ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•06•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(344) மனிதனே புனிதன் —
திருமூர்த்தி மலை காவல் தெய்வம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் கூறிவரும் வரலாற்றை ஆவலுடன் அனைவரும் செவிமடுத்தனர். “இன்று திரி மூர்த்திகள் வழிபாடு திருமூர்த்தி மலையில் சிறப்பாக நடை பெற்று வருகிறது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற திரிமூர்த்திகள் ஸ்ரீ தத்தாத்ரேயா் என்ற வடிவில் தான் இங்கு அருள் கொடுத்துக் கொண்டிக்கி றார்கள். ஸ்ரீ அத்திரி மகரிஷியின் ரிஷிபத்தினி சக்தியாகிய அனுசூயா தேவியின் பதிபக்தி யை, சோதனை செய்த தோஷத்தை நீக்கிக் கொண்டிட, முத்தேவர்களும் தேர்ந்தெடுத்த இடம்தான் திருமூர்த்தி மலை! ருத்திரன் சடையாண்டி மலை யாகவும், பிரம்மதேவர் குரு மலை வடிவிலும், மகாவிஷ்ணு திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பக்தர்கள் வழிபட்டு வரும் விதமாக நீண்ட திலக வடிவம் உடைய பெரும் பாறையின் வடிவத்தில் தவம் புரிய இடம் தேர்வு செய்து கொண்டார்கள். அனுசூயா தேவியின் கற்பை சோதனை செய்ய எண்ணிய தோஷத்தைத் தீர்க்கவே, ஸ்ரீ வாணி தேவி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ துர்காதேவி ஆகிய திரிதேவியர்கள் சக்தியை ஒன்று சேர்ந்து, சொர்ணவிக்ரக வடிவ மான மூன்று தலைகளும், எட்டுக் கரங்களும் உடைய சொர்ண மாயா திரிதேவியைக் காவல் தெய்வமாகப் படைத் தார்கள. அவளே எருமை வாகனத்தில் அமர்ந்து தர்மதேவதையான காலனைப் போல் திருமூர்த்தி மலையைக் காபந்து செய்து வருகிறாள் ” என்றார். சற்குருநாதர் இத்தேவி யைத் தரிசனம் செய்திருக்கின் றார். பஞ்சலிங்கத்திற்கு மேலே உயரே சென்றால், சொர்ணமாயா தேவி யாகிய திரிதேவியின் இருப்பி டம் உள்ளது.
மலைப்பாறை கொண்டு மறைக்கப்பட்ட மாயா குகை என்று சற்குரு நாதர் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமியிடம் கூறியுள்ளார். இந்த சொர்ண மாயா தேவியின் தரிசனத்தை பாவானியில் நமது சுவாமி தங்கியிருந்த போது அழைத்து வந்து காட்டியும் இருக்கிறார். அது தனித்தன்மை வாய்ந்த வரலாறு ஆகும். மேலும் சற்குரு நாதர், “ஓ துறவியே, ஞான வள்ளல் பெருமான் முருகன், ஒளவையின் புலமையால் வந்த செருக்கினை அடக்கிடச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாப் பழம் வேண்டுமா? என்றொரு கேள்வி யினைக் கேட்டார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம், தென் மதுரை யின் வட பால் உள்ள அழகர் மலையின் மீதுள்ள, ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலையில் தான். அந்த நாவல் மரத்தை இன்று வரையிலும் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற பக்தர்களைப் பக்திப்பரவசத்தில் அது ஆழ்த்திக் கொண்டிருக்கி றது. அந்த ரகசியம் ஞான வள்ளல் முருகப்பெருமானால், திரிமூர்த்திகளும் தவம் புரிந்து கொண்டிருக்கும், திருமூர்த்தி மலையில் பாதுகாக்கப்பட்டுள் ளது. இந்த மலைக்குத் தவறான நோக்கத்துடன் வருபவர்கள் சொர்ணமாயா தேவியின் சாபத்துக்கு ஆளாகி அநேக நன்மைகளை இழந்து விடுகின்ற னர். இக்கலியின் காலத்தில் இங்கு வரும் பக்தர்கள் புனிதம் மிக்க இவ்விடத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
திருமூர்த்தி மலையில் செவி வழியாக உலவி வரும் செய்திகள் அநேகம் உண்டு. அதில் ஒன்று, முன்னொரு காலத்தில் பாளைய வரிவசூல் செய்த பணம், அரசு கஜானா வுக்குக் கொண்டு செல்ல ராஜ பாட்டையில் பொதி காளைகளில் பாரம் ஏற்றிக் கொண்டு காவல படையுடன் வந்தனர். தளி என்னும் ஊரில் இரவு தங்கி யிருந்த போது காவலர்கள் கண் ணயர்ந்த நேரம் பார்த்து கள்வர் களால் பாரம் ஏற்றப்பட்ட சில பொதிகாளை கள் திருமூர்த்தி மலையை நோக்கிக் கொண்டு செல்லப் பட்டன. குருமலை யைத் தாண்டியதும் எதிர்ப்பட்ட கரடிகுகைக் குள் கொண்டு சென்று மறைத்து வைக்கப் பட்டன. ஆட்களும், காளைகளும் வனவிலங்குகளால் கொல்லப் பட்டனராம். வன வாசிகள் சொர்ணமாயா தேவி தான் விலங்குகளை ஏவி குற்றம் புரிந்தவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கி விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டு இந்தப் புதையலைத் தேடிச் சென்றவர்கள் இதுவரை யாரும் திரும்பவே இல்லையாம். செல்வக் களஞ்சியத்தைத் தேடித் திரிபவர்களும் இன்றும் உண்டாம்! இந்த செய்தியை குளிர் காய்ந்து கொண்டிருந்த வனவாசி மூப்பன் பயம் கலந்த குரலில் கூறினார். அதனைக் கேட்டுத் துறவி, “இம்மாதிரி நம்ப முடியாத கதைகள் நம்பும்படிக் கூறுவோர் நிறைய உண்டு. அதை நீங்களும் பார்த்தீர்களா? என்று கேட்டால், ஏதோ சொல்லக் கேள்வி என்று நழுவி விடுவோரும் உண்டு. அப்படிப் பட்ட புதையல் உண்மையில் இருந்தால் ஆராய்ச்சியாளர்கள் இன்னுமா விட்டு வைப்பார்கள் ? வானில் உலாவும் விஞ்ஞானக் கருவிகள் சுலபமாக காட்டிக் கொடுத்து விடாதா? இந்தப் புனித இடத்தில் நிலையான ஆத்ம செல்வத்தைத் தேடுவதில் அல்லவா செலவிட வேண்டும். நிலையற்ற செல்வத்தால் யாது பயன்?” என்று சற்று உணர்வுப் பூர்வமாகப் பேசி விட்டார். அப்போது சற்குரு நாதரின் கட கட வென்று இடிக் குரலில் மிகவும் சப்தமாகக் சிரித்தார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.