சுவாமிக்கு நெருக்கடிகள்!

143

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•04•2017
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(287) மனிதனே புனிதன் —
சுவாமிக்கு நெருக்கடிகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பணம், அதிகாரம் இரண்டும் இருந்து, இரக்க குணம் இல்லாத இடத்தில் அடிமையாய் வாழ்பவர்களின் நிலையோ சொலலத்தரமன்று. அப்படித்தான் சுவாமியின் குடும்பமும், அனல் மேல் இட்ட மெழுகாய் ஆயிற்று. “போய் கள்ளுக் கடையைத் திறந்து வியாபாரத்தை கவனிக்கச் சொல்லுங்கள். தவம் செய்கிறேன் என்று குடும்பத்தையே சாமியார் கோலம் படுத்த வேண்டாம் என்று கண்டித்து வையுங்கள் ” என்கிற உத்தரவை நேரடியாகச் சொல்லாமல், மாப்பிள்ளைகளா கிய மறுமகன்களிடம் சுவாமியின் தகப்பனார் திரு. APM சாமி அவர்களை கூறினார். அவர்களுக்கோ எப்படிச் சொல்வதென தயக்கம். அதற்கு மாற்று பானங்கள் சொல்லித்தர தம்பனவசியன் குடும்பத்தினர் தயாராகக் காத்துக் கொண்டி ருந்தனர். அவர்களுக்கு அடிமையாகவே மாறி இருந்தனர், சுவாமியின் குடும்ப உறவினர்கள். மலைவாழ்மக்கள் இப்போது மலையை விட்டிறங்கி கிராமப்புறங்களுக்கு குடிபெயர்ந்து வந்திருந்த காலம் அது. அவர்கள் வசிய மருந்து தயாரித்துக் கொடுக்கும் கலைகளில் வல்லவர்களாகவும் இருந்தனர். தம்பனவசியன் குடும்பத்தினர் இவர்களைத் தகுந்த வழிகளில் உபயோகப் படுத்தி வந்திருந்தனர். நமது சுவாமியை அவமானப்படுத்த நல்ல வழி தனது மறு மகன்கள் முன்பாக விசாரிப்பது ஒன்றே என ஆலோசனைகள் அந்த சமயத்தில் உதவிக்கு வந்தது. இரவு பத்து மணிக்கு உறங்கச் செல்லும் நேரம் விசாரணை செய்தால் மனம் பாதிப்புக்கு உள்ளாகும் என எடுத்து ஓதினர். அதற்குக் கட்டுப்படா விட்டால் இருக்கவே இருக்கின்றது ‘இடுமருந்து’ என தைரியம் கொடுத்தனர்.

நமது சுவாமி எதுவும் பேசாதவராகி மெளனமாகி விட்டார். அதனால் விசாரணை எடுபடாது போயிற்று. எல்லோரும் நாற்காலியில் அமர்ந்து கொள்வார்கள். நமது சுவாமி கைகளைக் கட்டியபடி அவர்கள் முன்னால் நிற்க வைத்து கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். நமது சுவாமி இதனைப் பல தடவைகள் அனுபவித்து விட்டவர்தானே. சுவாமி பதில் கூறாமல் நின்று கொண்டே இருப்பது மாப்பிள்ளைகளை அது அவமானப்படுத்தும் செயல் என்னு குதியாய் குதித்தனர். கடைசியில் சுவாமி வாயைத் திறந்தார். ” சரி, உங்கள் விருப்பப்படி கள், சாராயக் கடைகளுக்கும் சென்று வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை! அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்” என்றார். “சரிதான், சொல்லப்பா உனது நிபந்தனையை! “எனக் கருவினர் அத்தனை பேரும். நமது சுவாமியின் மனைவி திருமதி.மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் தனது கணவனை மாப்பிள்ளைக்கு முன்பு அவமானப்படுத்துவதை கடைசி வரையில் சம்மதிக்காத காரணத்தால் அவர்களின் கோபத்திற்கு ஆளாகிப் போனார். “கொடிக்காரி” என்ற பட்டப் பெயரால் அன்று முதல் அவர்களை அழைத்துக் கடுமையான வார்த்தைகளில் சாடினர். அவைகளை இங்கு அச்சில் பதிப்பதற்குத் தகாதவை. நமது சுவாமியின் நிபந்தனை, யாராவது கள்குடிகாரர்கள் நமது சுவாமி அவர்களைப் பார்த்து “நீங்கள் இந்தமாதரி இடத்துக்கு வரலாமா? என்று கேட்டு விட்டால், விவசாயத் தொழிலுக்குச் சென்று விடுவேன். சம்மதமா?” என்றார். தம்பி வசியன் குடும்பத்திற்கு தெய்வீக சக்திகள் சுவாமி அவர்களை விட்டுவிட்டு நீங்கி விட வேண்டும், அவ்வளவுதான்.

மறுநாள் சுவாமி குளித்து உடலில் சிவசின்னங்களாகிய விபூதியைக் குழையப் பூசிக் கொண்டு கம்பீரமாகச் சென்று கள்ளுக்கடைச் சுவற்றில் விநாயகப் பெருமான் சுழியிட்டு, லாபம் என்று எழுதி ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதற்குக் கற்பூர ஹாரத்தி செய்தார். கள் குடிக்க வந்தவர்கள் சாஸ்டாங்கமாகக் கீழே விழுந்து கும்பிட்டனர். குடிவெறியில் சிறந்தவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, “சுவாமி நீங்கள் இங்கே வரத்தகுமா? உங்களையுமா இந்தப்பாடு படுத்துகிறார்கள் ?” என்று கேட்டபடி எதையோ நினைத்து அவர்களுக்கு அழுகை வந்து விட்டது. அப்போது சின்னக் கவுண்டர் அகாலமரணம் அடையாத நேரம். அவரது தலைமையில் ஆட்ட பாட்டத்துடன் நமது சுவாமியை அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றனர். அதனைக்கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அயர்ந்து போயினர். “அப்பா, சாமிகளா இவர் ஒருவர் ஊருக்குள் தெய்வம்போல வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஏதாவது வேறு நல்ல தொழில் செய்து கொடுங்கள்,” என்று கூறினார்கள். தம்பன வசியன் குடும்பத்திற்கு ஊர் செய்திகளை சேகரித்துக் செல்லும் ஒரு பையன், ‘வயித்துப் பெரியவன்’ என்ற பட்டப்பெயர் உள்ளவன், அங்கே நின்றவன் கன்னத்தில் பளாரென அறைந்து விட்டுச் சென்றனர்.

சுவாமி அவர்களை அதன்பிறகு யாரும் வற்புறுத்த வில்லை. தினமும் கற்பூர ஆழியில் 108 கற்பூரங்கள் கொண்டு ஜெபம் செய்வது தொடந்தது. விவசாயப் பணிகள் ஜரூராக நடைபெற்றது. விவசாய நிலத்தில் கம்பிவேலி இட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button