தெய்வீகத்தை விலக்காதே!

202

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•01•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(205) மனிதனே புனிதன் —
தெய்வீகத்தை விலக்காதே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவையற்ற எண்ணங்களுக்கு மனதில் நாம் இடம் கொடுத்து விட்டோமானால், அதனால் மனதின் தூய்மை விலகி விடும். பிறகு நமது உறுதிப் பொருளாக நம்மிடம் விளங்கி வந்த தெய்வீக சக்தியும் விலகி விடுவதால், மனதின் சுதந்திரம் பறிபோய் விடும்.
சரி, மனதில் தோன்றும் ஆசை கள் அத்தனையும் அடக்கி விடலாம் என்று எண்ணுவதே நம்மை நாமே கேடுறுத்தும் வழியாகும். சிலகாலம் அடங்கிய ஆசைகள் பிறகு வீறு கொண்டெழுந்து மனிதனை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்று விடும். மனதின் ஆசையைத் தூண்டுவதும் அல்லது அடக்கியாள நினைப்பதும் ஆகிய எண்ணங்களை வளர்ப்பது என்பது, பிறகு அவைகளை எதிர்த்து நிற்க இயலாமல் நாம் தோல்வியைத் தழுவ நேரிடும் செயல்களாகும்.

ஏ அறிவுடைய மனிதனே! புனிதனே! அறிவினுக்குப் பொருத்தமான இன்பங்கள் அனைத்துமே உயர்வுடைய இன்பங்களாகும். இன்னும் அது உண்மையான இன்பங்களுமாகும் என அறிந்து கொண்டு விடு! அறிவை உபயோகப் படுத்துகின்ற மனிதன், தனது மனதின் உறுதியுடன் மதிக்கத்தகாத வற்றை விலக்கிக் கொள்வான். மதிக்கத்தக்கதை மதித்துச் சிறிதும் ஆணவமின்றி, அடக்கம் உள்ளவனாகவும் நடந்து கொள்வான். எத்தகைய பொருளாகினும் மனிதனுடைய கெளரவத்திற்கு கேடு உண்டுபண்ணும் என்றால் அறிவுடையவன் அதனை விரும்ப மாட்டான். எது நன்மை தரும்? என்று யோசனையுடன் செயல்படும் மனிதனுக்கு அவனது ஆறறிவே சுகம் தரும்! நற்குணங்களே இன்பம் தரும்!

எந்த நேரமும் மோககுணத்துடன் அலையும் ஒருவனை தனது எண்ணத்திற்கு அடிமையாக்கினார் மாந்திரீகன். செல்வி.தேவானை தனது தெய்வீகப் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளிக் கொணர்வதே அவன் நோக்கமுமாகும் . சுடுகாட்டு நெறிஞ்சி முள் கூட மாந்திரீகனுக்கு உதவிட வில்லை. வார்த்தை ஜாலங்களும், போதை வஸ்த்துக்களும் மிகவும் உதவி செய்தன. பிறகென்ன காலை, மாலை இரண்டு வேளையும் இரு வாலிபர்களின் பரிகாசப் பேச்சுக்கு இலக்கான செல்வி. தேவானையினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. முள் புதைக்கப்பட்ட செல்வி. தேவானையின் வீட்டை யக்ஷன் நெருங்கிக் கொண்டிருந்தான். தினமும் வேதனை தரத்தக்க ஆபாச வார்த்தைளும், செயல்களும் தெய்வத்தின்பால் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டும், விளக்கு வழிபாட்டைத் துரத்தும் விட்ட, சங்கடமான உணர்வுகளைத் தாங்கிய மனநிலையும் போதுமே யக்ஷனுக்கு! வீட்டை யக்ஷன் வலம்வரத் துவங்கினான். கூலிவேலைக்கும் போகாமல் வீட்டினுள் அடைந்து கிடக்கும் செல்வி. தேவானையைப் பாட்டியினால் புரிந்து கொள்ள இயலவில்லை.

அந்த வாரமே பெண் கேட்டு துஷ்ட்ட வாலிபர்கள் போட்டா போட்டி இட்டனர். இதனால் துஷ்கர்ம மாந்திரீகன் கடுமையான கோபம் கொண்டான். பெண் கேட்டு வந்த வாலிபன் கண்ணன் நல்ல போதையில் இருந்தான். அவனைப் பெண் வீட்டார்க்குப் பிடிக்க வில்லை. செல்வி.தேவானை துக்கமுடன் வீட்டின் பின்புறம் உள்ள தொடியில்(தோட்டம்) உள்ள மாமரத்தில் அடியில் சென்று அழுதாள். யக்ஷன் அவள் முன்னால் பிரசன்னமானான். அவனைக் கண்டு பயந்து அலறிய அவளைத் தேடிக் கொண்டு எல்லோரும், வீட்டின் பின்புறம் தொடிக்குள் ஓடி வந்தனர். சிறிய சுழல் காற்றொன்று செல்வி. தேவானையைச் சுற்றிக் கொண்டிருந்ததை அனைவரும் கண்டனர். சட்டென்று காற்று மறைய அவள் தரையில் சுருண்டு வீழ்ந்தாள். மாவிலைச் சருகுகள் திடீரென கும்பலாகக் காற்றில் எழுந்து பெண் கேட்டு வந்த கண்ணன் முகத்தின் மீது பளார் என்ற அடியுடன் விழுந்தது. அவன் துடிதுடித்துப் போனான். வீடு திரும்பிய கண்ணனுக்கு அது வாழ்வில் கடைசி இரவாகவே முடிந்து போனது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button