தீமையை வெல்லும் உபாயம்!

225

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•04•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(304) மனிதனே புனிதன் —
தீமையை வெல்லும் உபாயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மானுடவாழ்வில் சாதாரண நிலையில் ஆத்மசக்தியை அறிந்திடாமல் இருப்பவர்கள், தங்களுக்குத் தீமைகளை விளைவிக்கும் யோகங்களை நல்லவையாக மாற்றிக் கொண்டிட ஞானியர் பரிகார வழிகளும் காட்டி இருக்கின்ற னர். தீமையை உண்டாக்கும்- அந்த யோகங்கள் பன்னிரெண்டு வகையாகும். அவைகள் :
1.காலாக்கிரக யோகம் மற்றும் அரசாங்கப் பகை,
2. எதனையும் உணர முடியாமல் செய்யும் “கோமா” என்னும் நித்திரை யோகம்,
3.அடிக்கடி அடிகள் பட்டு ரத்தக்காயம் உண்டாக்கும் யோகம்,
4. அமானுஷ்ய சக்திகள் தரும் தொல்லைகள்,
5. வாழ்வின் முன்னேற்றம் இன்றித் தாழ்வு நிலைகளே தரும் யோகம்,
6. கொலை பாதகத்தையும், கொடும் வியாதிகளையும் தரும் யோகம்,
7. ஆயுதங்களால் வரும் ஆபத்துக்களைத் தரும் யோகம்,
8.பாம்பு முதலிய விஷக்கடிகள் யோகம்,
9. அடிக்கடி ஆபத்துக்களையே உண்டாக்கும் யோகம்,
10. திசைப்பயண காலத்தில் இடையூறுகளைத் தரும் யோகம்,
11. மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் யோகம்,
12. பெரிய கண்டங்களைக் கொணரும் யோகம்.
ஆகிய இவைகள் தீமையான யோகங்களை உண்டாக்குவதால் இவைகளை நீக்கி நற்பலன்கள் உண்டாக்கும் வழிமுறைகளை ஞானியர்கள் குறிப்பிட்டனர். அதற்குப் பரிகாரங்கள் என்று பெயர். அதனைக் கூறுகின்றேன்.
நம்பிக்கையுடன் குருவருள் துணை கொண்டு கடைப் பிடித்து வருபவர்கள் நிச்சயம் மேன்மைகள் அடைந்து நீடு வாழ்வர்.

புனித நதிகளில் நீராடி அங்கிருந்து நீர் சேகரித்துக் கொள்ளவும். அப்படி வசதி வாய்ப்புகள் ஏற்படாதவர்கள் முக்கியமான ஆலயங்களில் அங்குள்ள கேணி அல்லது குளத்தில் நீர் தூய்மையுடன் இருந்தால் சேகரித்துக் கொள்ளலாம். அந்த வாய்ப்பும் அற்றவர்கள் உள்ளூர் கேணியில் நீர் சேகரித்துக் கொண்டு ஐந்து கலசங்கள் தயார் செய்து கொள்ளவும். கலசங்களுக்கு மறவாமல் நூல் சுற்ற வேண்டும். மாவிலைக் கொத்துடன் தேங்காய் கலசத்தில் மீது வைக்கவும். கலசங்களுக்கு முன்பு வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, களிமண் அல்லது புற்றுமண் இவைகளில் பிள்ளையார் பிடித்து வைக்கவும். பிள்ளையார் பிடிக்கப் பன்னீர் அல்லது வாசனை மலர்களால் ஊறவைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம். பிள்ளை யாருக்கு அறுகன் புல் வைக்கவும். அதைப் பிள்ளையார் மீது சொருகக் கூடாது. கலசங்களுக்கு அடியில் தர்பையை கிழக்கு மேற்காக வைக்கவும். ஒவ்வொரு கலசத்திற்கும் வில்வமாலையை அணிவிக்க வேண்டும். வசதியிருந்தால் கணபதி ஹோமம் செய்யலாம். அல்லது விபூதியின் மீது பச்சக் கற்பூரம் கொழுத்தி கணபதி மந்திரம் சொல்லவும். கணபதி பூஜை பற்றிய சிறிய புத்தகங்கள் கடைகளில் சுலபமாகக் கிடைக்கிறது. பூஜிப்பவர் தர்ப்யைப் பரப்பி அதன் மீது அமர்ந்து கொள்ளவும். வில்வதளங்கள் கொண்டு குரு மஹா மந்திர ஜெபத்துடன், கலசங்களுக்கு அர்ச்சிக்கலாம். மந்திர ஜெபம், “ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். ” உள்ளன்புடன் பூஜித்த பிறகு ஹாரத்தி செய்யவும். கலசநீரில் அந்தந்த கணபதியை இட்டு, வில்வம், அறுகு, தரப்பை சேர்த்துக் குளியல் செய்து கொள்ள வேண்டும். கர்ம காரியங்கள் நிகழ்த்தும் பிராமணர் யாருககேனும் அல்லது சந்நியாசிக்கேனும், வஸ்திரம், பச்சரிசி, காணிக்கை தானமாகக் கொடுத்து விடவும்.

இவ்வுலகில் தோன்றிய அனைத்தும் ஜீவனுடனே தான் விளங்குகின்றன. அந்த ஜீவனாக இருப்பது இறை சக்தி தான். நீரினுள் நெருப்பாக இருப்பது போன்றே அனைத்திலும் இறை சக்தியின் ஜீவ சொரூபம் மறைந்தே உறைகின்றது. மனிதனுக்குள்ளும் இறை சக்தி மறைந்து சுடர்கின்றது. அந்த அறிவாம் பரம்பொருளை அறிந்து கொள்ளும் ஆற்றலை நெறிப்படுத்தி, வழி வகைகளைக் காட்டியவர்களே ஞானியர்கள் என உலகம் கொண்டாடி நன்றி கூறுகின்றது. மனிதன் தன்னுடைய மரணத்தை வெல்ல வேண்டும் என்றால் தன்னுள்ளே மறைந்துறையும இறைசக்தியை் அறிந்து கொள்வதே ஒரே வழி. அவரைத் தொடர்பு கொள்ள குருவருள் துணை கொண்டு, இறைவனது ஜெபத்தைத் துவங்கி விட வேண்டும். காரணம் ஓசை ஒலியெலாம் ஆன அப்புனித சக்தியானது, ஜெபங்களுக்குள்ளும் கரந்து உறைவதே! எப்போதும் உள்ளத் தூய்மைப் பற்றியே சிந்திப்பவர் கள், எக் காலத்திலும் எதிலுமே உண்மையைக் காண்பவர்கள், எந்த வழிபாடுகள் செய்தாலும் அதனுள்ளே இறைசக்தியை அறிந்து கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு அக அமைதி யின் ஆற்றல் வெளிப் படும். அத்துடன் இறை ச க்தியின் அருளும் சேர்ந்திட, மரணத்தை வெற்றி கொள்ளும் ஞானஒளி மிளிரும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button