சாந்தி! சாந்தி! சாந்தி!

168

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

28•10•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(111) மனிதனே புனிதன் —
சாந்தி! சாந்தி! சாந்தி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனுடைய பிரார்த்தனைகள் இறைவனை நோக்கி அமைதியாக இரண்டு விதங்களில் இருப்பதாகவே நமது முன்னோர்கள் அருளி உள்ளனர். பிரார்த்தனைகளை முறையாகச் செய்து வந்து இருந்தனர். மனிதப்படைப்பு என்பதே எதையுமே சாதிப்பதற்காக என்றே உணர்த்தி வந்துள்ளனர். அதற்கு வேண்டியது என்ன? 1.வலிமை மிகுந்த உடல், 2. அதனை விட உறுதியான மனம் – இவைகளை அடைவதற்கு ஞானியர்களால் ஆன்மிக வழிகளாய் பல அருளப்பட்டது. அத்துடன் மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் பற்றியும், அவைகளில் இருந்து விடுபடவும் போதிக்கப்பட்டன.

மனிதனுக்கு இயற்கையின் ஆற்றல் சக்தியானது தனது அதீத சீற்றங்களால், இடி, மின்னல், மழை வெள்ளம், புயல், கடல்சீற்றம் மற்றும் இன்னபிற இயற்கைத் துன்பங்களில் இருந்து விடுபடுவதுடன், நமக்குத் துன்பம் தரும் இயற்கைச் சீற்றம் தணிந்து சாந்தி ஏற்பட வேண்டும்! இயற்கை சாந்தமுடன் இருக்க மனிதனுக்கும் நிம்மதி உண்டாகும்! இயற்கைக்கு நன்றி கூறவேண்டும்.

மனிதனுக்கு மற்றும் ஒரு துன்பம் உண்டு. அது மற்றவர்களாலும், விலங்கு இனங்களினாலும் உண்டாகும் ஆபத்துத்தான். மற்றும் வண்டி வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்கள். இதற்கு ஜெபதவப் பிரார்த்தனைகள், ஜாக்கிரதை உணர்வைத் தூண்டிவிடும். அதனால் அவைகள் சாந்தி அடையவே ஹோமங்களில் வேண்டுதல்கள் செய்து இறையருளுக்கு நன்றி கூறுகிறார்கள். சாந்தி அடைய வே ஆகுதிகள் வழங்கப்படுகிறது.

மூன்றாவது மிகவும் முக்கியமானது. மனிதன் தனது வாழ்ககையில், தன்னுடைய முன்னேற்றத்தைக் தானே தடுத்துக் கொள்ளும் செயலகள், மனிதன் அறியாமையால் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். மனிதன் தனது நேர்மறை எண்ணங்களை அறிந்து, தொடர் பிரார்த்தனைகள் செய்யாதவரை, மனித மனமானது வாழ்வின் பிரச்சினைகளைக் கட்டாயமாக எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும். மனம் கெட்டு விட்டால் உறுதியாக உடல் கெட்டு, நோய்நொடிகள் தாக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். தெய்வீக வழிகளும், நல்ல ஒளஷதங்களும், மனதிற்கும் , உடலுக்கும் சாந்தி கிடைக்க குருமார்கள் வழிகாட்டினார்கள். அவைகளைக் கடைப்பிடித்து மனிதன் நல்ல நிலை அடைந்து வாழ்வில் இறையருளுடன் மனசாந்தி பெறவேண்டும். இதற்கும் நன்றியினைத் தெரியப் படுத்தவேண்டும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button