தவசாபமும், வாரிசு துன்பமும்.

262

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•04•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(301) மனிதனே புனிதன் —
தவசாபமும், வாரிசு துன்பமும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கார்த்திகை நட்சத்திரம் பற்றி நமது விஞ்ஞான அறிவியல் கொண்டு தெளிவாக அறிந்து கொண்டோம். நமது பண்டைய ஞானியர்கள் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய தெய்வீக உண்மைகளையும் கூறிச் சென்றார்கள்.அவர்கள் கர்ண பரம்பரையாக அறிந்து கொண்டதைப் பற்றிய தொகுப்பு பற்றி அறிந்து கொள்வோம். ஆறு நெருப்புக் கொழுந்துகள் ஜூவாலையுடன், கொழுந்து விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டு இருப்பதைப் போன்று கார்த்திகை நட்சத்திரம் காணப்படுகிறது. இதன் அமைப்பு சுருள் போன்றும் ஒழுங்கற்ற வடிவமாகவும் தோன்றுகிறது. அசுரன் சூரபத்மன் தவம் செய்து, இறையருள் பெற்று, 1008 அண்டங்களை ஆட்சி புரிவதற்கு, அவன் சென்று வரும் அண்ட வெளிப் பாதை கார்த்திகை நட்சத்திரம் பாதையாக உள்ளது. இறைவனின் பஞ்சாட்சர அக்கினியுடன் அதோமுக அக்கினியும் சேர்த்து உருவானதே சடாட்சரம் என்ற ஆறுமுகர். அக்கினிக்கும், முருகருக்கும் கார்த்திகை நட்சத்திரம் தொடர்புடையது. முருகர் ஜெனன காலத்தில் அண்டவெளியில் பிரளயம் போன்ற வெடிப்பு உண்டாகி ஆறு ஜோதிச்சுடர் உருவானதாக காலத்தின் ரகசியம் அறிந்து கொண்ட ஞானியர்கள் கூற்றாகும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து, இரண்டு வகையான முக்கிய சக்தி கள் வெளிபட்டுக் கொண்டே உள்ளது.
பன்னிரெண்டு ஆதித்ய சக்திகளை ஒன்றாக வெளிப் படுத்திக் கொண்டே அருள் தரும் சூரிய சக்தி ஒன்று எனவும், மற்றொன்று ராகுவுடன் கூடிய சனி சக்தி என்றும் இரண்டு வகையாக நெருப்பின் வடிவாய் வெளிப் படுத்திக் கொண்டே உள்ளது. இந்தப் பன்னிரெண்டு சூரியர்களையும் “ஓம்” என்ற நாதத்தில் இருந்து தான் இறைசக்தி உருவாக்கியது.
முருகரின் சரஹணபவ சடாட்சர மந்திரம் அறுகோண சக்கரத்தி னுள் வரையப்படுகிறது. இந்த அறுகோண சக்கரம் சனி மண்டலத்திற்கு உரியது. இதுவும் முருகர் வசத்தில்! 12 ஆதித்தியர்களின் சக்திகளும், சனி, ராகு தாக்குதலுகளில் இருநுது காக்கவே கரங்களாக விளங்குகின்றன. முன்னதாகக் குறிப்பிட்ட கலசநீரில் குளிப்போர்க்கு இந்த இன்னல்கள் உண்டாகாது. தவிர கார்த்திகை நட்சத்திரக் குரு கடாட்சம் பெற்றுவிட்டவர்கள் சொல்வதெல்லாம் பலிதமாகும். ஆனால் முக்கியமான விஷயம் ஒன்றை நமது சுவாமி கூறினார். ஸ்ரீ” கார்த்திகை நட்சத்திர சக்தியில் குருவருள் பெறுவோர், அதே கார்த்திகை நட்சத்திரத் தன்று மற்றவர்களுக்குத் சாபம் இட்டால், அன்றிரவே சென்று சாபம் அவர்களைப் பற்றிக் கொள்ளும். இந்த குருவின் சக்தி பெற்றவர்கள் பிறரைக் சபித்தார்களானால், சபித்தவர் களுக்கு வாரிசு அற்றுப் போகும்” என்று சுவாமி கூறியவற்றில் என் நினைவில் பதிந்து விட்டதை மட்டுமே கூறினேன்.

சுவாமி அவர்கள் இன்னும் ஏராளமான நட்சத்திரப் பரிகாரம் சற்குரு நாதரிடம் இருந்து உபதேசமாக அறிந்து வைத்துள் ளார். செய்திகள் குரு கடாட்சத்தால் அவருக்குக் கிடைத்துக் கொண்டே இருப்பது கண்கூடு. ஒரு நாள் சுவாமி அவர்கள் எங்களிடம் பேசும் போது, “என்னை நன்றாக ஆன்மிகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் என்னைத் தொடர்பு கொள்வது கடினம் ” என்றார்கள். அதுபோலவே என்னால் சுவாமி அவர்களை மூன்றரை வருட காலம் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அது சமயம் எனக்கு ஏற்பட்ட துன்பங்கள், அவமானங்கள் ஏராளம். நான் முதன் முதலாக சபரிமலை யாத்திரை செல்ல மாலை அணிந்து விரதமி ருந்தேன். பின் இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்லும் நாள் வந்தது. எனக்குள் பெரிய ஏக்கம். சுவாமி அவர்களைச் சந்தித்து அவரின் ஆசி பெற்று, சபரிமலை செல்ல இயலவில்லையே என்று மனதில் ஏங்கிக் கொண்டு, வீட்டில் இருந்து வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். அப்போது …..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button