தற்கொலை தீர்வாகாது!

251

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•05•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(320) மனிதனே புனிதன் —
தற்கொலை தீர்வாகாது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பணம் படைத்தவனோ, குணத்தால் சிறந்தவனோ, வறுமையில் உழல்பவனோ, இன்பத்தில் திழைப்பவனோ, துன்பத்தில் நலிபவனோ அல்லது நல்லவனோ, கெட்டவனோ யாவருக்கும் நன்மை, தீமைகள் பாகுபாடின்றி சமமாகவே உலகில் நடந்து கொண்டிருக்கின் றன. உண்மையாகவே இன்பமும், துன்பமும் உலகில் இருந்தால் அதனை ஏன் இறை சக்தி தடுக்கக் கூடாது? என்ற கேள்வி காலம் காலமாய் கேட்கப்பட்டே வருகிறது. மற்றும் நல்லவனுக்கு நன்மை அல்லவா நடக்க வேண்டும்? கெட்டவனுக்குக் கெடுதல் அல்லவா சம்பவிக்க வேண்டும்? இறைவன் அவ்வாறு ஏன் செய்யக்கூடாது என்று மனித மனம் எண்ணுகிறது! உண்மை யில் இறைவன் மனிதனுக்கு, அறிவையும், வாழும் சுதந்திரத் தையும் தந்து விட்டு, கட்டாயமாகக் கடைப்பிடித்து உலகில் வாழ வேண்டி அநேக நல்ல வழிகளையும் தந்து விட்ட பிறகு இந்தக் கேள்விகள் அவசியம் அற்றதாக மாறி விட்டது! நன்மை, தீமைகளை ஆண்டவன் தந்த சுதந்திரத்தால் அவனே உண்டாக்கிக் கொள்கி றான். இறைவன் தந்த போதனை களாகிய வேதங்களை முறையாக வாழ்வில் கடைப் பிடித்து, அறிவுடன் வாழ்பவ னுக்கு நன்மையும், தீமையும் ஒன்றே! — ஸ்ரீ ஈஸ்வர நீதி.

நாம் இதனை ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறிக் கேட்ட செய்தி தான். இங்கு தற்கொலை செய்து கொண்ட ஓர் ஆன்மாவைப் பற்றிய தகவல் வருவதால் ஞாபகப்படுத்த விழைந்தோம் .மனித சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்வது என்பது ஓர் விதி வசமே! உலகத்தின் பொருட்கள் அனைத்துமே அதி விரைவில் தோன்றியதைப் போலவே மறைந்ததும் விடும் என்பதையே ” மரணம்” என்ற நிகழ்வில் மூலம் இயற்கை தன் இயல்பின் வழியே உணர்த்திக் கொண்டே உள்ளது. மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அறிவின் வழியே சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகப் பொருட்கள், மனித உடல், எல்லாமே ஓர் நாள், சமய சந்தர்ப் பத்திற்குத் தகுந்த படி அழிந்து போகின்றன. அல்லது இயற்கை சக்தியுடன் கலந்து விடுகின்றன. நன்கு பழகிய மனிதனின் நினைவு கூடக் காலப் போக்கில் மறைந்து போவதுடன், அவனைப் பற்றிய நினைவுகள் கொஞ்ச நாட்களிலேயே இல்லாமலும் போகின்றது. உலகாதய விஷயங்களைப் பற்றி சித்தர்கள் கூறுகின்ற உண்மை யின் பொருள் தான் என்ன? சில விஷயங்கள் நமக்கு சுகத்தைத் தருகின்றன. பிறகு அவையே நம்மை ஏமாற்றி அதன் பிடியில் அகப்படச் செய்து, ஆசை வலையில் இழுத்து வீழ்ந்துபடச் செய்கின்றன. பல விஷயங்கள் நமக்குத் துன்பம் தருவதைப் போல் பயப்படச் செய்து கொண்டே இருக்கின்றன. அனேக காரியங்களில் மனிதன் அகங்காரம், ஆணவத்தை அடைவதைப் போன்று வாழ்கின்றான். இவைகள் அனைத்தும் பயனற்றவை என்றும், அற்பத்தனமானவை என்றும், இழிவான நிலையை உடையவன என்றும், தவெர உலகில் இவைகள் நிலையற்ற வை என்பதும் சித்தர்கள் வாக்கு!

மரணம் என்பது உலகில் இயல்பான ஒரு விஷயம் தான். மனிதன் இதனைக் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. இறப்பு என்பது உலக இயல்பில் புத்துயிர்கள் உண்டாவதற்கான நல்ல வழியாக இயற்கை படைத்திருக்கின்றது. அறிவை அறிவால் அறிவதே அறிவுடை யோர் அறிவாகும். அறிவு போற்றுதலுக்கு உரியது. காரணம் அது இறைவன் கொடையாகும். நமது பயணம் முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இறங்கிச் செல்லத்தான் வேண்டும். மரணமும் அப்படியே! — ஸ்ரீ ஈஸ்வர நீதி.
அன்றைய தினம் தம்பனவசியன் வீட்டிற்கு மேற்குப் பக்கம் குடி இருந்தவர்கள் பதற்றத்துடன் வடக்கு திசை நோக்கி ஓடினார் கள். அங்குள்ள பெரிய கிணற்றி னுள், பல காலம் வயிற்று நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த, வீரப்பத்தேவர்
அவர்கள் இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்று நீரினுள், குப்புறப் படுத்தபடி மிதந்து கொண்டிருந்தார்.தீராத வயிற்று நோவுக்கும் ஒரு முடிவு காலத்தை ஏற்படுத்திக் கொண்டார். தனது வீட்டின் பெரும் பகுதி இடத்தை தம்பன வசியன் குடும்பத்தினர், ஆக்ரமிப்புச் செய்துவிடப் போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஒருவேளை தற்கொலை செய்யும் எண்ணம் வராமலும் போயிருக்கலாம். அராஜகமும் ஒரு சமயத்தில் முடிவுக்கு வருவதுண்டு. வந்தே விட்டது!
கடுமையான சாபத்தைத் தந்து விட்ட அருளாடி திருமதி. காளியம்மாள் அவர்களின் கணவர் விறகுவெட்டி வாழ்ந்து வந்த திரு.தங்கவேல் அவர்களும் அகாலமரணம் அடைந்து விட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் வாழ்வின் ஆரம்ப நிலைக்கே சென்று விட்டனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button