தீமைசக்தியின் எச்சரிக்கை!

201

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•11•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(153) மனிதனே புனிதன் —
தீமைசக்தியின் எச்சரிக்கை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியும் அவரது துணைவியாரும் ஒரு நல்ல முடிவைக் கைக்கொண்டார்கள். “இனிமேல் மறைந்து மறைந்து தியானத்தில் அமர்ந்திருக்க இனி அவசியம் கிடையாது. அதனால் தானே, புனிதமான தியானத்தைக் கடைப்பிடித்து, இறைவன் திருவடிநிழலை அடைய விடாமல் தீய சக்திகள் நம்மைத் துன்புறுத்துகின்றன; விடாமல் துரத்துகின்றன. இனி ஊரார் அறிய தியானத்தில் இருப்போம். எது வந்தாலும் ஏற்றுக் கொளவோம்” என்று வீட்டின் முகப்பில் எல்லோரும், சுவாமியின் குடும்பத்தினர் கவனிக்கும் இடத்தில் சூரியனைப் பார்த்து தியானம் செய்யத் துவங்கி விட்டனர். குழந்தையைப் பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் வசம் ஒப்படைத்து விட்டு, ஞானச்சுடர் பாடல்களை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

தாய்வழிப்பாட்டி பொன்னம்மா நாச்சியார் அவர்கள் தீவிர தியானத்தில் இருந்து வருபவர்கள். அவர்கள் மட்டுமே நமது சுவாமிக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தந்தை வழிப்பாட்டி நாச்சம்மாள் அவர்களையும் தீயசக்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது. நமது சுவாமி அவர்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு வருமாறு ஏவி விட்டது. அவர்களும் சரியாக சூரிய தியானம் செய்து, பாடல்களை ஈர்த்து எழுதிய உடனே, சுவாமி அவர்களைத் தனியே அழைத்துக் கடுமையாகப் பேசினார்கள்.

“நீ தவவாழ்வைக் கைவிட்டு விடு! சூரிய சக்தியின் பாடங்களைப் படித்து வருகிறாய். அது எனது பெரிய மகனின் குடும்பத்தினருக்குப் பிடிக்க வில்லை. நீ செய்யும் செயல் அவர்களுக்கு எதிரானதாகும்! உனது முயற்சியைக் கைவிடா விட்டால், தம்பனவசியன் சக்தி அடுத்த ஜென்மத்திலும் உனது குடும்பத்தைப் பழிதீர்க்காமல் ஓயாது. வேண்டாம்…விட்டு விடு உன்செயலை. நான் சொல்வதை நன்றாக யோசி” என வாதிட்டார். சுவாமி புன்னகை பூத்த முகத்துடன் ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். “இரு..இனி. உன்னை என்ன செய்யப் போகிறோம் என்று பார்த்துக் கொண்டிரு..” என்று கருவிவிட்டுப் போனார். அவர்தான் என்ன செய்வார்? ஏவியவர் சொல்படி நடக்கின்றவர் தானே! கடவுளே, தீய சக்தியினிடம் இருந்து உண்மை பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என மனம் உருக வேண்டிக்கொள்கிறேன்.

ஞானச்சுடர் பாடல்களைப் பொள்ளாச்சி தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்களிடம் காண்பிப்பதற்காக வீட்டைவிட்டுப் புறப்பட்ட போது, தவத்திரு.நாகராஜ் சுவாமி முன்பாக ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் நிர்வாணமாக ஓடிவந்து கொண்டிருந்தது. கரிய நிறமுடைய அந்தக் குழந்தையைக் காப்பாற்றச் சுவாமி ஓடினார். சுவாமி அக்குழந்தை அருகில் சென்று அதன் கையைப் பற்ற முயற்சித்தார். ஆனால் அக்குழந்தையோ சுவாமியின் கையைப் பலமாகக் பற்றிக் கொண்டது. சிரித்தபடி சுவாமியை இழுத்துக் கொண்டு ஓடியது. பிறகு சுவாமியைப் பாதையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்றது. சுவாமியிடம் சம்பந்தா சம்பந்தமின்றி உரையாடத் துவங்கியது.

“உன்னை விட்டுவிட மாட்டேன். எமது தீமை சக்திக்கு எதிர் சக்தியாய்ச் செயல்படும் உன்னை ஊர்ஊராகச் சுற்றவிடுவேன். உன்னை நான் பாடாய்படுத்துவேன். வேதாள ரகசியத்தைக் குப்தமன்னனிடம் தந்தாயல்லவா? என்னிடம் சேரவேண்டிய பொக்கிஷத்தைத் தடுத்த உன்னை அவமானப் படுத்துவேன். உடலைக் கேடுறுத்துவேன். இதுவரை உனது சற்குருநாதன் என்னிடம் இருந்து உன்னைக் காப்பாற்றியே வந்துள்ளான். இனியும் காப்பாற்றுவான். நீ துன்பப்படுவதுதான் எனக்கு ஆனந்தத்தைத் தரும்.ம்..போ” எனக் கூறி கீழே தள்ளியது. மிகவும் பலம் வாய்ந்தது அந்தக் குழந்தை!

உடனே சுவாமி அதனிடம், “எனது உடலை நீ சித்திரவதை செய்யமுடியும். காரணம் வினைக்கு ஈடானது. ஆனால் எனது உள்ளத்தை பகவானிடம் இருந்து பிரிக்கும் சக்தி உனக்கோ உனது பரம்பரைக்கோ கிடையாது. ஆண்டவன் பெயரால் ஆணை! ஏ மாறனே! உனக்கும் நாசம் விளைவிக்க ஆண்டவன் முடிவு செய்தாலும் செய்யலாம்! உனது வழியில் எந்த நன்மையை எப்படிச் செய்ய உத்தேசிப்பாய்? துன்பத்தை ரசிப்பவனுக்கு இறை இன்பம் தெரியாது. நீ ஓடுபவன், ஓடு ஓடிக் கொண்டே இரு. நீ என்னிடம் இப்படிப் பேசியதற்கு அதோ சூரியனே சாட்சி” என்றதும், தெற்கு திசையில் ஓடிப் போனான். அவன் பிடித்த பிடியில் கையில் வலி அதிக நாட்கள் இருந்தது. பிறகு ஜெபத்தில் படிப்படியாகக் குறைந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button