சோதனையில் சாதனை!

225

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•02•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(230) மனிதனே புனிதன் —
சோதனையில் சாதனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவஞானச்சுடர் திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள், நமக்குக் கூறிய ஆதி குரு நாதரின் வாழ்வின் சம்பவங்கள் என்பது கர்ணபரம்பரையாக தனது குடும்ப வாரிசுகளுக்குக் கதையாகச் சொல்லி வந்த உண்மை நிகழ்வுகளே! காலப் போக்கில் கதையின் சுவைக்காகக் கூட்டியோ, குறைத்தோ சொல்லி வந்திருக்கலாம் என்பது பாட்டி அவர்களின் அபிப்பிராயம். இனி மேல் நடந்த சம்பவங்களைக் கேட்போம்.

” குரு பத்தினி வெண்கலப் பானைகள் தயாரிப்போரிடம் சொல்லி, ஒரே பாத்திரத்தில் இரண்டு பகுதிகளான அறைகள் இருக்கும் படி, செய்து தரச்சொல்லி அதனை வாங்கி வந்தாள். ஒரே பாத்திரத்தில் இரண்டு வகை உணவுகளை அதில் தயார் செய்யலாம்! தனக்கென உணவுகள் தயாரிக்கும் போது, தனது மாமிக்குக் கஞ்சி உணவு செய்வாள். அதனை ஒரு மண் சட்டியில் ஊற்றி வைத்து விட்டால் அதனை மாமி சாப்பிடுவார்கள். தினமும் ஒருவேளை கஞ்சியோ, கூழோ தருவதை, ஆதி குரு நாதனின் தாயார் மகிழ்ச்சியோடு சாப்பிட்டு வந்தார்கள். தனது மகனுக்கு வருமானம் குறைந்து குடும்பம் வறுமையில் உழல்வதாக எண்ணிக் கொண்டு, தனது மகனுக்கு நல்ல வழி விடவேண்டும், வருமானம் தரவேண்டும் என்று அனுதினமும் பிரார்த்தித்து வந்தார்கள்.”

” வானோரின் சோதனையும் தாயார் மீது நிழலாகப் படிந்தது. உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. வயோதிகத் தாயாருக்கு இப்போது நடக்க இயலாது போனது. குழந்தை போன்று தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. அருகில் உள்ள காட்டாற்று ஓடைக்குத் தவழ்ந்து சென்று, ஆடைசுத்தி, அங்கசுத்தி செய்து வந்தார்கள். சில நாட்களில் முழந்தாள், கைகளில் கொப்புளங்களும், ரத்த காயமும் உண்டானது. இடைவிடாது பிரார்த்தனை செய்வதை மட்டும் நிறுத்தாமல், தொடர்ந்து கடைப்பிடித்தபடி இருந்தார்கள். மகன் வீடு வரும் போது தாயாருடன் மகன் பிரார்த்தனை செய்வது மட்டும் தவறாமல் நடந்து வந்தது. கவலையற்றுக் காணப்படும் தாயாரின் முகத்தில் தெய்வீக ஒளியைக் கண்டு மகிழ்வார். ஏனோ ஆதி குரு நாதனின் மனதில் அது வித்தியாசமாகப் பட்டது.”

“ஆதி குரு நாதனின் உள்ளம் ஏனோ நிம்மதியை இழந்தது போலும், தனது சாந்த சித்தத்தை யாரோ தலையிட்டுக் கலைப்பது போலவும், தனது குடும்பத்தில் நடக்கக் கூடாது நடப்பது போலவும், தன்னிடத்தில் அதனை மறைப்பது போலவும் உணராந்தார். தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி் பிரபஞ்ச உயிராத்மாவின், இயற்கையின் இயல்புக்கு மாறானது என்பதும் புரிய வந்தது. தாயை வணங்கி விட்டு ஏக்கத்துடன் விடை பெற்றுச் சென்றார். அவர் புறப்பட்டுச் சென்றபிறகு மேகம் திரண்டு, வானம் கருத்து ஆரவாரமாக மழை கொட்டத் துவங்கியது.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button