நமக்கு உதவும் அபிமானிகள்!

146

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•06•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(358) மனிதனே புனிதன் —
நமக்கு உதவும் அபிமானிகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பணிவுடன் கூடிய பிரார்த்தனை யினால், இறை சக்தியினால் அனுப்பப்பட்டு இருக்கும் தெய்வீக சக்திகளின் உதவிகள் கிடைக்கப் பெறலாம். அக உலகு, புற உலகு இவைகளை இயக்கு வதற்காகவே அநேக சக்திகளின் ஆற்றல்களை இறைவன் படைத்து, பிரபஞ்சங்களைக் காப்பது போல் அபிமானிஓம் தேவதைகளையும் காத்து வருகிறார். இறையருளால் இறை சக்தியை உணர்ந்து கொண்ட ஞானியர்கள் இந்த அபிமானி தேவதைகள், இறைவன் கட்டளைப்படி ஒவ்வொரு மனிதர்களையும், சகல ஜீவன்களையும் இயக்கி வருவதைக் கண்டு கொண்டனர். இறைவனின் கட்டளைப்படி உலகிற்கு வந்த இந்த தெய்வீக சக்திகள் நினைத்தால், மனிதர் களிடத்திலும், பிரபஞ்சத்திலும் நமக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்க முடியும் என்றும் அப்போது நமது முயற்சிகள் தடையின்றி நிறை வேறும் என்றும் ஞானியர்கள் இறையருளால் உறுதிபட அறிந்து கொண்டனர். இறைவன் இவ்வுலகில் முக்கியமாக சமுதாயச் சூழலை உருவாக்கி யுள்ளார். இயற்கை ,மலைகள், நதிகள், தாவர இனங்கள், ஊர்வன, உலவுவன, பறப்பன, மனிதன் என்றெல்லாம் காணப் படுகின்ற அனைத்துமே இறைவனது படைப்பின் சமுதாயத்தின் அங்கங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. இறைவன் படைத்த பிரபஞ்சத் தின் முழுப் பரிமாணங்களை அறிந்துணர வேண்டும் என்றால், இறைவனால் உண்டாக்கப்பட்ட சமுயாத்துடன் ஒன்றி இயைந்து வாழ்வது இன்றியமையாதது எனத் தெரிந்து கொண்டு வாழ வேண்டும். இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையை அழித்தால் அனைத்துமே அழிந்து விடும். அதனைப் புரிந்து கொண்டு இயற்கைச் சமுதாயத் துடன் அன்புடன் பேணி வாழ்ந்தால், சமுதாயமும் வாழும் நாமும் இவ்வுலகில் வாழ்ந்து வருவோம்.

சங்கல்பங்கள் மூலம் இறைவ னை வணங்கி இயற்கையுடன் இணைந்து வாழ முடியும். பிரபஞ்ச இயக்கத்தில் அதற்கு உண்டான ஒழுங்கு முறையை நியதி என்றே மகான்கள் கூறினர். அந்த ஒழுங்கு முறைக்கு அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. அதனை சத்தியம் எனறு கூறப்படுகிறது.@ இறைவன் பின்னின்று இயக்க, இயற்கையின் ஒட்டு மொத்த சக்திகளாகிய பிரபஞ்சம் இயங்கு கிறது. இறைவன் தர்ம சக்கரத் தைச் சுழற்றி இயக்கச் சத்தியம் இயங்குகிறது. இத்தகைய பேரறிவின் ஆற்றல் உடைய இறைவன் நம்மைக் காக்கவும் சங்கல்பம் செய்து கொள்வோம். இறைவன் தன்மை என்ன என்று கேட்டால் அது “கேட்பவருக்குக் கேட்டபடி தருவது” தான். “ஆண்டவன் என்னைப் பார்த்துக் கொள்வார்” எனச் சிந்திப்பவரைப் பார்த்துக் கொண்டிருப்பதுவும் இறைவன் செயலே. இதில் “சிந்திப்பது” என்று ஞானியர்கள் கூறியதைத் சிந்தித்தால அதன் உபாயம் நமக்கு நன்கு புலப்படும். தேவையற்ற பேச்சுக் களைப் பேசுபவனுக்குச் சிந்தனையின் அருமை, பெருமை புரியாது. உயர்ந்த லட்சியம் உடைய வாழ்வை விரும்புவோருக்கு, வீண் பேச்சு என்பது பெரிய தடையாகும். சாமான்யருக்குத் தேவையற்ற பேச்சுக்கள் என்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு, அசாதாரண மான தடை கல் என்பதை உணர வேண்டும். மனிதனின் ஆற்ற லின் பெரும்பகுதி பேச்சிலேயே செலவாகிறது என்பதுதான் உண்மை என சான்றோர் பெருமக்களின் கருத்தாகும்.

லட்சியவாதியினுடைய அகவாழ்வின் உன்னதத் தேவை
களுக்கு, வீண்பேச்சுக்களைச் செலவிடாமல் சேமித்தால், அதன் சக்தி ஆற்றலை நன்கு பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவே ஞானியர் அறிவுறுத்தி னர். அதன் பிறகு கொள்ள வேண்டியது சங்கல்பம். இது அனேகமாக சிந்தனையின் செல்வங்கள் என்றே பொருள் படும். சிந்தனை செய்வதென்பது, பிரபஞ்ச சிந்தனை, ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி சிந்தனை, ஞானக் கல்வியும் அதன் கருத்துக்கள் சிந்தனை, இல்லற வாழவில் பிரஜோ உற்பத்தி சிந்தனை, தனது உடலை ஆழ்ந்து அறிந்து கொள்ளும் சிந்தனை என இவை களின் உட்பொருள் விரிவடைந்து கொண்டே செல்கி றது. சிந்தனைகளில் மிகவும் கடினமானதும், குரு கடாட்சத் தால் அறிந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகிய ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் சிந்தனை மட்டுமே. இந்த சிந்தனைகள் பற்றிப் படித்தவுடனே பலன்கள் கிடைத்து விடும் என்பதல்ல கருத்து. முறையாகச் செயல்பட கற்றுக் கொண்டு தெரிந்த உண்மைகளை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரல் வேண்டும். பிறகு ஆழ்ந்து அவைகளைச் சிந்தனை செய்து பழக வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. மனம் தெளிவாகவும், லேசாக வும் இருக்கும். இப்படிப்பட்ட மனம் பிரார்த்தனைக்குத் தயாராகி விடும். பிரார்த்தனை யை உணர்வுடன் செய்தால், சரீரத்தில் நுண்ணிய ஆற்றல்கள் மிகவும் எளிதாக விழிப்படைந்து விடுவதால், நமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறி விடும் என்பது அனுபவ உண்மை களாகும். சற்குருநாதர் அநேக
செய்திகளை மனதில் பதிந்தார். மனிதன் உலகில் சாதனைகள் புரிய வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் சக்திகள் வேண்டும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button