி அவரிடம் தெரிவித்தார். அதற்கு குருநாதர்,” நாகராஜா அவளுக்கு வயது உன்னைவிட பன்னிரெண்டு ஆண்டுகள் குறைவு. மனதில் பக்குவம் வந்து விட்டது. இல்லறம் ஏற்றுக் கொள்ளும் உடல் பக்குவம் பெறாதவள். நாங்கள் உருவாக்கியுள்ள குருஈஸ்வராலயத்திற்குப் பணிபுரிய இரண்டு ஆண் குழந்தைகள் உங்களுக்குப் பிறப்பார்கள். அக்குழந்தைகள் பிறப்பதைக் கனவின் மூலம் அவள் பார்த்து ஆசை கொள்வாள். நீயும் உனது மனைவியும் தியானமிருப்பதை உங்கள் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். நீ பொறுமையாக அவைகளைச் சமாளிக்க வேண்டும் ” என்று கூறி தான் கேரள வனப்பகுதியில் உள்ள சித்தர்களைப் பார்த்து விட்டுப் பழனி திரும்பும் போது உன்னிடம் சில விஷயங்கள் கூற இருக்கிறேன். எதற்கும் தயாராக இரு” என்றவர் சென்று விட்டார்.

கணவனும் மனைவியும் இருவருமே ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவரை இடைவிடாத கருத்தில் கொண்டு புனித வாழ்வு வாழ்ந்தனர். நமது சுவாமியும் பராபரமே ஸ்ரீ ஈஸ்வரராக வெளிப்பட்டுத் தனக்கு குருநாதராக வந்து ஆன்மிகப் பாதையில் வழி காட்டி வருவதை தனது துணைவியாரிடம் எடுத்துரைத்தார். அவர்களும் குருநாதரை தரிசிக்க விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார் . அவரிடம் அனுமதி பெறவேண்டும். எதற்கும் மனதினுள் அந்தக் கருத்திற்கு ஜீவன் உண்டாக்கு என சுவாமி தெரிவித்தார்.

இந்த சமயத்தில் சுவாமி அவர்களின் மூத்த சகோதரி திருமதி விஜயலக்ஷ்மியின் கணவர் திரு.தெண்டபானி அவர்கள் பொள்ளாச்சி தேங்காய் வியாபாரிகளுடன் வட இந்திய யாத்திரை செல்வதாகவும், வந்தால் சுவாமியை அழைத்துப் போவதாகவும் செய்தி அனுப்பினார். அவரும் தனது தகப்பனார் தாமரைக்குளம் திரு.கருப்பண்ணன் அவர்கள் செய்து வந்த தேங்காய் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். பொள்ளாச்சி திரு.இரத்தினம் லாரி புரோக்கர் அலுவகத்தில் அவரது தம்பி திரு.பாலு அவர்கள் இந்தப் பிரயாண ஏற்பாட்டைக் கவனித்து வந்தார். சுவாமியின் பெற்றோர் தங்கள் மருமகன் கருத்துக்கும் புறம்பாக எதுவும் சொல்ல மாட்டார்கள். மகனை வடஇந்திய யாத்திரை அனுப்ப சம்மதம் எனக் கூறினர்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும் )

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button