ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•10•2016
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(97) மனிதனே புனிதன் —
துரத்தும் செந்நாய்கள் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி பயணம் போகும் முன் ஆற்றின் அக்கரையில் உள்ள பிரசண்ட விநாயகர் கோயிலின் (சிதிலமானது) உள்ளே தியானத்தில் அமர்ந்திருந்தார். கோயிலுக்குள் சற்குருநாதர் படுத்திருந்தார்.சுவாமி தியானம் நிறைவு செய்ததும் சற்குருநாதர் “நாகராஜா! வா மகனே” என்று அழைத்தார். அருகில் சென்று அமர்ந்ததும் அவர்,”இந்தக் கோவிலுக்கும் சாபநீக்கம் செய்ய வேண்டும். உன் மூலமாகவே அதனைச் செய்யச் செய்வேன்.”
“காசிலிங்கம் என்ற பெயருடைய அவன் கணக்கப்பிள்ளையாக இருப்பான். சாபநிவிர்த்திக்கு உன்னிடம் ஒரு கேள்வி கேட்பான். அது, ‘பழம் சுடுமா?’ என்பதாகும். உனக்கு அதைப்பற்றிக் கூறப்போகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிவிட்டு, மிகவும் தணிந்த, மெல்லிய குரலில் அந்தப் பாடத்தைப் போதனைப் படுத்தினார்.பிறகு புறப்படும் நாளைக் தெரிந்து கொண்டு, பயணம் பாதுகாப்பாக அமைய ஆசீர்வாதம் செய்தார். மகனே வடமாநிலத்திற்குச் செல்பவர்கள் எவ்விதத் தவறுகளும் செய்து விடாமல், ஆரோக்யத்துடன் திரும்ப வேண்டும். உனக்கு நல்ல தெயுவீக சக்திகளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பண்ணாரி, நஞ்சன்கூடு, மைசூர் அரண்மனைக்குள் உள்ள அம்மன் சக்தி, ஹளபேடு, சிக்மகளூர் அருகே உள்ள சித்தர்கள், மர்மகோவா, பம்பாய் மகாலக்ஷ்மி மந்திர் ஆகிய இடங்களில் உனக்கு ஆதரவு கிடைக்கும். எலிபெண்ட்டா குகைக்குள் உள்ள அமானுஷ்யங்கள் ஆபத்தானவர்கள் விலகிச் சென்று விடு! முக்கியமாக ‘எல்லோரா’ என்ற இடத்தில் உள்ள குகைக் கோயிலில் பிறருக்குப் புலப்படாமல் வாழும் அமானுஷ்ய சக்திகள் உனக்கு அருள் புரிவார்கள். திரும்பும் வழியில் ஒரு கடுமையான சோதனை காத்திருக்கும். எதற்கும் தயாராக இரு! என்னுள் வந்து ஜெபம் செய்திடக் கற்றுக் கொள்”என்று சொன்னார்.
நெற்றியில் கட்டைவிரலால் ஏதோ எழுதினார். அதனை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, நம்மால் விளக்கம் சொல்ல இயலாது! அவரது பாதத்தைத் தொட்டு வணங்க நமது சுவாமி அனுமதி கேட்டார். மறுத்து விட்டார்.அதற்குக் காரணம் கூறினார். “சுவாசகலை பற்றிப் பாடம் சொல்வேன். அப்போது ‘ஈஸ்வர பாதம்’ என்பதன் ரகசியத்தைச் சொல்ல வருவேன். அப்போது வணங்கலாம்” என்றார்.
“உசேனிடம் தாங்கள் சமாதியானவர் என்று கூறிவிட்டேன்.பிழை பொறுக்க வேண்டுகிறேன்”என்று சுவாமி தலைகுனிந்தார். உண்மையைக் கூறினாய், எதற்காக மன்னிப்புக் கேட்கிறாய்? சரி, புறப்படு. நல்லதே நடக்கும்” என ஆசியருளினார். எல்லா நேரங்களிலும் சற்குரு நாதரின் ஞாபகமாகவே நாகராஜன் சுவாமி வாழ்ந்தார்.
பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஒரு சமயம் முள்ளுக்குரும்பன் எனும் பெயர் கொண்ட வனமந்திரவாதி, அம்மனின் அக்கினி குண்டத்தில் இறங்கி யாரும் நேர்ச்சை செய்யாமல் இருக்கப் புலி, கரடியை ஏவிவிட்டான். சருகு மாரியம்மன் என்ற சக்தி அவைகளைப் புற்றாகவும், கல்லாகவும் மாற்றி விட்டதாம். யானைகள் தண்ணீர் குடிக்கக் கட்டப்பட்டுள்ள, நீர்த் தொட்டிக்கு அருகே, கோழி, ஆடுகளைப் பலி கொடுப்பார்கள். இதனுடைய ரத்தவாடைக்கு மிருகங்கள் நிச்சயமாக வரும்.
பேருந்து அதிகாலை நான்கு மணி அளவில் பண்ணாரி அம்மன் கோயிலின் வடக்குப் பக்கம் உள்ள மைசூர் சாலையில் நின்றிருந்தது. கோயில் தெற்கு திசை நோக்கிக் கோபுரத்துடன் இருக்கும். கையில் டார்ச்லைட்டுடன் சுவாமியின் மைத்துனர் சிதறு தேங்காயுடைக்க இறங்கவும், சுவாமியும், இன்னொருவரும் உடன் சென்றனர்.
அம்மன் கையில் வீணையுடன் இருக்க, இயற்க்கைக்கு மாறாக கர்ப்ப கிரகத்தினுள் வெளிச்சம் பல மடங்காகத் தெரிந்தது. இது ஒரு ஆச்சரியம். பேருந்தில் இருந்து திரு.பாலு அவர்கள் டார்ச்லைட் அடித்துப் பார்க்க இருளில் நிறைய சிறு கண்கள் மின்னுவது தெரியப் பலமாகச் சப்தம் கொடுத்தார். சுவாமியைப் பிடித்து இழுத்தபடி மூவரும் வேகமாகப் பேருந்தில் ஏறவும், செநாநாய்க் கூட்டங்கள் அருகே வந்து விடவும் மிகச் சரியாக இருந்தது! அது ஒரு அபூர்வ காட்சி. ஒரு செந்நாய் மூடப்படும் கதவின் மீது பாய்ந்தே விட்டது. கதவில் மோதித் தரையில் விழுந்து வலியால் குரல் கொடுத்தது.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.