தியானத்தின் வலிமை!

167

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•12•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(169) மனிதனே புனிதன் —
தியானத்தின் வலிமை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாகராஜன் சுவாமி அவர்கள் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்த பிறகு மனதில் ஒரு அமைதி ஏற்பட்டிருந்தது. இறைவன் மீது உள்ள நம்பிக்கை மேலும் வலிமை கொண்டதாக எண்ண உணர்வு எந்த நேரத்திலும் இருந்து கொண்டே இருந்தது. இனம் புரியாத ஓர் காந்தபுலத்திற்குள் தான் இருந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். தன்னுள் அமைதி மிக்க உயர் நுண்காந்த காந்த சக்தி தன்னுள் இருந்த வெறுமையான இடங்கள் அனைத்திலும் நிரம்பி உடலில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டும், உள் நுழைந்து கொண்டும், தியானத்தில் பல வண்ண ஒளிப்பாதைகள் இறைவன் அருளால் உணர்த்தப் பட்டும் வந்ததை, நன்கு உணரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்தப் பாதைகள் இறைவனை நோக்கி அழைத்துச் சென்று விடுகிறது. தூய்மை மிக்க உயர்வு நிலை பெற்ற ஆத்மாவாக, இறைவனுக்கு உகந்த ஆத்மாவாகத் தங்களை ஆக்கிக்கொள்ள இயலும். இறைவனது உணர்வில், அவனருளால் தங்களை உயர்த்திக் கொண்டு, முக்தி நிலையை அடைய சகல தகுதி களையும், பெற்றிடலாம். ஆன்மபலத் தகுதி பெற்றவர்கள் செல்லும் பாதைகள் அவைகள் எனப் புலப்படத் துவங்கியது.
இறையருளால் சுவாமி அவர்களுக்குக் காட்டப்பட்டது. மதங்களெல்லாம் கொண்டாடி மகிழும் புனிதர்கள் இறைவனை நோக்கிச் சென்ற பரிசுத்தமான வழிகள் அவைகள். மனித சமுதாயத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்களாகிய அவர்கள் இந்த உலகத்தில் இறைவனைத் தாய், தந்தையாக, குருவாக தவத்தினால் அறிந்து கொண்டு, எத்தனை இன்னல்கள் வந்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

துன்பங்களில் இருந்து மனிதன் விடுபட தன்னை அறிந்து கொண்டு, இறைசக்தியை உணர்ந்து அதன்வழியே தன்னை ஈடுபடுத்திக் கொண்டும், இடைவிடாது இறை சிந்தனையில் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், போதனை செய்த உத்தமர்கள் சென்றடைந்த இறைவன் பாதையில் தோன்றும் வண்ணங்கள், மேலும் அவர்களைப் புனிதப்படுத்த, இறைசக்தியினால் வழங்கப்பட்ட கொடைகளே அவை!

தூய வெண்மை நிறமாகத் துவங்கி செல்லச்செல்ல நீலவண்ணமாக அது துலங்குகிறது. பிறகு அதன் வண்ணம் மஞ்சள் நிறத்தில் காட்சி தந்து, அந்த புலத்தைக் கடந்ததும் பச்சைநிறமாக வெளிப்பட்ட சிறிது தொலைவில் செந்நிறத்தில் அது பிரகசிக்கின்றது. பேரின்பம் துவங்கும் இப் புனித இடங்களை, இறைவன் துணையுடன் கடந்து சென்றவர்களின் ஆத்மா, உயிரின் ஆற்றல் சக்திகளையெல்லாம் தன்னுடன் கொண்டு சென்று விடுகின்றது. சகல உணர்வு ஆற்றல்களை இறைசக்தியின் வசம் ஒப்புவிக்க நல்ல நெறிகளின் வழிகள் என்று வண்ணங்களால் காட்டப்படும், மிகவும் நுண்ணிய பாதை களின் வழியே பயணம் நடைபெற்று இறுதி நிலை எய்துகின்றார்கள். அன்றுதான் ஆன்ம விடுதலை என்கின்ற மகா புனிதத்தைப் பெற்று அதற்கும் அப்பால் சென்று விடுகின்றார்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button