தெய்வீக நிலை குருமார்கள்!

205

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•02•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(228) மனிதனே புனிதன் —
தெய்வீக நிலை குருமார்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஆதி குரு நாதனின் வாழ்வில் பங்கு பெற்ற, அவருடைய துணைவியாகிய குரு பத்தினியின் மனநிலை மிகவும் மாறி விட்டிருந்தது. தனது கடமையில் அவர் (ஆதி குரு) கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார். அதனை அவருடைய மனையாள் தவறுதலாகப் புரிந்து கொண்டு விட்டார். சீடர்களைத் தேர்வு செய்வதில் ஆதி குரு கண்ணும் கருத்துமாக, நம்பிக்கையுடன் பணி புரியும்படி இருந்தது. இல்லாவிடில் அவரை அனுப்பி, என்னென்ன காரியங்கள் நிறை வேற்றப் பட்டாக வேண்டுமோ, அதனை உறுதியாகச் செய்திடவும், செயல்படுவதில் திடமனது கொள்ள வேண்டும் என்பதிலும், சோதனைத் தேர்வில முதன்மை பெற்றும், இங்கு விஜயம் செய்தவர்; எங்கிருந்தோ அனுப்பப் பட்டவர்! எங்கிருந்து வந்தார் என்பது பிரபஞ்ச ரகசியமாகியது. அதனை உடன் இருந்து அறிந்து கொண்டவர்களும் ரகசியம் காத்தனர். விளக்கம் கேட்பவர்களுக்குப் பதில் ஆகாயத்தில் பார்வையைச் செலுத்தி ‘ஈஸ்வரா’ என்ற ஒற்றைச் சொல்லாக வெளியிட்டு வந்தனர். வாழ்க்கையில் ஏற்படும் அபூர்வ இயற்கை நிகழ்வுகளே, பின்னாட்களில் வரலாறு படைக்கப் காரணமாகிறது. உண்மையில் அதுதான் நடை முறையுமாகிறது ” என்று கூறிய பாட்டி நிதானித்தார்.

பிறகு ‘ஓம் ஸ்ரீ ஈஸ்வரா ‘ என்று ஜெபித்து விட்டுச் சொல்லத் துவங்கினார்.
“குரு பத்தினி செய்த செயல்களினால் குரு சாபமும், குரு சாப நிவிர்த்தியும் உலகினுக்குக் கிடைக்கப் பெற்றது நாம் செய்த பாக்கியம்” என்று இறைவனுக்கு நன்றி கூறினார்.
ஞானச்சுடராய் விளங்கிய பாட்டி திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் நமக்குக் கிடைக்கப் பெற்றதும் நாம் செய்த பாக்கியமே! பாரதியார் பாடிய ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றபடி கிராம மக்களிடம் அன்புடனும், ஆதரவுடனும் பேசுவதிலும், பொருள் உதவிகள் செய்வதிலும், சண்டை சச்சரவுகளை சமாதானப் படுத்துவதிலும், தவத்திலும், தெய்வீக உண்மைகளை அறிந்து அதனை வெளிப்படையாகப் பேசுவதிலும், அவருக்கு நிகர் அவரே! இது வெறும் புழ்ச்சியல்ல. நிதர்சனமான உண்மையுமாகும். இல்லையெனில் நமது சுவாமி அநேக தெய்வீக உண்மைகளை அறிந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்திருக்காது. இனி பாட்டி சொல்லிக்கொண்டு இருந்த ஆதி குரு நாதனின் சாப விமோசனம் பற்றி அறிந்து கொள்வோம்.

“ஆதி குரு நாதனும், அவருடன் வந்தவர்களும் இப்பூவுலகை மிகவும் நேசித்தனர். இங்குள்ள மக்களை நேசித்ததால் அவர்களுடைய சந்நிதிகள் அறிவு ஜீவிகளாகவும், சந்திர கலையின் ரகசியமாகிய பிரபஞ்ச
உண்மைகளையும், இயற்கையின் இயல்பினையும் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் சத்திய தர்ம நியாயங்களுடன் வாழ்ந்தார்கள். வருங்கால சந்நிதிகள் பேராசையின் பிடியில் சுயநல நோக்குடன் திகழ்வார்கள் என்று ஆதி குருவாகிய ஈஸ்வரர்
எண்ணிடவில்லை. எப்பொழுது நன்மைகள் ஆரம்பமாகிறதோ, அன்றே தீமையின் ஆதிக்கமும் ஆரம்பித்து விடுவதும் தவிர்க்க முடியாததே! பொறுமையும், மன்னிக்கும் குணமும் பெற்றவர்களே, வாழ்க்கை எனும் போராட்டத்தில் வெற்றியை ஈட்டுகிறார்கள்! அவர்களே மக்களுக்கு நல்வழி காட்டும் குருமார்களாக வெளிப்படுகின்றார்கள்! அவர்கள் தங்களைத் தாங்களே சோதனைக்கும், சாதனைக்கும் ஆட்படுத்திக் கொள்கிறார்கள்!” என்று கூறி சொல்வதை நிறுத்திவிட்டுத் தனது பேரன் முகத்தை ஊற்றுக் கவனித்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button