ஜென்ம பாவங்களை நீக்க!

240

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•09•2016,
திங்கட்கிழமை, ,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(72) மனிதனே புனிதன் —
ஜென்ம பாவங்களை நீக்க!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தெய்வீகம் கூறும் உண்மைகள், ஜெபம் என்பது வாயினால் உச்சரிக்காமல், மனதினால் அமைதியாக ஜெபிப்பதாகும். இதற்கு என்று சங்கல்பம் உண்டு. “ஜெபிக்கும் ஜெபம் எப்பொழுதும் காப்பாற்றியே தீரும்” என்பதாகும். நாக்கு, உதடுகள் அசையாமல் ஜெபிப்பதாலும், ஜெபமந்திர ஜெபம் அடி மனதில் இருந்து உண்மையாகவே வெளிப்படுமானால், நிச்சயமாக நற்பலன்களை உண்டாக்கி விடும். எல்லா மந்திர ஜெபங்களையும் படிப்பது என்பது பால பாடமாகும்.

தனது முன்னேற்றத்திற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் ஏதாவது ஒரு வழியைப் தேர்வு செய்து அதன்வழியே ஆன்மிகப் பயணம் அமைய வேண்டும் என்பதில் அனுபவ ஞானம் உள்ளது. டாக்டருக்குப் படிக்கும் மாணவன் டாக்டராவான். அது அவனது ஞாயமான ஆசை! “இல்ல..இல்ல..நான் டாக்டராகி, வக்கீலாகி, இஞ்சினியராகி, மந்திரியாகி என இப்படியெல்லாம் எண்ணலாம். அது அவர்கள் உரிமை.ஆனால் அப்படியெல்லாம் ஆக முடியாது என்பது நடைமுறை உண்மை.

பள்ளி ஆசிரியர் நாட்டு வளம்,சரித்திரம் என பாடங்கள் நடத்துவார். அதனால் அவர் அந்தந்த இடங்களையெல்லாம், நேரில் கண்டு தான் பாடம் நடத்துகிறார் என்பதை ஒப்புக் கொள்வதில்லை அல்லவா? அநேக நூல்கள் வாயிலாக அறிந்து கொண்டு, அறிந்ததைப் பிறருக்கும் சொல்லித் தரும் அறிவின் ஞானதானம் அது! ஆசிரியர் சொல்வதையெல்லாம் பயிலும் மாணவன் தனது முன்னேற்றத்திற்கு எது உதவும் எனத் தேர்வு செய்து அந்தப் பாடங்களை மட்டுமே கற்று வெற்றி அடைவதென்பது அவனது உரிமை.ஆனால் ஆசிரியர் மூலமே கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதைவிட உண்மையுமல்லவா? ஆன்மிக விஷயங்களும் அப்படித்தான்.

எல்லா நேரமும் இறைவன் சிந்தனை மிகுத்துள்ள நற்குருவின் மூலமே நாம் இறைவனது திருவருளைப் பெற வேண்டும். இந்த ஜென்மத்தில் அறிந்தோ, அறியாமலோ; தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்ட சகல பிழைகளும் நீங்கி விடவும், முன் ஜென்ம வாசனைகள் மாய்ந்து விடவும் குருவருளால் மந்திர ஜெபத்தை, இறைவன் நாமமுடன் ஜெபிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் இறைவனுடன் லயமாதல் அவசியம்.

யாக விபூதியோ அல்லது வனத்தில் வசிக்கும் பசுக்களின் சாணத்தை எரித்த சாம்பலோ கிடைத்தால், வாழை இலையின் மீது திருநீற்றுப் பச்சிலைகள் போட்டு, அதன் மீது சாம்பலைப் பரப்பி தவபீடம் அமைத்துக் கொள்ள வேண்டும். இடுப்பில் வெள்ளை வஸ்திரம், உடம்பைப் போர்த்திக் கொள்ள ஒரு வெள்ளை வஸ்திரம் ஆகியன அணிந்து கொண்டு பீடத்தில் அமர வேண்டும். மூன்று நாட்கள் உபவாசமிருந்து மனதினுள் மிகவும் சப்தமாக குருஈஸ்வராலயம் மஹா மந்திரம் ஜெபம் செய்யவும். அந்தக் நேரத்தில் நாக்கு, உதடுகள் அசையக் கூடாது.

மூன்று நாட்களுக்குப் பிறகு தவம் நிறைவு பெற்றவுடன், கண்களை இமைக்காமல் வைத்துக் கொண்டு, “ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே என்னைக் காப்பாற்றும்” என்று மிகுந்த சப்தமாக மனதினுள்ளேயே கூறிவிட்டால், சகல பாவங்களும் நீங்கிட, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆசானாக உலகில் தோன்றுவான். இப்படித் தோன்றுகின்ற குருநாதன் சுயநலக் கலப்பற்றவனாக, தெய்வீகமாக, நன்னெறிகளைப் போதிக்கும் தகுதி அவனுக்கு ஏற்பட்டு விடும். இது உறுதி. சற்குரு நாதரிடம் சுவாமி கற்று அதனை அனுபவப் பாடமாக்கிக் கொண்டதற்கு நன்றி கூறுகிறேன்.

நமது சுவாமி பல இடங்களும் சென்று தியான அன்பர்களைச் சந்தித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது 2000 – மாவது ஆண்டுகளில் “உலகம் அழிவது உறுதி” என்று தியானம் செய்து கொண்டிருந்த அன்பர் ஒருவர் செய்து விட்ட தவறான விளம்பரம் காரணமாக எங்கும் உலவிவந்தார். அச்சத்தைத் தவிர்க்க நமது சுவாமி அவர்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று “அப்படி ஒன்றும் நடைபெறாது. தைரியமாகக் கடமைகளைச் செய்து வாருங்கள்” என்றபடி வலம் வந்த நேரமது. மதுரைக்கும் வந்திருந்தார் அப்போது..

நன்றி! வணக்கம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button