ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
04•08•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(31) மனிதனே புனிதன் —
சுவாமியே சரணம் ஐயப்பா!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆடி மாதம் தெய்வீக காரியங்களுக்கு உகந்தமாதம் என்று முன்னோர்கள் கூறினார்கள். ஆடி மாதத்தில் தான் சிவபக்தன் இராவணேஸ்வரனை வதம் செய்தது நிகழ்ந்தது. ஆடி மாதமே வான் உறையும் தெய்வங்கள் உறங்கும் காலம்!
சிலர் ஆடி மாதத்தில் பதினெட்டு நாட்கள் பாரத யுத்தம் நடந்ததாகத் தவறாகப் குறிப்பிடுவார்கள். மகாபாரதப் போரை ஸ்ரீ கண்ணன் நடத்தி ஜனப் பொருக்கத்தைக் கட்டுப் படுத்தியது மார்கழி மாதத்தில் தான்!
அதே போல்தான் சிவன் மன்மதனை எரிந்துச் சாம்பலாக ஆக்கியது புரட்டாசி மாதத்தில்! எல்லா உயிர்களும் உலக இன்பங்களில் திளைத்து மகிழவே புரட்டாசி மாதத்திய சனிக்கிழமை தோறும் வைகுண்டவாஸருக்கு விரதம் இருந்து வேண்டிக் கொள்வது வழக்கத்தில் உள்ள நடை முறையே!
இம்மூன்று மாதங்களில் சுப காரியம் எதுவும் செய்ய மாட்டார்கள்.காரணமும் உள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று அம்பலநாயக்கர் ராஜ குடும்பம் ஆழியாற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட மாதம் ஆடி. கிராமத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவதும் தெய்வீக தன்மையை, உடல் நலத்தை உத்தேசித்தே!
மார்ச்சநாயக்கரின் எதிர் சாபத்தின் காரணமாகவே ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அம்பலநாயக்கரின் அரண்மனை, நாகதேவியின் கோயில் எல்லாம் அழிந்து கோயில் இருந்த மேடை மட்டுமே காலம்காலமாக இருந்து வருகிறது! காலப்போக்கில் அரணமனை அமைந்திருந்த இடங்கள் விவசாய பூமியாக மாறிப் போயின. அந்த இடத்தில் இப்போது சிறிய ஃபேக்டரி ஒன்று இயங்கி வருகிறது.
ஊர் சாபம் நீக்கும் காலம் வந்ததால், நமது சுவாமிக்குத் தெய்வீகப் பாதுகாப்புக் கருதியே சபரிமலை ஐயப்பன் விரதம் இருந்து வர அவரது குருநாதர் ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த சமயத்தில் கோவில் பாளையம் கிராமம் கோவை மெயின் ரோட்டில் கேரளநாயர் காப்பிக்கிளப் ஒன்றில் பணிபுரிந்து வந்த நடராஜூ என்பவர் சுவாமியின் கிராமத்தில் பெண் எடுத்தார். பிறகு நமது சுவாமியின் தந்தை நடத்தி வந்த பலசரக்குக் கடையின் எதிர் புறமாக சாமி ஓட்டல் என்ற பெயரில் கடை ஒன்று திறந்தார். வெற்றி கரமாக நடத்தி நல்ல பெயரும பெற்றார்.
அவர்தான் கிராமத்தில் இருந்து முதன்முதலாக ஐயப்பனை தரிசிக்க தனது முதலாளியுடன், அன்னதானம் மற்றும் பஜனைப் பாடல், ஆடலுடனும் கோலாகலமாக இருமுடி சுமந்தபடி புறப்பட்டுப் போனார்.
இருமுடிப்பையில் அரிசி, காணிக்கை போடும் போது கடைசிகாலப் பயணமாக எண்ணி, எல்லோரும் வாய்க்கரிசி போடுங்கள் என்று சொன்னார்கள். ஜனங்களும் கையில், பையில் வைத்திருந்த பணத்துடன் பச்சரிசி சேர்த்து அழுதபடியே நடராஜ் ஐயப்பன் சுவாமி வைத்திருந்த பையில் போட்டுக் கொண்டே இருந்தனர்.
பையும் நிறைந்துவிட மற்றொரு பெரியபையில் பணம், நோட்டுக்கள், அரிசியும் போட்டு அதையும் நிறைத்தனர்.
இருமுடி கட்டிக் கொள்ளும் சுவாமி நடராஜூம் கண்ணீர் வடித்தபடி பணமுட்டையைக் கட்டிக் கொள்ள, அரிசி, பருப்பு மளிகை சாமான்கள் அத்தனையும் சேர்ந்து பெரிய பாரம் போல் ஆகிவிட்டது. ஊர் மக்களும் அழுதபடியே வழியனுப்பினர்.
“காட்டுக்குள் சிங்கம்,புலி,கரடி எல்லாம் இருக்கும். தப்பி வந்தால் தம்புரான் புண்ணியம்.ஐயப்பா நீதான் அவரைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.நடராஜன் ஐயப்பசுவாமியும் ஊர் எல்லை வரையில் ஊரைப் பார்த்தபடியே, தலையில் மிகப் பெரிய சுமையுடன் அழுதபடியே, பின்னால் நடந்து சென்றார்.
