ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•09•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(79) மனிதனே புனிதன் —
சுவாமியும் மெளனசாமியும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.நாகராஜன் சுவாமி அவர்களுடன் சற்குரு நாதர் அவர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதை, அநேக பக்தர்கள் கண்டு ஆசி யும் பெற்றிருக்கின்றார்கள். இந்த முறை அவரது சந்திப்பில் நமது சுவாமிக்கு, தெய்வீகப் பாடங்களை ஈர்த்து எடுக்கும் ஆற்றலை அடையும் வழிமுறைகளை போதனை செய்தார். அதன்படி கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து சூரியனைப் பார்த்து தியானம் செய்வதால் இது சித்தித்தது உண்மை. தனது மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைத்ததால் தான் நமது சுவாமி அவர்களுக்கு தெய்வீக பாடங்களை அடைவது சாத்தியமாயிற்று. இதற்காக இறை சக்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ளேண்டியது அவசியம். நன்றி இறைவா!
ஊத்துக்குளி ஜமீன்தார் அவர்கள் சபரிமலை யாத்திரை கட்டு நிறைவு, அவரது குலதெய்வம் கோயில் அகத்தூரம்மன் சந்நிதியில் நடை பெற்றது. நமது சுவாமிக்கும் அழைப்பு வந்தது. ஜமீன் விவசாயங்களை மேற்பார்வை செய்து வரும் ‘காட்டுப் பண்ணாடி’ கவுண்டர் ஐயா அவர்கள் வந்து அழைத்தார். பொள்ளாச்சி திரு. பத்மநாபன் குருசாமி மற்றும் உள்ளூர் சுவாமிகளுடன் சென்று வந்தார்.
அங்கு ஒரு முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்பை சுவாமி பெற்றார். அவர்தான் வருடா வருடம் தவறாமல் அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்து வந்த ‘மெளன சாமி ‘ ஆவார். எடுத்த எடுப்பிலேயே மெளனசாமிக்கு நமது நாகராஜ் சுவாமி அவர்களைப் பிடித்துப் போனது. எல்லோரிடமும் மெளனத்தைக் கடைப்பிடித்து வரும் அவர், சில முக்கிய காரியங்கள் பற்றி அறிய தனது மெளனத்தை விட்டு சுவாமியிடம் மட்டுமே பேசுவார்.
உணவு சாப்பிட விரும்பினால் சுவாமி யுடன் சேர்ந்து விருந்து உண்பார். விருந்து என்பது வெறும் சாப்பாடு மட்டுமே. குழம்பு, ரசம் எதுவும் தேவைப்படாது. எப்பவாவது மோர் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வார். அமர்நாத் செல்வதற்கு முன்பு நமது சுவாமி அவர்கள் முன்பு தனியாக இரண்டு மணிநேரம் சிவன் பற்றிய பாடல்களைப் பாடுவார். கல்வி கற்காத அவருக்கு இயல்பான கவிதையாகத் தனக்குத் தோன்றுவதைப் பாடுவார். அதில் பொருள் நிரம்ப இருக்கும்.
வட இந்திய யாத்திரை சமயத்தில் நமது சுவாமி காணிக்கைகள், குளிர் தாங்கும் உடுப்புக்கள், பணம் என்று தம்மால் இயன்றதைத் தந்து வழியனுப்பும் போது மெனசாமி ஆசீர்வாதம் கேட்பார்.சுவாமி சிரிப்பார். அதற்கு மெளனசாமி, “நீங்கள் யார் என்று எனக்கு ஐயப்பன் கூறி உள்ளார். மற்றும் அமர்நாத் குகைக்கு வரும் சாதுக்கள் “நாக வனம் வாழும் நாகராஜா’ என்று எனக்குத் தெரியப் படுத்தியதால், விடாமல் உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறேன். ‘உங்களிடம் பேசினால் அதை ஆண்டவன் நேரில் கேட்பார்’ என்று பைராகி ஒருவர் என்னிடத்தில் கூறி நெய்க்காக ஏன் அலைகிறாய்? என்று கேட்டும் விட்டார்” என்பார்.
தனது மரணத்தைப் பற்றிய முன்னறிவிப்பை, காலநிர்ணயம் செய்தவர் மெளனசாமி அவர்கள். வருஷம் தவறாமல் சாதுக்கள் செய்யும் குங்கும அர்ச்சனையில் தானும் கலந்து கொண்டு, பனிலிங்க தரிசனம் செய்வதும், குளிர்ச்சி மிகுந்த கங்கையில் குளிப்பதும், சிவநாம ஸ்மரணையில் மூழ்கித் திளைப்பதும் அவருக்கு ஆனந்தம் தரும் விஷயங்களாகும். மறக்காமல் அங்கேயிருந்து குங்குமத்தைக் கொண்டு வந்து சுவாமியிடம் தருவார். ஒருமுறை நமது சுவாமிடம்,” ஐயப்பன் உத்திரவு பெற்று விட்டேன். புறப்படுங்கள் போகலாம் என்று கூறி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
தியானம் முடிந்ததும்,”என்ன சுவாமி புறப்படலாமா?”என்று கேட்டார். “மாலை அணிதல், விரதம் இருத்தல் இதெல்லாம் வேண்டாமா?” என்று சுவாமி கேட்டார். ” அதெல்லாம் பக்குவம் பெற ஜனங்களுக்குக் கூறியது. உங்ளுக்கு அல்ல.கிளம்புங்கள்!” என்றவருடன் சுவாமியும் புறப்பட்டுப் போனார்!
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.