சிலம்பாட்ட வீரர்கள்!

220

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•10•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(88) மனிதனே புனிதன் —
சிலம்பாட்ட வீரர்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் மனநிலை எம்முள் என்றும் நிலை பெற்றிருக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி இறைவா”

காட்டுயானைகள் வரும் பாதையில் உள்ள மரங்களின் மீது அமைக்கப்பட்ட பரண்களின் மீது (கல் மனம் கொண்டோர்) அமர்ந்திருப்பார்கள். வட்ட வடிவமான சைக்கிள் டயர் அல்லது டயர் டியூப் ஒரு புறம் வெட்டப்பட்டு அதன் இரு நுனிகளிலும் விளக்கின் தீபத்தில் பற்றவைத்துப் பாதையில் வருகின்ற யானைகளின் கழுத்தில், சரியாக மாலை போன்று போட்டு விடுவார்கள்.

எரிகின்ற டயர் டியூப் உருகி கழுத்தில் ஒட்டிக் கொண்டு எரியும் போது யானைகள் படும்பாடு சொல்லத் தரமன்று. அவைகள் பிளிறி, ஓலமிட்டு, அழுது தவிக்கும் போது கல்மனமும் கரையும். இப்படிப்பட்ட அரக்ககுணம் படைத்தவர்களைப் பழி வாங்கவே, அவைகள் பாதைகளில் மூர்க்கமாக நடந்து கொள்கின்றன. யானைகள் வாழும் வனங்கள் மனிதனின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விட்டன. அவைகளின் வழித் தடங்கள் எல்லாம் மறிக்கப் படுகின்றன.

சற்குருநாதரும் நமது சுவாமியும் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள வனத்திற்குச் சென்றபோது சுவாமியிடம் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். வனவிலங்குகள் கூட்டம் கோயிலும்ா க வந்து மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் தாக்கி சேதப்படுத்துமாம்! அது மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் நடை பெறும் யுத்தமாம்! எத்தனையோ முறை இதுபற்றிச் சுவாமி கூறியிருக்கிறார். இன்று பத்திரிக்கைகளில் அடிக்கடி இந்த மாதிரியான செய்திகளைக் காண்கின்றோம்.

இனி சுவாமியின் தகப்பனார் மூணாறு செல்லும் தமிழகப் பாதையில், புளிய மரங்கள் காய்ப்புக்கு வரும் போது நடை பெற்ற ஏலத்தில், புளியங்காய்கள் உதிர்த்து எடுக்க ஏலம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார் அல்லவா? அதற்கு முந்தைய ஆண்டு ஏலம் கூறி எடுத்தவர் அங்கே வேண்டவே வேண்டாம் என தடுத்தும் பார்த்தார். காரணம் ‘மண்டை வெட்டியான்’ தான். அவர் பணம் கட்டி ஏலம் எடுத்திருந்தும், மண்டை வெட்டியான் பலனை எல்லாம் கொண்டு போய் விட்ட வருத்தம் தான். தட்டிக் கேட்டால் அவனும் அவன் ஆட்களும் வெட்டறிவாளுடன் வந்து, பட்டப் பகலில் புளியைக் கொள்ளை யடித்துச் செல்வார்கள். இதைக்கேட்டு சுவாமியின் தந்தை APM சாமி, “என்னிடம் அவன் வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வரட்டும், வந்தால் என்ன நடக்கும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

புளி பறிக்க மரம் ஏறத்தெரிந்த தனது சீடர்களாகிய சிலம்பாட்ட வீரர்களைத் தேர்வு செய்து கொண்டார். மண்டை வெட்டியான் ஊருக்குச் சென்று வீடு ஒன்றை மாத வாடகைக்கு எடுத்து, தனது சிலம்பாட்ட வீரர்களைக் கொண்டு அங்கே பயிற்சி களமாகவே ஆக்கினார். தினமும் இரவில் பயிற்சியும், கலையில் புளியங்காய்களைப் பறிக்க சிலம்பம் வீரர்களோடு சென்று வருவதுமாகப் பணி தொடர்ந்தது. பிறர் மூலம் அவனது எச்சரிக்கை இங்கே வரத்துவங்கியது. “தைரியம் இருந்தால் நேரில் வா” என்பதுதான் பதிலாக இருந்தது!

ஆட்கள் புளியங் காய்கள் உதிர்க்கச் சென்றவுடன் தகப்பனார் APMசாமி அவர்கள், பாதையில் ரோந்து போக தனது சைக்கிளில் ஒரேயொரு உருட்டுக் கட்டை ஒன்றை மட்டுமே எடுத்துச் செல்வார். மண்டை வெட்டியானைப் பற்றிய தகவல்கள், உண்மை, பொய், கற்பனைக் கதைகள் எல்லாவற்றையும் சேகரித்து மனதில் வைத்துக் கொண்டிருந்தார். மண்டை வெட்டியான் தனக்கு எதிரி என்று ஒருவரை எண்ணி விட்டால் அதுபோதும்! அவர் வரும் பாதையில் உள்ள புளியமரத்தில் சரியான இடம் பார்த்து அமர்ந்து கொண்டு விடுவான். இடுப்பில் வீச்சரிவாள் தயாராகத் சொருகப்பட்டிருக்கும். தனது எதிரி தனக்கு நேரே கீழே வரும் போது, இடது கரத்தில் மரக்கொம்பைப் பற்றியபடியே தொங்கிக்கொண்டு, தனது வலது கரத்தில் வெட்டறிவாளை எடுத்துப் பிடித்துக் கொண்டு மண்டையில் ஓங்கி ஒரேபோடு!
அந்த நபருக்குக் கதி மோட்சமோ அல்லது கபால மோட்சமோ இரண்டில் ஒன்று நிச்சயமாக உடனேயே கிடைத்து விடும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button