ஊர் முச்சந்தியில் வைத்து தேங்காய் உடைத்து, பழம், அகர்பத்தி, கற்பூரம் காட்டிக் காலில் பூப்போட்டு தரையில் விழுந்து ஊர் மக்கள் கும்பிட்டனர். ஒவ்வொருவரும் அழுதபடி அவரைச் சுற்றி வந்து அவர் கையால் விபூதியைத் தங்கள் நெற்றியில் பூசச் சொல்லிப் புண்ணியத்தை சுலபமாகப் பெற்றுக் கொண்டு அழுதனர்.
வண்டியில் அவரை ஏற்றி வழியனுப்பும் போது ஊரைச் பார்த்தபடி நின்றவரை, மூன்று முறை தன்னையே சுற்றவிட்டு ஊரை இனிப் பார்க்கக் கூடாது, திரும்பி வந்துதான் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். அவர் மனைவியை, மாளிகைப்புரம் என்று சொல்லி ஐயப்பனைப் பார்க்கக்கூடாது என்று கூறி பெண்களைக் கொண்டு அப்புறப் படுத்தினர்.
அந்த இளம்வயது மனைவியும் புருஷன் வருவானோ மாட்டானோ என்று முக்காடிட்டு அழுது கொண்டே போனார்கள்.
சபரிமலை யாத்திரை என்பது சந்தோஷமான யாத்திரை இல்லையோ என்ற சந்தேகம் நமது சுவாமிக்கு வருமாறு செய்து விட்டது இது. கோயிலுக்குச் செல்வதை இறுதி கால யாத்திரை போல ஜோடிக்கும் இந்த யோசனை எந்த அறிவாளியின் மூளையில் உற்பத்தி ஆனதோ என்று நம்சுவாமி எண்ணி சற்று பயந்து தான் போனார்.
ஊத்துக்குளி ஜமீன்தார் பொதுநல நோக்கத்துடன் அமைத்திருந்த, வழிப்போக்கர்கள் தங்கும் அன்னதான சத்திரம் கூட ஊர் சாபத்தால் சிதிலமாகிக் கிடந்தது. அதன் அருகே உள்ள மரத்தின் நிழலில் நமது சுவாமி அமர்ந்து சிந்தித்துப் கொண்டிருந்தார்.
ஊருக்குள் குடியிருக்கும் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. சம்பாரித்துச் சொத்துக்கள் வாங்கியவர்கள் தங்கள் காலத்திலே விற்று விட்டு ஊரைக்காலி செய்கின்றனர். பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தால் புகுந்த வீட்டில் வாழாமல் புருஷனைக் குடும்பத்தில் இருந்து பிரித்துக் தனது பிறந்த வீட்டிற்கே புருஷனுடன் வந்து விடுகிறார்கள்.
குடும்பத்துக் பையன்களை வீட்டை விட்டே துரத்தி விடுகின்றனர். அப்படி வந்தாலும் பெண்கள் நல்ல வாழ்வு வாழ்வதில்லை. வீட்டில் பெரியவர்கள் நிம்மதியாக வாழ வழி வேண்டும்.கிராமத்தில் எல்லாப் பையன்களும் கெட்டவர்களாக மாறி வருகின்றனர். இதற்கு ஒரு விமோசனம் வேண்டுமே என்று எண்ணிக் கொண்டு இருந்தவர் முன்பு தேஜஸ் மிகுந்த அந்த ஞானி எதிரில் நின்று கொண்டிருந்தார். சுவாமி நாகராஜ் அவர்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து நமஸ்கரித்தார். அவரும் புன்முறுவல் பூத்தார்.
அருகில் அமர்ந்தவரிடம்,”சுவாமி சபரிமலை யாத்திரை எப்படிப் போகின்றார்கள் பார்த்தீர்களா? சந்தோஷமாகப் போய் வர வேண்டிய யாத்திரையை அழுது கொண்டு போவதில் அறியாமை துலங்குகிறது. இவர்களுடன் சேர்ந்து எப்படிச் சென்று வருவது?” என்று கேட்டார்.
“ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் செல்லட்டும். அடுத்தவர் காரியத்தில் நாம் தலையிடக்கூடாது. உனது விரதம் என்பது தவ வழியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஐயப்பன் மிகவும் சிறந்த தவ முனிவர். தவத்தில் பற்றி இரு. நாகதேவதைகள் தவம் இருப்பவர்களையும் விரட்டும். அகத்திய மாமுனிவர் உன்னைத் தொடர்பு கொண்டிட, ஐயப்பன் தவ விரதமும் நிச்சயமாக உனக்கு உதவிகள் செய்யும். உனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என்னை நீ நினைத்தவுடன் வந்து உதவ வருவேன்” என்றார்.
“உங்களை எப்படி அழைப்பது?” என்று சுவாமி கேட்டதும், உனக்கே தெரியும் என்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.