சூரியன் – பூமி – வியாழன்(குரு)

215

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•04•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(281) மனிதனே புனிதன் —
சூரியன் – பூமி – வியாழன்(குரு)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” பரம்பொருளின் சக்தியை எண்ணுகின்றவர்களுக்கு அதன் அருள் பிரவாகம் தங்கு தடையின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கும். அதன் சக்தியை எண்ணாதவர்களுக்கு அவர்களது முயற்சியின் வழியே பராபரம் அருள் தருகின்றது. அதனை உடல், மனம் வருந்தத் தான் பெறப்படுகிறது. பக்தி யோகம் மிகவும் சுலபமானதாய் இருந்தாலும், அது பக்தனுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் அருளப்படுகிறது. முதலில் தேவை இறை சக்தி மீது நம்பிக்கை கொள்வது மாத்திரமே. அதனால் ஆண்டவனின் பார்வை நம்மீது விழுவதால் அதிக பாதுகாப்பு கிடைக்கப் பெறுகிறோம். ஆனால் இறைசக்தியின் மீது நமக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும் என்பதுதான் இங்கும் வலியுறுத்தப் படுகிறது” என்றார் சற்குரு நாதர்.
” அன்பு வடிவான ஸ்ரீ ஈஸ்வர குருநாதா நமது பூமியின் நிலை பற்றியும் கூறுவதோடு, ஐயனே ஓங்கார நாதம் நமது பூமியில் எப்படிச் செயல்படுகிறது? என்பதையும் விளங்கக் கூற வேண்டும் சற்குருவே ” என்று நமது நாகராஜன் சுவாமி பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

” எதிர்காலத்தில் ஞானச்சுடராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, செயற்படும் போகும் மகனே நாகராஜா! உனக்குச் சூரிய தேவரிஷி தந்து கொண்டு இருக்கும் பாடத்தில், காப்புப் பாடலை அடுத்த பாடல் வரிகள் என்ன செய்தியைக் கூறுகிறது? சொல்” என்று சற்குரு ஆணையிட்டார்.
” ஸ்ரீநாகலக்ஷ்மியின் அம்சமாக பூவுலகினுக்கு வந்த தேவதேவா, பூமியில் தோன்றி தனது சுவாசம் கொண்டு சப்தத்தினால் வாழுகின்ற சகல ஜீவராசிகளின் ஈர்ப்பினுக்கு ‘அது’ கிடைக்கப் பெறுகிறது. பஞ்சபூதங்கள் தங்களது ஆர்ப்பரிக்கும் சப்தத்தினால் ‘அதனைப்’ பெறுகின்றன. சூரியக் கதிர் கண்டு ஞானம் பெற்ற ஆத்மாக்கள், ஒரு கை ஓசையாகிய ‘அது’ அவர்களின் நெஞ்கத்திலே ஒளிரத் துவங்கி விடுகின்றன. அதுவே சூரியனின் ஓங்கார நாதமாகும். அந்த ‘ஓ…’ என்னும் நாதத்தை பூமியின் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டு, பூமியின் மையத்தில் உள்ள குண்டலினி சக்தியில் ‘ம்’ என்று சமைக்கப்ட்டு, ‘ஓம்’ எனும் வித்தாக பூமியின் சுவாசத்தில் வெளிப்படுகின்றது. அது பூமியின் சகல ஜீவன்களுக்கும் அவைகளின் ஆற்றல் சக்திக்குத் தகுந்தாற்போல் பகிர்ந்து அளிக்கப்படுவதை, தங்களின் சுவாசத்தினால் ஈர்த்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன” என்று ஞானச்சுடரின் முதல் செய்யுளுக்கு உண்டான விளக்கத்தை நமது சுவாமி ஸ்ரீ நாகராஜன் எடுத்துரைத்தார்.

“அப்பா, நாகராஜா பாடங்களின் சூட்சும ரகசியங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. குருவானவர் தனது சீடனின் நலனில் அக்கறை கொள்வதைப
போன்றது, நமது சூரியக் குடும்பக் கோள்களின் முக்கியமான பங்கு வகிப்பது வியாழன் கோள் ஆகும். இதனை பக்தர்கள் ‘வியாழபகவான்’ என்றும், வான் சாஸ்த்திர நிபுணர்களான ஜோதிடர்கள் ‘குரு பார்க்கக் கோடி நன்மைகள் ‘ எனவும் பார்த்தனர். நவகிரகங்கள் அவைகளுக்கு உண்டான இயல்புத் தன்மைகள் உருவாக்கி, காத்து, அழித்து விடுவது. இதனை ஆதி கால சித்தர்கள் அறிவின் என்றவுடன், இறையருள் கொண்டு, நவகோள்களையே ஆட்டிப் படைத்தனர். பிரபஞ்சத்தைப் படைத்த பராபரமாகிய இறை சக்தி, நவகோள்களின் அதிதேவதைகளைப் பூமியில் ரிஷிகளாகப் பிறக்க வைத்து, மனிதர்களின் மேல் கருணை கொண்ட அனுதாபத்தை உண்டு பண்ணி, இறைவனது சிருஷ்டிக்கும் தடங்கல்கள் ஏற்படா வண்ணம் வழி ஏற்படுத்தப்பட்டது. அதுவே இறைசக்தியை் வணங்கி, வழிபாடுகள் செய்யும் வழி முறைகளாகும். இறைவன் அன்பு கொண்டு படைத்த அறிவியல் அற்புதமாகிய பூமியைக் காப்பதில் வியாழன் கோளின் பங்கோ தலையாயது ஆகும். அதனால் வியாழன் கோளைக் ‘குரு கோள் ‘ என்றே மெய்யறிவினால் அழைத்தார்கள். சீடனைக் குரு பாதுகாப்பதைப் போல், குரு கோள் பூமியைக் காப்பதில் தனது பங்களிப்பைச் தருகின்றது.”

“வாசனைகளினால் மனிதன் ஆளப்படுகிறான் என்கிற ஸ்ரீ ஈஸ்வர நீதி வாக்கியத்திற்குத் தகுந்தாற்போல் அறிவின் சக்தி ஆற்றல் அணுக்கள், சூரிய வெப்பமண்டலத்தில் இருந்து சிவஷக்தி அணுக் கலப்பாய் வெளிப்பட்டு, பரவெளியில் படர்ந்து பூமியின் ஈர்ப்புக்குள் வரும் போது, குரு கோளின் சமைப்பில் அது பூமிக்குப் பக்குவமாய் தரப்படுகிறது.சில நாட்களுக்குத் தவம் செய்வதை நிறுத்தி விடு. உடல் நிலையில் ஆரோக்கியம் திரும்பவேண்டும் அப்பா. இனி சில பாடங்களைப் படித்த பிறகு நட்சத்திர மண்டலப் பாடங்களுக்கும் தயாராகு. கால நேரம் இரவு கூடிவிட்டது. இனி ஸ்ரீ தேவ ஜோதி விளக்கில் உன்னைத் சந்திக்கிறேன், புறப்படப்பா! ” என்று கூறி அனுப்பி வைத்தார். சுவாமி சற்குருவின் ஏக்கம் கொண்ட எண்ணமாக வீடு வந்து சேர்ந்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button