நமது வாழ்வின் தேவைகள்!

133

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•10•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(104) மனிதனே புனிதன் —
நமது வாழ்வின் தேவைகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பூமியின் ஜீவர்கள் மீது அக்கரை கொண்ட முருகன், படைப்பின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்படுத்தும் நோக்கில், படைப்பின் ஆற்றல் செயல்பாடு இருக்க வேண்டும் என்ற அன்பின் காரணமாகவே வினாவை உண்டாக்கினார். பிரம்மசக்தி ஓங்காரத்தில் உள்ள நாதத்தைப் பற்றியே பதில் உரைத்தது. ஓங்காரத்தில் உறையும் ஒளித்தன்மையாகிய விந்து பற்றி எடுத்துக் கூறிடத் தயக்கம் காட்டியது.

விந்து, நாதம் அதன் சக்தி விகிதத்தில் ஏற்றத்தாழ்வில் தான் ஜீவனின், நிறம், குணம், தோற்றம் உண்டாகும். எல்லா உயிர்களும் பக்குவகாலத்தில் பயனடையும், பலனையும் அடைகின்றன. ஒளித்தன்மை என்பது ஆண் தத்துவம். இதில் சந்திர கலைகளுடன் (12அங்குல சுவாசம்), சூரிய கலைகள் (4அங்குல சுவாசம்) இணையும் போது 16 கலைகள் பூர்த்தியாகும். ஆணின் தத்துவம் எனப்படுகின்ற ஒளித் தன்மை இதில் விளங்கும்.

சில பாடபோதனைகளை நல்ல குரநாதர்கள் விளக்கம் கூறுவார்கள். நமக்கும் அதனைப் பெறும் தகுதி இருந்து விட்டால், உண்மையும், நம்பிக்கையும் நம்மிடம் இருக்கின்றதா என்பதை மிகச் சுலபமாகக் கண்டு பிடித்து விடுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள். ஏட்டுக் கல்வியைக் கொண்டு குருநாதர்களை வெற்றி பெற நினைத்தவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன விஷயங்களில் உலகத்தில் ஏராளமானோர். குருநாதர்கள் நமது தகுதி அறிந்து தேவையானதை அவர்களே நமக்கு உணர்த்தி விடுவார்கள்.

சந்திரனை மையப்படுத்தித்தான் நட்சத்திரங்களின் செயல்கள் நமது கண் களின் வழியே நான்கு கலைகள் செயல்படும் விதத்தை ஞானியர்கள் உணர்ந்திருந்தனர். இந்த நான்கு கலைகளையும், சூரிய கலை சக்தியுடன் சேர்ந்து அதுவும் பதினாறு கலைகளாக மாறும் வித்தையை அறிந்திருந்தனர்.

யோகியர்கள் தங்களது புருவ மத்தியில் தங்களது இரு கணகளின் பார்வையைக் செலுத்தி அமர்ந்து இருக்கும் காட்சிகளைக் கண்டிருப்பீர்கள். கண்களின் நான்கு சக்திகளை சூரிய கலைக்குச் செலுத்திக் பதினாறு கலைகளை உருவாக்குவார்கள். பிறகு சூரிய கலையில் சந்திரன் கலைகள் பன்னிரண்டையும் கொண்டு சூரியனில் சந்திரனை உதிக்கச் செய்து விடுவார்கள். இதற்கு சுவாச ஓட்டங்களைப் பிராணாயாமத்தால் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் . சிருஷ்டி ரகசியமான பூவுலக நாதங்கள் எனும் சப் தங்களை (பூமியில் ஏற்படும் எல்லா சப்தங்களும், விலங்குகள் ஓசை, பறவைகள் ஓசை, கடல் ஓசை, நதி ஓசை, நெருப்பு ஓசை, காற்று ஓசை, இயந்திர ஓசைகள், பூமியின் சுழற்சியின் ஓசை, அணுக்களின் அசைவு ஓசைகள், மலர்கள் மலரும் சப்தங்கள், ஆகாயத்தின் நுண் ஓசை, ஓம் எனும் பிரணவத்தின் வரிவடிவ ஓசை)– எல்லா ஓசைகளையும தன்னுள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் .

ஓசை மிகுந்தால் ஜீவன் நிலை பெறாது, ஒளி மிகுந்தால் காந்தம் மின்சாரமாகி ஜீவன் நிலை பெறாது. எல்லா உயிர்களும் பக்குவ காலத்தில் பலனையும், பயனையும் பெறுகின்றன. இதுவே சிருஷ்டியின் ரகசியம். அனுபவ ஞானமே சிறந்தது என்று நந்தியைக் காட்டி சுவாமி யுடன் தொடர்ந்து கோயிலுக்குள் வந்த மகாஞானி விளக்கம் கூறினார்கள். தாங்கள் பேசும் ஓசையையும் சுமார் பத்தடி தூரம் வரை செல்லும் போதே அதனை ஈர்த்து தன்னுள் மீண்டும் காந்தபுல சக்தியில் சேமித்துக் கொள்வார்கள். அதற்குப் பேசும் போது குறைந்த ஓசையில் பேச வேண்டும். மனதினுள் ஈஸ்வர ஜெபம் செய்யும் போது சற்று சப்தத்துடன் நாவசையாமல் ஜெபிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி விளக்கங்களைக் கூறிவிட்டு கடைசியில் ஒன்று கேட்டார். சுவாமி அதிர்ந்து போனார்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button