ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
16•03•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(259) மனிதனே புனிதன் —
ஞாபகம் வருதே! நன்றி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“வாழ்க்கையில் நல்லதையே செய்து கொண்டு எவருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலும், சந்தர்ப்ப வசத்தால் எதிர்பாராது பயந்து விடுகிறோம். அச்சமயம் பய உணர்வலைகள் நம் உணலில் சேர்ந்து விடுகின்றன. நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்து அவருக்கு ஏற்பட்ட கஷ்ட்ட, நஷ்டங்களை, வேதனையுடன் நம்மிடம் கூறுகிறார். அதனைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அவர் வேதனையுடன் சொன்ன உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து, நம்மையும் வேதனைப் படச்செய்து விடுகின்றன. இவ்வாறு நாம் தவறு செய்யாமலேயே, நம் வாழ்க்கையில் பல துன்பங்கள், பலவித வேதனை உணர்வலைகள், நம்மை அறியாது சூழ்ந்து கொண்டு, மன அமைதி குலைந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய துன்பம் உணர்வலைகளைப் போக்கவே, ஞானிகள் அன்று ஆலயங்களை அமைக்க உதவினார்கள்.”
“ஆகவே ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு துன்பங்களையும், வேதனைகளையும் சொல்லி முறையிடாதீர்கள். நம்மை அறியாது முறையிடுவதனால் அந்தத் துன்பம் உணர்வலைகள் , அங்கு வரும் அனைவருக்கும் துன்பத்தைக் கொடுத்து விடும். ஆகவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும், இங்குள்ள தெய்வத்தின் ஞானங்களைப் பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி வேண்டிக் கொள்ளவும்” என ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் இக்கருத்தை தமது நூலில் பதிந்திருக்கிறார் . இந்நூல் பெரியார் மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டியில், மாமகரிஷி ஈஸ்வரா குரு தேவர் தபோவனத்தில் இருந்து பின்னாளில் 1987- ஆம் வருடம், மே மாதம் முதல் பதிப்பாக வெளியாகியது. அந்த நூலின் பெயர் “உயிரே கடவுள்” என்பதாகும். ஞானகுரு தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்கள், பவானி தியான சங்கத்தை விட்டு வெளியேறித் தனக்கெனத் தனியே ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டார். அது அவருடைய சொந்தக் கருத்தே தவிர, யாரும் கட்டாயப்படுத்த வில்லை. தியான சங்கத்தை விட்டு யாரும் வெளியேற்றவும் இல்லை. இனி சோமனூர் அன்பர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம்.
“ஞானகுருவின் அறைக்குள் சென்று தியானம் செய்து பாருங்கள். அங்குதான் நாங்கள் அதிகமாகக் கூட்டு தியானம் செய்து வருகிறோம்” என்ற கருத்தைக் கூறியவர், சாக்ஷாத் தவத்திருமதி.B.ராஜம்மாள் பால சுப்பிரமணியம் அவர்கள் ஆவார். சேலம், குமாரபாளையம், தொழில் அதிபரும், பவானி தியான சங்கத்தைச் தோற்று வித்தவரும், ஞானயோகியுமான தவத்திரு.S.S.M.சுப்பிரமணியம் அவர்களுடைய மூத்த குமாரத்தியும் ஆவார். தியான அறைக்குள் சென்றவர்கள் அமைதியாக தியானத்தில் அமர்ந்து கொண்டனர். எவ்வளவு நேரம் இருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது. திரு.பாஸ்கரனுடைய அண்ணன் திரு.கணேசன் அவர்கள், எல்லோரும் தியானம் செய்து விட்டு ஞானகுருவின் அறையை விட்டுக் கீழே வந்தனர். வந்தவர் களுடன் தவத்திருமதி.B. ராஜம்மாள் அவர்கள் மேட்டூர் போகும் சாலையில், ஊராட்சிக் கோட்டையில் நாங்கள் “மகரிஷிகள் சர்வோதயம்” என்ற பெயரில் தியான ஆ ஸ்ரமம் அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு பிரதிமாதம் பொளர்ணமியில் கூட்டு தியானம் நடை பெறுகிறது. எல்லோரும் வரவேண்டும் ” என்று அன்புடன் அழைப்பு விடுத்தார். பிறகு அவர், “உங்களுடன் மனநிலை பாதிக்கப் பட்டு வந்தவர் எங்கே?” எனக் கேட்டுள்ளார். ” அவர் தியானத்தில் இருந்து இன்னமும் எழுந்து வரவில்லை! ” என ஆச்சரியமாகக் கூறினர். அப்போது சிரித்தபடியே மிகவும் சுமூகமாக மாடிப்படியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார் திரு.கணேசன் அவர்கள். அவரைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியத்தால் பிரமித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.