தஞ்சை மகாமேருக் கோயிலின் புதிர்

254

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•08•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(398) மனிதனே புனிதன் —
தஞ்சை மகாமேருக் கோயிலின் புதிர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது நாகராஜன் சுவாமி அவர்கள் ஜோதிட நிபுணரிடம், “ஐயா, எமது குருநாதர் இருபத்திஏழு நட்சத்திரங்கள் பற்றியும், அதற்குண்டான பரிகாரங்கள் பற்றியும் பேசியிருக்கின்றார். இவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாம். நாகதோஷம், பித்ரு தோஷம், அக்னி தோஷம், குலதெய்வ சாபம், குரு தோஷம், சண்டிகேஸ்வர சாபம், வேதியர் சாபம், சன்னியாசி சாபம், கன்னிமார் சாபம், தெய்வ நிந்தனை சாபம், ஆலயத்தில் பெற்று வந்த சாபம், சந்திர தோஷம், பக்ஷிதோஷம், மிருக தோஷம், பெற்ற குழந்தை களுக்குப் பெற்றோர் இட்ட சாபம், திருமணத் தடை, தாரமங்கள தோஷம், காலஸர்ப தோஷம், காந்தாரி சாபம், பிரம்மஹத்தி என இன்ன பிற தோஷங்கள், சாபங்கள் மற்றும் நவகிரக முக்கிய பரிகாரங்கள் பற்றியும் கூறியிருக்கிறார் “எனப் பதில் உரைத்தார்.

அதற்கு அந்த ஜோதிடநிபுணர், “சுவாமி பொறுத்து அருளவேண்டும். நீங்கள் கூறிய அனைத்துப் பரிகாரங்களையும் ஜோதிட சாஸ்த்திர அனுபவ வாயிலாகவும், தெய்வ நம்பிக்கையின் வாயிலாகவும், ஆலயங்களுக்கு அனுப்பியும் நாங்கள் நிறைவேற்றி வைக்கின்றோம். வெற்றியும் பெற்றிருக்கிறோம். இவை யெல்லாம் நடைமுறை உண்மையாகும். வேறென்ன கூறப்போகின்றீர்கள்? சுவாமி” எனக் கேட்டார். “சூரியனையும், சந்திரனையும் தனித்தனியே மையப்படுத்தி, நட்சத்திரங்கள், நவகோள் களுடன் வான சாஸ்த்திரக் கலைகளை, இறையருளுடன் கூடி பூமியில் மகா ஞானியர்கள் போதித்து இருக்கின்றார்கள். இவைகள் இன்று வரையிலும் நடை முறைப் படுத்தப்பட்டு வருகிறது. அறிவின் மகா சமுத்திரமான ஜோதிடக் கலையைத் தனது அறிவின் ஆற்றலினாலும், மனத்தெளிவுடன் கூடிய தனது திறமையினாலும், மகா விற்பன்னர்கள் ஆராய்ந்து கூறிய பரிகாரங்கள், நற்பலனை உலகில் அள்ளி வழங்கியுள்ளன.”

” ஐயா, அவைகள் எல்லாம் நமக்கு முழுமையாகக் கிடைத்து விட்டது என்று கூறிவிட முடியுமா? அநேக உண்மைகள் மறைக்கப்பட்ட காரணங்கள் நமக்குத் தெரியவர வில்லை. ஸ்ரீ ஆஞ்சநேயர் ‘ராமகாவியம்’ என்ற நாமப்படுத்தி ஸ்ரீராம சரிதையை எழுதி இருப்பதாக எனது சற்குரு நாதர் கூறியிருக்கின்றார். அந்த ராமகாவிய ஓலைச்சுவடியில் அநேக பரிகாரங்களைத் தெய்வங்கள் எனப் போற்றப் படுபவர்கள் செய்து நற் பலன்களை அடைந்து சக்திகள் பெற்றார்களாம்! அந்த ஏடு ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரில், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள தனது சமாதியினுள் பாதுகாத்து வருகின்றாராம்! அதனைப் பற்றி சற்குரு நாதர் விளக்கமாகக் கூறி யுள்ளார். வரும் காலத்தில் அதன் தெய்வீக ரகசியங்கள் வெளிப்படலாம் அல்லவா? அது போன்றே சற்குரு நாதரும் வாழ்வின் வளத்திற்கும், சுபத்திற்கும், நன்மை தரும் வளத்திற்கும் அநேக பரிகாரங் களைக் கூறியிருந்தார். அவை களைக் குரு ஈஸ்வராலயத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அத்துடன் ஜோதிடர் ஐயா அவர்கள் என்னைக் காண வந்ததன் நோக்கம் என்ன? என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். தாங்கள் ஏதாவது பருக வேண்டும் ” எனக் கனிவுடன் மோர் கொடுத்து உபசரித்தார்கள். ஜோதிட நிபுணர் அகம் மகிழ்வது முகத்தில் தெரிந்தது. ஜோதிட நிபுணர் திரு.ஷண்முகம் அவர்கள், “சுவாமி நான் ஜவுளி வியாபாரி. தஞ்சை புன்னை நல்லூர் முத்துமாரியம்மன் பக்தன். அங்கு கோயிலுக்குச் சென்றிருந்த போது ஒரு துறவியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரே என்னைச் சந்தித்து ஒரு உதவியை நாடினார். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குப் பின்புறத்தில் கருவூரார் சந்நிதானம் உள்ளது. அந்த இடத்தில் தான் சாபமும், எதிர் சாபமும் நடை பெற்றது என்றார்.”

துறவியின் கம்பீரத்தோற்றம் என் மனதில் ஒரு ராஜரிஷி போல் தோற்றம் உண்டு பன்னியது. அதற்கு அவர், “நீங்கள் எண்ணுவது சரிதான் ” என்றார். எனக்கு வியப்புத் தாளவில்லை. என் மனதில் எண்ணுவதைக் கூறுபவர் யாராக இருக்க முடியும்? என நினைத்தேன். மீண்டும் அவர், “அப்பா நான் யார் என்ற ஆராய்ச்சி போதும். நீ மகாமேரு ஆலயம் சென்று கருவூரார் சன்னிதியில் தியானம் செய்து பார். உனக்கு விடை கிடைக்கும். எனக்கும் வழி பிறக்கும் ” எனப் புதிர்போல் பேசினார். எனக்கு அவரது பேச்சு ஓர் அமானுஷ்யத் தின் குரலாக நின்று மனதில் ஒலித்தது. “அதுவும் உண்மை” எனச் சிரித்தபடி கூறினார். அவரிடத்தில் எனது மனம் லயமாக ஆரம்பித்தது. அவரிடம் “அப்படியே ஆகட்டும் ” என்று கூறிவிட்டேன். வானசாஸ்த்திர அறிவைக் கொண்டு வாழ்வின் பலாபலன்களை நம்பிக்கை யுடன் கணித்திடும், ஜோதிடக் கலையில் சிறுவயது முதற் கொண்ட எனது அறிவு தாகம், அதனைக் கற்கக்கற்க அதிகப்பட்டதே தவிரக் குறைய வில்லை. தஞ்சையின் பழங்கால நூலகம் எனது அறிவுப் பசியைப் போக்க உதவியது.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button