தவயோகினிக்கு வந்த சோதனைகள்!

199

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•05•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(324) மனிதனே புனிதன் —
தவயோகினிக்கு வந்த சோதனைகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறை சக்தி உண்மையான பக்தர் களுக்குத்தான் தனது சோதனை யைக் காண்பித்து, அவர்களின் உண்மை தெய்வீக குணத்தை இவ்வுலகினுக்குப் புலப்படுத்தி, அனுக்கிரஹித்து ஆட்கொள்கி றது. தானதர்மம் செய்வதில் சிறந்த அக்குடும்பத்தினர் சோதனைக்கு ஆளாகினர். ஒரு நாள் பகல் பொழுதில் பெரிய மோட்டார் காரில் சில சாமியார் கள் வெளிகேட்டைத் திறந்து கொண்டு உள் நுழைந்தனர். ஆண் பிள்ளைகள் தொழில் நிமித்தம் பகற் பொழுதில் சென்று விடுவது வழக்கம். உடலை காவி வேட்டியினால் போர்த்தியபடி வந்தனர். ஆடம்பரமாக கழுத்தில் தங்கிய உத்திராட்சங்கள், கங்ஙணம், கடகம் எனப் பணக்கார சாமிகளாகத் தென்பட்டனர். வீட்டின் பெரிய திண்ணையில் கனமான பித்தளை கேட்டினால் மூடிப் பூட்டிக் கொண்டு வீட்டுப் பெண்கள் பாதுகாப்புடன் பணிகள் செய்து கொண்டிருந்தனர். சாமிகளைப் பார்த்த சந்தோஷத் தில், பூட்டைத் திறக்கச் சாவியை பூட்டினுள் செலுத்தியும் விட்டார் தவயோகினி அம்மாள். அப்போது ஒரு சாமியாரின் போர்த்திய வேட்டி காற்றினால் விலகிவிட, இடுப்பில் பெரிய கத்தி ஒன்று சொருகப்பட்டு இருந்ததைக் கண்டு கொண்டார்.

சாவி சேராது மாதிரிப் பேசிக் கொண்டே பின்னால் மெதுவாகப் போனார். “சாவியைக் கொடுங்கள் நாங்களே திறந்து கொள்கிறோம் ” என்றார்கள். மேலும் இரண்டடி பின்னால் சென்ற தவயோகினி அம்மாள், “வந்தது மிகுந்த சந்தோஷம். என்ன காரியமாக வந்திருக்கின் றீர்கள்?” எனக் கேட்டபடி பாதுகாப்பு எல்லைக்குள் நின்று கொண்டார். ” கதவைத் திறங்கள் உள்ளே வந்து விபரம் சொல்கி றோம் ” என்று கூறினார். ” வீட்டு ஆண்கள் வெளியே சென்று இருக்கிறார்கள். பிறகு வாருங்கள் ” என்றதும், வந்ததே கோபம் சாமியார்கள் வேஷத்தில் வந்த கயவர்களுக்கு. “சன்னியாசிகள் சாபத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் சப்தம், கிப்தம் போடாமல் வந்து கதவைத் திறவுங்கள். எங்களுக்குக் கணிசமான தொகையைத் தந்து விட்டால், போய் விடுவோம். என்ன சொல்கிறீர்கள்? ” என்று மிரட்டிப் பார்த்தார்கள். பெண்கள் வீட்டின் உள்கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டார்கள். நமது சுவாமி அவர்கள் மறுநாள் அங்கு சென்று தவயோகினியைப் பார்த்து விட்டு வரலாம் என்று போனால், நிகழ்வைக் கூறி வியந்தார்கள். “சாமியாருக்கு எதுக்குப் பட்டாக்கத்தி?” என அங்கலாய்த் தார்கள். ” ஏனம்மா , அவர்களுக் கும் உலகில் பாதுகாப்பு வேண்டாமா?” என்று சுவாமி அவர்கள் கூறியதும் எல்லோரும் சிரித்து விட்டனர்.

“என்னப்பா ஈஸ்வர! இந்தக் காலத்தில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரியவில்லையே!” என்று கூறி அதிசயப்பட்டார் தவயோகினி அம்மாள். ஓரிரு மாதங்கள் மெல்ல நகர்ந்தது. ஒரு நாள் அமாவாசையன்று இரவு எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது. உஷாரான தவயோகினி அம்மாள் வீட்டு வாசல் பகுதியில் ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்டதுமே, மெல்ல ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்வையைக் செலுத்தியவர் அதிர்ந்துதான் போனார். வெளியில் திண்ணை யில் போடப்பட்டிருந்த பித்தளை கேட்டின் பெரிய பூட்டைக் கடப்பாரை கொண்டு ஒருவன் உடைத்துக் கொண்டிருந்தான். சப்தம் இரவில் வீதி எங்கும் கேட்டது. எதிர்ப்புறம் மற்றும் அருகில் இருந்த வீடுகளில் இருந்த ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, மக்கள் பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். உதவ யாரும் முன்வரவில்லை.
“யாரப்பா நீ? ஏனப்பா எங்க வீட்டுக் கதவை ஒடைக்கிறே? உங்களுக்கு என்னதாப்ப வேணும்?” என்று கேட்டார் தவயோகினி. ” அம்மா நீங்களே வந்து கதவைத் தெறந்தீங்கணா, உங்கள ஒண்ணும் செய்ய மாட்டேன். மாறுதலா அடம் புடிச்சா தீர்த்துக் கட்டீருவேன்” என வசனம் பேசினான். பூட்டை உடைத்துத் திண்ணையில் நின்று கொண்டு மரக்கதவின் நச்சுப் பகுதியில் கடப்பாரை யினால் நெம்பினான். கதவும் தாளின் மரைகள் ஒவ்வொன்றாகக் கழன்று கீழே விழ ஆரம்பித்தன.

ஒருவன் மாடிக்குச் சென்று அங்கு கதவை வெளிப்புறமாகத் தாழிட்டு வந்தான். மருமகள்கள் வலையிட்ட ஜன்னல் கதவு களைத் திறந்து, “உதவி, உதவி” எனக்கத்திக் கதறினார்கள். காவல் துறைக்கு போன் செய்தாலோ, இணைப்பைத் துண்டித்து விட்டார்கள். கதவின் அணிகள் கழன்று விடுவதைப் பார்த்ததும் பயம் வந்து விட்டது. திருடர்கள் கையில் உள்ள கடப்பாரையைக் கண்டுவிட்டு மேலும் பீதியில் நடுங்கினர். குழந்தைகள் அனைவரும் எழுந்து கொண்டு கூப்பாடு போடத் துவங்கி விட்டனர். தவயோகினி திருமதி. சுந்தரம்மா அவர்கள் எல்லோருக்குமே தைரியம் சொல்லி ஜெபம் செய்யச் சொல்லி விட்டு, கதவை ஒட்டிப் பெரிய சோபாக்ளைப் போடச் செய்து அதன் மீது அனைவரும் அமர்ந்து கொண்டனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button