ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
13•01•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(197) மனிதனே புனிதன் —
திரு. மணி கூறிய செய்தி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவரது கண்களை ஏறிட்டுப் பார்த்தார். கண்கள் பச்சை நிறமாக இருந்தது. சுவாமி மிகவும் ஜாக்கிரதையாகப் பேச ஆரம்பித்தார். சுருக்கமாகப் போய் வருகிறோம் என்றபடி மெல்லப் புறப்பட்டு விட்டார். இந்தப் பச்சைக்கண்கள் பற்றிய விஷயத்தை நமது நாகராஜ் சுவாமி அவர்களுடன் சதுரகிரி வனத்தில் தங்கியிருந்த அனுபவங்களைப் பற்றிப் பிறகு படிக்க வேண்டியது ஏற்படும். இப்போது பச்சைக் கண்கள் உடைய ஒரு நபரிடம் அவரைப் பற்றிப் புரிந்து கொண்டு விலகிச் செல்ல ஏனோ விரும்புகிறார். அதையும், அதன் காரணங்களையும் பற்றிப் பிறகு கூறி விடுவார்.
திரு.மணி அவர்களுடன் ஓடையில் இறங்கி அக்கரையில் இருந்த பெரிய மரத்தினடியில் சுவாமி அமர்ந்து கொண்டார். கடுக்காய், ஜாதிக்காய் மரங்கள் ஏராளமாக இருந்தன. திரு.மணி அவர்கள் தனது தகப்பனார் பாம்புக்கடியில் இருந்து தப்பி யும், சைக்கிள் விபத்தில் அகப்பட்டு இருப்பது வருத்தமாக இருப்பதாகச்சொலல வந்தார். இனி திரு.மணி அவர்கள் நமது சுவாமியிடம் கூறியவற்றைத் தொகுத்துப் பார்ப்போம். சுவாமி வீட்டில் பலசரக்குக்கடைப் பொறுப்பைப் பழனி, ராசாபுரம் அருகில் இருக்கும் கரிக்காரன்புதூரைச் சேர்ந்த, காளிமுத்து, கணேசன், முருகன் ஆகியோரிடம் , சுவாமியின் தகப்பனார் ஒப்படைத்திருந்தார். அவர்கள் தங்களுக்கு உதவியாகத் தங்களை ஒத்த வயதுடைய காஜாமைதீன் என்பவரை ஒத்தாசை செய்வதற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தனர். காளிமுத்து வுக்கும், கணேசனுக்கும் ஐயப்பன் பஜனை என்றால் உயிர். சுவாமி பாடல்கள் பாடும் போது சேர்ந்து பாடுவார்கள்.
இருமுடிக்கட்டு நிறைவைப் பார்த்து விட்டுவரப் பொள்ளாச்சி ஐயப்பன் கோயிலுக்குச் சைக்கிளில், காஜாமைதீனும், காளிமுத்துவும் மாலை 06 மணிக்குப் புறப்பட்டுச் சென்றனர். கடையைத் தனது தம்பிகள் கணேசனும், முருகனும் பொறுப்பில் விட்டுச் சென்று விட்டனர். சுவாமி மற்றும் திரு.சிங்கத்தேவரும் சாயங்காலம் பூஜைகளை நிறைவு செய்து கொண்டு பேருந்தில் சென்றனர். கட்டு நிறைவு முடிந்து ஐயப்ப சுவாமிகளை வழியனுப்ப இரவு மணி10 ஆகி விட்டது. நமது சுவாமியையும், தேவரையும் பேருந்தில் அனுப்பிவிட்டுப் போகலாம் என கடைசிப் பேருந்துக்காக எல்லோரும் காத்திருந்தனர். இரவு மணி10•45 ஆகி விட்டது. காளிமுத்து, “சரி, சுவாமி அவர்கள் நடந்து வந்து சேரட்டும். நீங்க வாங்க ஐயா, எங்களுடன் சைக்கிளில் போகலாம் ” எனக் கூறியதும், சந்தோஷம் அடைந்த திரு.சிங்கத்தேவர் நமது சுவாமி அவர்களைப் பார்த்துப் பெருங்குரலில், “சாமியே சரணம் ஐயப்பா” என்று கூக்குரல் இட்டபடியே அவர்களுடன் போனார்.
அவர்கள் சென்ற பிறகு இரவு 11•15 மணிக்குக் கோவையில் இருந்து சேத்துமடை செல்லும் பேருந்து காலதாமதமாக வந்து சேர்ந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சுவாமி பேருந்தினுள் ஏறிக் கொண்டார். ஜமீன் ஊத்துக்குளி நிறுத்தத்துடன் கூட்டம் பேருந்தில் குறைந்து விட்டது. சுவாமி வண்டியில் முன்புறமாக அமர்ந்து கொண்டு சென்றவருக்குக் குஞ்சிபாளையம், சாலைப்புதூர் தாண்டி ,பெரிய இறக்கம் கொண்ட பாதையில் பகவதி அம்மன் கோயில் அருகே வண்டிப்பட்டறை முன்பு, பேருந்து வெளிச்சத்தில் ஓர் அரிய காட்சி தென்பட்டது. சைக்கிள் இரண்டு துண்டுகளாக உடைந்து, ஒரு பகுதி காஜாமைதீன் தலையிலும், மற்றோரு பகுதி காளிமுத்து தலையிலும் இருந்தது. காளிமுத்து, காஜாமைதீன் இருவரது தோள்களில் தனது கைகளால் பற்றிய படி, நடக்க முடியாமல் நொண்டியபடியே நடந்து கொண்டு, வசவு வார்த்தைகளால் சப்தம் போட்டபடியே திரு.சிங்கத்தேவர் சென்று கொண்டிருந்தார். அவரது இடுப்பில் துண்டு ஒன்றைச் சுற்றித் துண்டை ஆளுக்கு ஒரு கைகளால் பிடித்து இழுத்துக் கொண்டும், கால்களை நொண்டிக் கொண்டும் மூவரும் வந்து கொண்டிருந்தனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.