ஜீவாத்மாவினுள் பரமாத்மா!

214

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•06•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(353) மனிதனே புனிதன் —
ஜீவாத்மாவினுள் பரமாத்மா!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களே மனிதனின் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்கிறது. இதற்கு மனிதனே காரணமாய் இருக்கின்றான்.
வாழ்க்கையில் ஏற்படும் நல்லது அனைத்தும் மனிதனை உலக பந்தங்களில் இருந்து விடுவித்து, விடுதலை தந்து, இயற்கையில் சுதந்திரமுள்ளவனாக மாற்றி இறையருள் தன்மையை அவனுக்கு நல்குகிறது. மனித வாழ்வில் நடைபெறும் கெட்டவை அனைத்தும் உலக பந்தங்களில் ஆழ்த்தி விடுகிறது. இதனை உணர்ந்து ஞானியர்கள், விழிப்பு, கனவு, தூக்கம் மற்றும் நாலாவது எனப்படும் துரீயம் இவைகளை விட்டு விடுகிறார் கள். வாழ்வின் நன்மை, தீமைகளை இல்லாது செய்து பரமாத்மா, ஜீவாத்மா ஜக்கிய நிலையினில் ஆனந்தமயமாக மாறி விடுகின்றனர். இவர்களின் செயல்கள் அனைத்தும் இறைவன் செயலாக வெளிப் பட்டு மற்றவர்களுக்கும் உதவுகி றது. இதுவும் கூட அவதூதர்கள் மீது நம்பிக்கை கொள்பவருக்கு எண்ணியது எண்ணியாங்கு நடை பெறுகின்றன. மனித மனம் தன்னை அறியாமல் இவர்களை ஆராயப் புகுவது ஏன்? என்பதை உபநிஸத் விளக்கம் கூறுகிறது. எப்படி? உப்பு பொம்மை சமுத்திரத்தின் ஆழத்தை அறிய முயல்வது போன்றதாம் அச்செய்கை. அன்று இரவு அழகு நாச்சியார் கோவில் வெளியே கிரிவலப் பாதையில் உள்ள பரிகார மயில் மண்டபத்தில் சற்குருநாதரின் உத்தரவுப்படி நமது சுவாமியும், ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமிகளும் அமர்ந்தி ருந்தனர்.

இக் காலம் போல் அல்லாமல் அன்று கிரி வலப் பாதையில் ஜனநடமாட்டம் இன்றி ஏனோ வெறிச்சோடிக் கிடந்தது. நமது சுவாமி பேச முடியாதவராதலால் மனதினுள் நாவசையாமல் ஜெபித்தபடி இருந்தார்.ஆறடி உயரத்திற்கும் மேல், அகன்ற நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், பொன் போன்ற மேனியில் புழுதி படிந்த தோற்றமும், ஜடாமுடி வளர்ந்து தரையில் சுமார் ஆறடி நீளத்தில் கிடக்க அவர் வெளிப்பட்டார். அவர் நடக்கும் போது தரையில் கிடந்த நீளமான முடி இங்கும் அங்குமாகப் புறண்டபடி சென்றது. வெளிப்பட்டு வந்தவர் முதலில் மயில்மண்டபத்தையே பார்த்தபடி நின்றார். கண்களில் இருந்து ஒளி வீசியது. அந்த இரவு நேரத்தில் அவரது பார்வை மழையில் நனைந்ததும் உடல் எங்கும் ஜில்லென்ற குளிர்ச்சி உருவாவதை இருவரும் உணர்ந்தனர். இவரைத் தான் முற்கல முனிவர் என்று சற்குரு நாதர் குறிப்பிட்டது. அப்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி தெற்கு திசையில் இருந்து மயில் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பலத்த சிரிப்புச் சத்தத்துடன் வந்தவர் முன்பு அம்முனிவர் நின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டு அளவளாவினர். பிறகு அவர் தெற்கு திசைநோக்கிச் சென்று விட்டார். மயில் மண்டபத்திற்கு வந்த சற்குரு நாதர் பாதத்தில் சீடர்கள் இருவரும் பணிந்து வணங்கினர். குருநாதர் மண்டபத் தின்மீது அமர இருவரும் அவரது காலடியில் பணிந்து வணங்கினர்.

முற்கல முனிவர் என்ன கூறிச் சென்றார் என்று அறிந்து கொள்ள ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமி துடியாக இருந்தார். அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சற்குருநாதர் கூறினார், “முற்கல முனிவர் எப்போதும் ‘ஓம்’ என்ற சொல்லை ஜெபம் செய்து கொண்டிருப்பவர். ஓம் என்ற ஒற்றைச் சொல் எந்த நேரத்தி லும் ஆகாயத்திலிருந்து ஒலித்த படியே இருக்கிறது. உலகத்தில் மறைபொருளாக இருப்பதை, ஓம் என்ற நாதமானது ஒவ்வொரு முறையும் வெளிப் படுத்திக் கொண்டே இருக்கிறது. அதுவும் தன்னை வெளிப்படுத் திக் கொண்டே உள்ளது. ஓம் = அ + உ + ம காரமாகிய இதில் பராபரமும்(அ), பிரபஞ்சமும்(உ), ஜீவன்களும்(ம), மறை பொருளாய் உள்ளது. அதனால் இது இறைவனது அம்சமாக உள்ளது. இறைவன் என்கிற ஓர் காரண சக்தி, படைப்பின் சக்தி யாக வெளிப்படும் போது, அது உலகமாகவும், உலகில் ஜீவன் களாகவும், ஒவ்வொரு ஜீவன் களுக்குள்ளும் பரமாத்மா வாகவும், காரியத்தைச் செயல் படுத்தும் “நீயாக” அதாவது ஜீவாத்மாவாகவும் இருப்பது, கடவுள் சொரூபமான “ஓம்” என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.”

“அதனை அறிந்து கொண்டு, யார் எல்லாமுமாக(பிரபஞ்சம்) முழுவதும் இருக்கின்றாரோ, அவரே இங்கு ஞானமுள்ளவர். எல்லாம் அறிந்தவராக, (இறைவனுடன்) பிரிவில்லாமல் இருக்கின்றார் எவரோ அவரே ஞானமுள்ளவர் இங்கே. ஞானமுள்ளவர் மட்டுமே இங்கு அசைவற்றவராக (தலைவனை உணர்ந்து கலந்து விட்டவர்) நிலையாக இருப்பர். நமது சுவாமியின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்த சற்குரு நாதர், “மகனே இவைகளை உணரும் காலம் உனக்கு ஏற்படும். நாடி வருபவர் களுக்கு வழி காட்டியாக இருப்பாய் “என்று ஆசியருளி விட்டு, நடராஜா சுவாமியை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனது வஸ்திரத்தை நமது சுவாமி மீது போர்த்தினார். மாய உறக்கத்தில் சுவாமி ஆட்கொள்ளப்பட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி!வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button