ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
01•08•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(28) மனிதனே புனிதன் —
சாப விமோசனம்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதற்கு முன்பே அமைந்து விட்ட ஒரு காரணத்தை ஒட்டியே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எதைச் செய்கின்றோமோ அதைப் பொறுத்தே அடுத்த நிகழ்ச்சி அமைகிறது.” இப்படிக் கூறுவது இன்றைய விஞ்ஞானம்!
மெய் ஞானியர்களும் இதனையே, “முற் பிறவிகளில் செய்த நல்வினைகளை ஒட்டியே இந்தப் பிறவியின் நல்வாழ்வு ஒரு மனிதனுக்கு அமைகின்றது.”
“இந்தப் பிறவியில் செய்யும் நல்ல காரியங்களை ஒட்டியே, அடுத்த பிறவியில் நமக்கு நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.” இதற்குப் பாவ புண்ணியம் என்று கூறாமல் “கர்மவிதி” என்று அழைத்தனர்.
தாயுமானவர் சுவாமி விட்ட சாபத்தினால் இராமநாதபுரம் மாவட்டமே, சுமார் முந்நூறு ஆண்டு காலங்கள் எவ்வித முன்னேற்றமுமின்றி வாடி வதங்கிய செய்தி யாவரும் அறிந்ததே!
அது சன்னியாசி சாபம். அதனால் தொழில் துறைகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கும். இது ராஜகுல சாபம்! சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், வழிபடும் கோவிலையும், சொத்து சுகங்களுடன் வாழ்பவர்கள் அனைவரையும் பீடித்த விஷயம்!
நமக்கு இது தேவையில்லாத விஷயமாக எண்ணம் வரலாம். மனித மனதில் நிதானம் தவறிவிட்டால் கூட இது தோன்றும்! சுவாமி அவர்களால் தான் விமோசனம் என்று வரும் போது வரலாறு முக்கியத்துவம் பெற்ற ஆகாயப் பேரேட்டில் பதிவாகி விடும்( Law of karma) இயற்கை சட்டத்தை எட்டிவிடுகிறதே!
விதியை மதியால் வெல்லும் உபாயம் இப்படிப்பட்ட மகான்களுக்கே சித்திக்கின்றது!
அதுவும் இறையருள் துணையோடு!
நாம் கேட்கும் கேள்விகளின் தன்மையும், கேள்வி கேட்பவரின் மனநிலையையும் உத்தேசித்தே தக்க விடையை சுவாமி சொல்வார். இது எப்படி சாத்தியம்? என்று கேட்டேன். அதற்கு அவர், “விஞ்ஞானிகளும் அதனைக் கண்டு பிடித்து விட்டார்கள்! என்றார்.
“வானில் மற்றும் எங்குமே படர்ந்திருக்கும் தூசிப் படலங்களைப் பார்த்திருக்கிறாயல்லவா? இதையெல்லாம் அணுக்கள் என்று பொதுவாகச் சொல்லி விடுகிறோம்! இதனுள்ளும் நுழைந்து தனது ஆராய்ச்சியைத் துவங்கியபோது, அணுவினுள் மிகவும் நுட்பமான அணுத்துகள்கள் ஒவ்வொன்றிலும், இரண்டு எதிர்நிலைகளைக் கண்டு கொண்டார்கள். அங்குள்ள வெற்றிடம் என்ற சூனியப் பிரதேசத்தில் குடியிருக்கும் அணுத்துகள்கள் நாம் எண்ண நினைத்து அணுகுகின்றோமோ அதற்கு ஏற்றபடி அதனுடைய இயற்கைச் தன்மையில் மாறுபாட்டை ஏற்படுத்தி விடும்.”
“ஒரு எதிர்மறை இன்னொரு எதிர் மறையுடன் சேர்ந்து அணுக்கருவைச் சுற்றி இருக்கத் துவங்கும். இவை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இருப்பதைத்தான் முப்பாழ் வெளி என்று சித்தர்கள் கூறினர்.”
“நாம் பார்க்கும் அணுகும் முறையில் இங்கு தான் இயற்கை பாடபோதனையைத் தருகிறது. இயற்கையுடன் இயைந்து வாழ இங்கு தான் கற்க வேண்டும். இல்லாவிடில் எதிர்மறை குணங்கள் இரட்டிப்பாகி விடும் என்றார். இயற்கையின் இயல்பான தன்னையே அது” என்றார்.
விஞ்ஞானம் முப்பாழ் வெளி யை ஆராய, சித்தன் போல விஞ்ஞானி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சிரித்து விட்டு தனது உள்ளே ஆழ்ந்து போனார். பிறகு கண்விழித்து “உனது மகன் கேட்ட கேள்விக்கு ஓளி – ஒலி பாடத்திலும் இதற்கு விடை இருக்கிறது. “என்றார்.
நமது சுவாமி அவர்களின் குருநாதராக விளக்கப் போகும் ஒருமாமகான், சுவாமியின் சிறுவயது முதற்கொண்டே அவரைச் சந்தித்து வந்தார். தனது பாட போதனைகளை ஆரம்பித்து விட்டதன் அடையாளமாக, தக்க சமயங்களில் வந்து ஆலோசனைகள் சொல்லி வந்து இருக்கிறார். அவர் நமது சுவாமிக்கு கிராம சாபம் தீர்க்கும் வழி முறையைப் போதித்தார். அது?
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.