நடராஜ சுவாமியின் அன்பு.

180

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•12•2016,’
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(178) மனிதனே புனிதன் —
நடராஜ சுவாமியின் அன்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.நடராஜ சுவாமியின் அன்பு அலாதியானது. சற்குருநாதரின் அநேக தெய்வீக ரகசியங்களைப் பற்றி அறிந்து கொண்டு விட்ட சிலர் அவரைத் தந்திரமாக அழைத்துச்சென்று, மாயமாக மறையும் வித்தையை, தங்கம் செய்யும் ரகசியத்தைக் கூறவேண்டும் என வற்புறுத்திச் சித்திரவதை செய்து இருக்கின்றார்கள். அதனால் எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இருக்கும் அவரைகண்டு பயந்து, மேலும் துன்பம் தரவே எண்ணி மிரட்டல் விடுத்து இருகின்றார்கள். அவர்கள் அவரை ஒரு அறையில் வைத்துப் பூட்டியதும், அந்த அறையையே உடைத்துக் கொண்டு வெளிவந்து இருக்கின்றார். பிறகு சற்குருவை திரு.நடராஜா வேலைக்குச் செல்லும் அலுவலகத்தின் முன்னே கீழே தள்ளிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆதியோடு அந்தமாக நடந்து முடிந்த செய்தியைத் திரு.நடராஜா சுவாமியிடம் கூறியிருக்கின்றார் சறுகுருநாதர். அவர் கூறிய மறாறொரு செய்தி அன்பும், இரக்க குணமும் உடைய திரு. நடராஜா சுவாமி அவர்களின் மனதைப் பிழிவதாக இருந்தது.

அது, தான் இனி ஜீவசமாதிக்குள் போவதாகவும்; தன்னை இனிமேல் நடராஜா வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என்றும்; கிரிவலப்பாதையில் அழகு நாச்சியப்பன் கோயில் எதிர்ப்புறமுள்ள மயில் மண்டபத்தில் தாங்கிக்கொள்ள விரும்புவதாகவும்; உடலை இடும்பன் மலை அடிவாரத்தில் சமாது வைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட வேண்டும் என்றும் உத்திரவைத் தமது பிரதமசீடர் தவத்திரு.நடராஜா சுவாமியிடம் பிறப்பித்தார். யார் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், தமது இஷ்ட தெய்வமாக தன்னுடைய மனக் கோயிலில் இதுவரை, பூஜித்து வந்த சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி தன்னை விட்டுப் பிரியப் போகிறார் என்ற மன வருத்தத்தில் வாய்விட்டுச் கதறி அழுதார். குழந்தையின் உள்ளம் கொண்ட அவரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அன்ன ஆகாரம் இல்லாமல் அவரது காலடியிலேயே விழுந்து கிடந்தார்.

தமது சீடப்பிள்ளையின் அன்பைக்கண்டு மனம் நெகிழ்ந்து, தலையை வருடிக் கொடுத்து, ” நடராஜா, ஏன் வருத்தம் உறுகிறாய்? நான் சமாதியில் இருந்தாலும் எல்லா அன்பர்களின் மனதினில் வாழ்ந்து கொண்டு இருப்பேன். எப்போது நீ அழைத்தாலும், உடனே உன்முன் வந்து நிற்பேன். புனிதமான இந்த உடலை நீசர்கள் தொட்டுக் துன்பப் படுத்தி விட்டார்கள். அதனால் என்னை சமாதுக்குள் வைத்தாயானால் மூன்று தினங்கள் எனக்கு வழிபாடுகள் நடத்து! மூன்றாவது தினம் மாலைப் பொழுதில் பழனி பால தண்டயுதபாணி திருக்கோயிலின் பூஜை மணி ஒலிக்கும். மணியின் ஓசை கேட்டதும், இந்த மணியின் மணியின் சமாதுவை நன்றாக மூடி விடு. நான் வானுலகு சென்று விட்டு மீண்டும் வந்து விடுவேன். உனக்கு ஆசிகள். பிறகு எனது சமாதுபீடத்தை நீயும் உனது பரம்பரைகளும் பூஜிக்க வேண்டும். சமாது ஆன தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிவர வேண்டும். பக்தர்களோடு நானும் உனது பூஜையில் கலந்து கொள்வேன். இனிக் கலங்காது இருப்பாயாக” என ஆறுதல் தேறுதல் கூறி சமாதானப் படுத்தினார். அதன்படியே தவத்திரு.நடராஜா சுவாமி நடந்து கொண்டு மிக விமரிசையாக, சற்குருநாதரைக் கண்ணீர் கரைபுரண்டு ஓட உயிருடன் சமாதுவினுள் அடக்கம் செய்வித்தார். அன்று பழனி மலை மீதிருந்து மணி ஓசை விடாது முழங்கியது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button