ஞானகுரு தபோவனம் தொடங்குதல்.

290

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•05•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(323) மனிதனே புனிதன் —
ஞானகுரு தபோவனம் தொடங்குதல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானகுரு அவர்கள் பவானி தியான சங்கத்தில் இருந்த போது அவரை நமது சுவாமி சந்தித்து அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். தியான சங்கத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தியானம் செய்து கொண்டு இருப்பவர்கள் தங்களின் அனுபவப் பாடங்களைத் தலைமை அகத்திற்கு தந்து உதவும்படி அதில் கண்டிருந்தது. நமது சுவாமி அவர்களுக்கும் அநேக ஞானப் பாடங்கள் சற்குரு நாதர் அவர்களால் பயிற்று விக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று தான் “ஞானச்சுடர்” நான்கு வரிப் பாடல்கள். அதனை மதித்து முதலில் சுமார் நூறு பாடல்களை மட்டும் கொண்டு செல்ல இசைவு கொண்டார். பிள்ளைகள் இருவரையும் மற்றும் துணைவியார் அவர்களையும், சோமனூரில் பிறந்தகம் வீட்டில் ஒப்படைத்து விட்டு பவானி புறப்பட்டுப் போனார். பவானி செளண்டம் மன் கோயில் வீதியில் ஆத்ம யோகி திரு.R.பாலசுப்பிரமணி யம் அவர்கள் இல்லத்தில் இயங்கி வந்த, சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கத்திற்குப் போனார். மாடியில் ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமிகள் தங்கி யிருந்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு நேர் எதிரில் குளியல் அறை இருந்தது.

நமது நாகராஜன் சுவாமி அவர்களை மிகுந்த உற்சாகத்து டன் வர வேற்ற ஞானகுரு அவர்கள் அமரச் செய்து, தியானம், ஞானப் பாடங்கள் பற்றி அக்கறையுடன் கேட்டறிந்து கொண்டார். ஒரு சிறிய தூக்குப் பாத்திரத்தைத் திறந்து அதில் இருந்து லட்டு ஒன்றை எடுத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். நமது சுவாமி அவர்கள் சாப்பிடுவதைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சுவாமி கொண்டு சென்றிருந்த ஞானச் சுடர் பாடல்களைப் பொறுமை யுடன் படித்து, “ஆஹா..ஆஹா..” என வியப்பெய்தினார். ஆனந்தம் கொண்டார். “இதற்கு விளக்கம் தெரியுமா? “எனக் கேட்டதற்கு நமது சுவாமியும் “ஓரளவிற்கு ” என ஒற்றைச் சொல்லால் பதில் கூறினார்.

“இந்த அற்புதமான ஞானப் பாடல் களஞ்சியம் சங்கத்தின் வாயிலாக உலகினுக்குத் தரவேண்டியது மிகவும் அவசியம். சங்கத்தில் கொடுத்து அவர்களின் ஆலோசனையைக் கேட்போம்” எனக் கூறியவர், “சற்றே பொறுங்கள் இதோ வருகிறேன்” எனக்கூறிவிட்டுக் குளியல் அறைக்குள் சென்றார். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண்மணி ஞானகுருவின் அறைக்குள் மெல்ல வந்தார். ஞானகுரு வெளியூர் செல்லும் போது அணிந்து கொள்ளும் ஜிப்பா அங்கே வைக்கப்பட்டிருந் தது. ஜிப்பாவின் ஜோபிக்குள் கையை விட்டுப் பேருந்துப் பிரயாண டிக்கெட்டுகளை எடுத்து, ஞானகுரு சென்று வந்த ஊர்ப் பெயர்களைப் படித்து விட்டுத் திரும்பவும், அவைகளைச் ஜோபியினுள் வைத்து விட்டு, சட்டென விரைந்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார். இது நமது சுவாமிக்கு வியப்பை ஏற்படுத்தி யது. ஞானகுரு வந்த பிறகு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். ஆத்மயோகி திரு.R.பாலசுப்பிரமணியம் அவர்களிடம், “ஞானச்சுடர்” பாடல்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தை ஒப்படைத்து விட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டார். சோமனூருக்குச் சென்று தியான நண்பர்களைச் சந்தித்தார். சூரியநாராயணனாகிய மஹா சக்தி தந்தருளிய ஞானச்சுடர் பாடத்தின் விளக்கம் புரியாதத னாலோ என்னவோ பல வருடங்களுக்குப் பிறகு அது சுவாமிக்கே திரும்பக் கிடைத்து விட்டது. அது திரும்பக் கிடைத்து விட்டதால் அதனைப் பொக்கிஷ மாகப் பாதுகாக்க சற்குரு நாதரின் உத்தரவு பிறந்தது. நமது சுவாமி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

ஞானகுரு அவர்கள் தபோவனம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் அவருக்கு ஆதரவு இருந்தது. கூலித் தொழிலாளிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை அவருக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தனர். தலைமைச் சங்கத்திற்குத் தகவல் எதுவும் கிடைக்காதபடி, சங்கத்தின் கணக்குப் பிள்ளை பார்த்துக் கொண்டார். தவத்திரு. வேணு கோபால சுவாமி இன்னும் சங்கச் சுற்றுப் பிரயாணத்திலே யே இருந்து வந்தார். பொள்ளாச்சி தவயோகினி திருமதி. சுந்தரம்மா அவர்கள் ஞானகுரு அவர்களுக் குப் பொள்ளாச்சி வருகை தர விஷேச அழைப்பு அனுப்பினார். அவருக்கென காணிக்கைகள் வருடத்திற்கு ஒருமுறை பெரிய தொகையாகக் கொடுத்து உதவி செய்வார்கள். ஞானகுரு, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் புதிய உடுப்புகள் தரம் வாய்ந்த பட்டுப் புடவைகள் அனைத்தும் தந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். கண்களில் நீர் மல்க ஞானகுரு அவர்கள் மிகுந்த தயக்கத்துடன் பெற்றுக் கொள்வார். ஞானகுரு குழந்தைகளுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் இருந்தால் அவர்கள் எப்படித் தான் வாழ்க்கை நடத்துவார்கள்? மகாலிங்கபுரத்து தவயோகினி அம்மாள் மனதில் இரக்க குணம் இயல்பாகவே பெற்றவர். குறிப்ப றிந்து உதவிகள் செய்வதில் அவருக்கு நிகர் அவரே!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button