சூக்கும தேக தரிசனம் சித்தித்தல்

248

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•07•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(374) மனிதனே புனிதன் —
சூக்கும தேக தரிசனம் சித்தித்தல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” பழனிமலை முருகனின் மேற்கு நோக்கிய தரிசனத்தைக் கண்ட பிறகு மெய்யன்பர்களுக்கு அக்ஷி மார்க்கம் என்ற கூர் நோக்குப் பார்வையால் பல வகையான சக்திகளைப் பெறும் வழியை முருகப்பெருமான் காட்டினார். கண்களை இமைக்காமல் நாம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்க்க, நமக்குள் அதீதமான ஆற்றல் சக்திகளை உருவாக்க முடியும். இதற்கு விஞ்ஞானம் கூறும் விளக்கம் என்னவென்று பார்க்கலாம். ஒரு நிமிஷம் நேரம் முதல் சுமார் அரைமணி நேரம் வரையிலும் கண்களை இமைக் காமல் எந்தப் பொருளையும் உற்றுப் பார்க்கும் போது, அதே நேரத்தில் அந்தப் பொருளின் மின்காந்த அணுக்கள் நமது மூளையில் உருவாகி விடும். மற்றும் அந்தப் பொருளின் குணத்தையும் , அதன் பண்பையும், பயனையும் நம்மில் உருவாக்கிக் கொண்டு விடுவோம். நாம் எந்தப் பொருளை உற்று நோக்கினாலும் அதன் பண்புகள் வளர்வதால், முதலில் பொருளின் குணங்களைத் தெரிந்து கொண்டு, கூர் நோக்கு வித்தையில் நுழைபவர் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறுவர். ஞானியர்கள் பகலை சிவம் என்றும், இரவை சக்தி எனவும் எண்ணி வாழ்ந்தனர். ஆன்ம தரிசனம் பெற விழைவோர், பகல் இரவு இரண்டிலுமே கண்களை இமைக்காத கூர் நோக்குப் பார்வையால் அடைய முடிந்திடும். இரவு மாத்திரம் கூர் நோக்குப் பார்வை வித்தையைப் பயன்படுத்தும் போது இருளில் கண்ணாடி முன்பு அமர்ந்து, கூர் நோக்கில் ஆன்ம தரிசனம் பெறலாம். வள்ளலாருக்கு ஆன்ம தரிசனத்தைக் காணும் பாக்கியத்தை ஞான வள்ளலா கிய ஆறுமுகப் பெருமானே வழங்கினார் என்ற உண்மையை ராமலிங்க சுவாமி வெளிப்படுத்து கிறார் “என்று கூறிவிட்டுத் தனது குரு நாதரின் முகத்தைக் கனிவுடன் கண்டு வணங்கினார். சற்குருநாதர் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் போது, கட கட வெனச் சிரித்து நாகராஜன் சுவாமி அவர்களின் முதுகில் ‘திருச்சாத்து’ ஒன்றைப் பலமாகக் கொடுத்து, “என்ன வாத்தியாரே” என்று மகிழ்வது அவரது வழக்கம். ஒருமுறை ‘எரியடி தண்டம்’ என்ற பாடத்தைச் சொல்லித் தந்து கொண்டிருந்த சற்குருநாதர் அருகில் உள்ள அடுப்பில் நன்றாக எரிந்து கொண்டிருந்த விறகுக் கொள்ளி கட்டையை எடுத்து முதுகில் போட்டாரே ஒரு போடு. ” எப்படி எரியடி தண்டம் வாத்தியாரே? “எனறு ஆதரவாய் , அன்பாய் தடவிக் கொடுத்து ஆசீர்வதித்து விட்டு இடிஇடிப்பது போன்ற குரலில் சிரிப்பது அவர் வழக்கம்.

நாகராஜன் சுவாமி தனது சற்குரு நாதரிடம், “பராபரமாய் விளங்கும் குருநாதா, நாதாந்த தேசிகரே, முருகன் விக்ரகத்தைத் திட்டமிட்டே மேற்கு திசைக்கு மாற்றப்பட்டதா ஐயனே? அவர் யார்? முருகனின் நவபாஷாண சிலை மீது அக்கரை கொண்டது யார்? நிர்விகற்பத்தில் வீற்றிருந்து பரிபாலனம் செய்திடும் போகநாதர் இதற்கு எப்படி சம்மதிப்பார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டதும் சற்டுருநாதர், “போதும் வாத்தியாரே நிறுத்து. இதனை நீ தெரிந்து ஆவதும் ஒன்றுமில்லை. போகநாதரின் சம்மதமின்றி இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை! முருகன் கிழக்கு திசை நோக்கி இருந்திருந்தால், ‘அரகரா அரகரோகரா’ மந்திர சக்திகள் தெய்வீக சக்திகளுக்கு நல்ல பலன் தந்து கொண்டிருக்கும். ஞான விநாயகர் இதற்கு உதவி புரிந்திருப்பார். மயில் விக்ரகப் பிரதிஷ்டையின் உண்மைகளும் உலகினுக்குக் புரிந்திருக்கும். இனி ரகசியம் ரகசியமாகவே போய் விடும். போகநாதர் வெடி குண்டுகளைக் கண்டுபிடித்த ஓர் ஒப்பற்ற விஞ்ஞானி. உலகம் எங்கனும் ஆகாய மார்க்கமாகப் பிரயாணம் செய்து, பல நாடு களுக்கும் சென்று, பல உண்மை களை அறிந்து வைத்துள்ள மகா மேதையான சித்த புருஷன்.
ராகு தோஷத்தை நீக்கிடும் ‘குரா’ மூலிகையைக் கொணர்ந்து வைத்துள்ளவர். வேறெந்த வனத்திலும் இம் மூலிகை இதுவரையிலும் அறியப்படவே இல்லை. முருகனின் விக்ரகம் மூலம் வானியல் பாடத்தைத் தனது சீடர்களுக்கு இன்னும் போதித்து வருகிறார். தவிரவும் தனது சக்திகளைப் மோகத்தில் இழந்து விட்ட போது, தனது உத்தம சீடன் புலிப்பாணியைத் தனது யோக தண்டத்தினுள் புகச் செய்து, சீடனிடம் இருந்து மீண்டும் உபதேசம் பெற்றுச் சீடனை உலகில் உயர்த்திக் காட்டிய உத்தமரப்பா போகநாதர். முருகனின் சிலையை விபரம் தெரியாதவர் அகற்ற முயன்றால் பிரளய காலத்தை அவரே உருவாக்கிக் காட்டியிருப் பாரப்பா. இது வானுறையும் தெய்வ ரகசியமாகப் போய் விட்டதால் இதனை இத்துடன் விட்டு விடுவோம்” என்றார்.

“ஐயனே, இன்னும் ஒரு கேள்வி யின் பதிலை எதிர்நோக்கு
கிறேன்” என நமது நாகராஜன் சுவாமி துவங்கியதும், “பலே வாத்தியாரே, முருகனின் சிலையைத் திருப்பியவர் யார்? பிறகு அவர் என்னவானார்? என்பது பற்றியதுதானே? நீ எப்படியாவது என்னிடம் இதன் உண்மைகளை எதிர் பார்க்கின் றாய். அப்படித்தானே? ” என அதட்டுவது போல் கேட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button