ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
18•11•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(141) மனிதனே புனிதன் —
நடப்பை முன்னறிவித்தல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதலாம் அறிவின் படைப்பினில் இருந்து கருணையும், கருணை என்னும் அறிவினில் இருந்து அன்பும், அன்பு என்னும் அறிவினில் இருந்து அழகும், அழகு என்ற அறிவினில் இருந்து தன் வளர்ப்பும், தன் வளர்ப்பு என்ற அறிவினுக்குள்ளேயே பிறிதொன்றை வளர்க்கும் அறிவும், அவ்வறிவினில் இருந்தே சகல செளபாக்கிய அறிவின் நிறைவும் ஏற்படுகின்றது. உலகினில் வாழும் உயிர் ஜீவன்களில் ஆறாம் அறிவின் நிறைவுத் தன்மையை குருநாதன் தனது சீடனுக்கு ஏற்படுத்துகின்றார்.
ஐந்தாம் அறிவின்படி தானும் ஈர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்டு, பிரிதொன்றையும் வளர்த்து வாழ வைக்கும் சக்தியினில் பொருந்தி இருப்பதால், சகல செளபாக்கிய நிறைவு என்னும் ஆறாம் அறிவின் முதிர்ச்சியில் பேரறிவு சித்திக்கும். மனம் நிறைவு பெற்று விட்டால் அதன் மேல் வளர்க்கும் தியானத்தால், எதனையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மெளனத்தால் சித்திக்கும்.”
“எதனையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் குருசிஷ்ய மனப்பான்மையில் ஏற்பட்டு விட வேண்டும். இதற்கு சீடனின் மீது குருநாதனுக்கு நம்பிக்கை உண்டாகும்படி சீடன் நடந்து கொள்வதால் மறைக்கப்பட்ட, மறந்துபோன அநேக உண்மைகளை குருநாதர் வெளிப்படுத்திக் காட்டிடுவார். குருசிஷ்ய இணக்கம் ஏற்படும் போது சீடனின் சகல கவலை களும், துன்பங்களும் குருநாதனிடம் வந்து சேரும். கவலை, துக்கங்களை விட்டொழித்தவனே உண்மையான சீடனாக மாற முடியும்” என்ற நீண்ட விளக்கத்தைப் புன்சிரிப்புடன் கூறினார்.
பிறகு, “புறப்படு மகனே, ராஜ விநாயகர் கோயில் போவோம். (பிரசண்ட விநாயகர்
கோயிலை ராஜ விநாயகர் கோயில் என்று தான் குறிப்பிடுவார்.) அங்கு வைத்து தம்பன வசியன் குடும்பத்தினர் எதிர்காலம் பற்றி விளக்குகிறேன்.” இருவரும் புறப்பட்டு வாசல் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டு ராஜ விநாயகர் கோயில் சென்றனர்.
ஸ்ரீ ஈஸ்வர குருநாதர் எப்படி வருகிறார்? எங்கு போகிறார்? என்பதெல்லாம் தெரியாது. பழனியில் அவரின் பிரதம சீடர் லைன் மேன் நடராஜா சுவாமி வீட்டில் தங்கி இருந்து இருக்கின்றார். தினமும் ஹோமங்கள் செய்து வந்திருக்கின்றார். பலருக்கு அநேக நன்மைகள் அவரால் நடந்திருக்கின்றது. இவர் ஒரு அதிசய மகாத்மா. சகலத்தையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் பொற்றவர். இறைசக்தியே இந்தப் புனிதமான மகாத்மாவின் வடிவெடுத்து வந்த ஸ்ரீ ஈஸ்வரர் உண்மையாளர். நமது நாகராஜ் சுவாமி அவர்களுக்கு எல்லா நேரமும் அவருடன் இரண்டறக் கலந்து வாழும் பாக்கியத்தை சற்குருநாதரே அருளியிருக்கின்றார். தனது வாழ்க்கையையே அவருக்காக அர்ப்பணித்து விட்டவர் நமது நாகராஜ் சுவாமி அவர்கள் என்றால் மிகையாகாது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி!வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.