நல்ல உள்ளம் உறங்காது

401

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•08•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(397) மனிதனே புனிதன் —
நல்ல உள்ளம் உறங்காது
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்கள் மற்றவர் களுடைய சக்தி ஆற்றலைத் தாழ்வான எண்ணத்திலோ, எதிர் மறையான சிந்தனையிலோ கணிக்கவோ, பார்க்கவோ இல்லை. மற்றவர்களை அவர்களுடைய எதிர்மறையான சூழல்களில் கவனிக்கக் கூடாது என்பதுதான் சற்குருநாதருடைய ஆக்ஞையுமாகும். இதனுடைய காரணம் ஒன்றினாலேயே, எல்லையே இல்லாத சகல செளபாக்கியங்கள் நிறைந்த இறைவனுடைய சக்தி ஆற்றலைப் பெருவதற்கு சற்குரு நாதர் நல்ல வழி காட்டி அருளினார். அது என்னவென் றால் எப்போதும் ஒளிவு மறைவற்ற திறந்த மனதுடன் வாழ்ந்து வருவதுதான். அப்படிப்பட்டவர்கள் உள்ளத்தின் வாயிலாகவே இறைவனுடைய இன்னருள் எப்போதும், எந்த நேரத்திலும், எவ்விடத்திலும் பாய்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உள்ளத்திற்கு எல்லையற்ற, அரிதான, தெய்வீக உண்மைகளை அறிந்து கொள்ளக் கூடிய வலிமையும் உண்டாகும். இவர்களது உணர்வுகள் எப்போதும் சிரசின் உச்சியில் நிறைந்திருக்கும். தூங்காமல் தூங்கிக் சுகம் பெறும் ஆனந்தத்தில் திளைத்திருப்பார் கள். இவர்கள் உறக்கத்தில் தினம் தோன்றும், காட்சிகள், கனவுகள் வகைகளிலும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அனைத்தும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயக்குவதற்கு இறைவன் துணை புரிவார். தீமையாளர்கள் இவர்களைக் கண்டால் விலகிச் சென்று விடுவார்கள்.

தம்பன வசியன் குடும்பத்தினர் அனைவரும் நமது சுவாமி அவர்களை நெருங்காமல் விலகி இருந்தாலும், மறைமுகத் தொல்லைகள், தூண்டுதல்கள் என வானவேடிக்கைகள் நடத்தி மகிழ்ந்து வந்தனர். இதில் திருமதி மீனாம்பாள் நாச்சியார் பாடுதான் சொல்லத்தரமன்று. இகழ்ச்சி வசை பாடினாலும் பதில் பேசமாட்டார்கள். தாலிக் கொடி அணிந்திருந்ததால் கொடிக்காரி என்ற பட்டப் பெயரிட்டு அழைத்து, நாச்சியார் தாய், தந்தையைப் பிழைத்துப் பேசினாலும் பொறுமை காத்து வந்தார். பாட்டி தவஞானத் திருமதி பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் இதனைப் பாராட்டினாலும், புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார். அவர் கவலை கொள்வதற்கும் ஒரு காரணம் இருந்தது. நமது சுவாமி இப்போது அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறிச் செல்வது பற்றிய செய்தியைச் தனது குடும்பத்தில் மட்டுமே பேசி வந்தார். தவஞானப் பொன்னம் மாள் நாச்சியார் இதற்கு இசைவு தெரிவிக்க வில்லை. அவரது தியானத்தின் போது சற்குரு நாதர் காட்சி தந்து பேரன் வீட்டை விட்டுச் செல்ல அனுமதி தரும்படி உத்தரவிட்டார். அதனால் ஏற்படும் நன்மைகள் அநேகம் என்றும் கூறினார். இதனால் மனத்தெளிவைப் பெற்ற பாட்டி அவர்கள் நிதானமா னார்.

சற்குரு நாதரோ ஒரு வருட காலம் நமது நாகராஜன் சுவாமி அவர்களைச் சந்திக்க மாட்டேன் என்று கூறிவிட்டு பழனியில் உள்ள தமது சமாதிக்குள் சென்று விட்டார். நல்ல உள்ளம் என்றும் உறங்காது என்பது போலவே சற்குரு நாதரின் கவனம் முழுக்க நமது சுவாமி நாகராஜ் அவர்கள் மீது இருந்தது. அதனால் எல்லா உதவிகளும் அவ்வப்போது கிடைத்து வந்ததால் காக்கும் இறைவனுக்கு நன்றி கூறினார் கள். இந்த சமயத்தில் ஜவுளி வியாபாரம் செய்யும் ஒரு குழு கிராமத்திற்கு வந்திருந்தது. ஜவுளி மூட்டையை வாடகை சைக்கிளில் கொண்டு சென்று சுற்றுவட்டார கிராமங்களில் எல்லாம் விற்பனை செய்து வருவார்கள். அவர்களில் ஒருவர் நமது நாகராஜன் சுவாமியைச் சந்திக்க விரும்பினார். சந்தனக் கலர் சட்டை, தூய வெண்மை நிறத்தில் நீலக்கரையிட்ட வேட்டி, தோளில் அங்கவஸ்திரம் நெற்றியில் சந்தனத கீற்றுடன், நல்ல சிவந்த நிறமுடன், சற்று தெளிவான தோற்றமுமாகக் காணப்பட்டார். தன்னை சுய அறிமுகமும் செய்து கொண்டார். அவரது பெயர் திரு.ஷண்முகம். தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்தவர். தான் ஒரு ஜோதிட வித்வான் என்று கூறிவிட்டு நமது சுவாமியின் எதிரே மகிழ்வுடன் அமர்ந்து கொண்டார்.
அவர் நமது சுவாமியிடம் முதலில் ஒரு கேள்வி கேட்டார். “சுவாமி வணக்கம். ஆருடம், ஜோதிடம் பற்றிய உங்களின் கருத்து என்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். தயை கூர்ந்து கூறுங்கள் ” என்றார்.

“ஐயா வணக்கம். எனது கருத்து இருக்கட்டும். வானியல் சாஸ்திரமான இதனை உலக மக்களுக்கு வழங்கிய மகானுபாவர்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனைக் கற்றுத் தேர்ந்து நிபுணத்துவம் பெற்ற அறிவுசால் சான்றோர் பெரு மக்களுக்கு எனது பணிவான வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என நமது சுவாமி கூறவும் மகிழ்ந்து போனார். தனது கருத்தை நாசூக்காகச் சொன்னதில் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஜோதிட நிபுணர் திரு. ஷண்முகம், “சுவாமி தங்களது குருநாதரிடம் இது பற்றி அறிந்து கொண்டுள்ளதைப் பற்றிக் கூற முடியுமா? “எனக் கேட்டார். இந்த உரையாடல் நடைபெற்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் கடந்து விட்டன.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button