சாதனையாளர் கோவிந்தன்!

260

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•08•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(48) மனிதனே புனிதன் —
சாதனையாளர் கோவிந்தன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாகராஜ சுவாமி அவர்களின் குருநாதர் அவரது நெற்றிப் பொட்டில் கட்டை விரலை வைத்துக் கவனஈர்ப்பு நரம்புகளைத் தூண்டி, மூளையில் உருவாகும் நான்கு சக்தி அலைகளில் ஒன்றை உருவாக்கி விட்டார். அது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தி உடையது. அதனை விஞ்ஞானம் பீட்டா அலை என்று கூறும்.

மனதில் இறுக்கத்தை இது ஏறுபடுத்தும். அதிகமாகக் கோப உணர்வுகளைத் தூண்டும். அதிகமான இரத்த அழுதத்தை உண்டு பண்ணும் இந்த பீட்டா அலைகளின் சுற்று வேகம் அதிக மாக இருக்கும். அமானுஷ்ய சக்திகளைக் குறிப்பிடும் போது ஆங்கிலேயர் 13 -என்ற எண்ணை உபயோகப் படுத்துவர். அது மூளையில் ஏற்படும் பீட்டா அலைகள் நிமிடத்திற்குப் பதின்மூன்று சுற்றுக்கள் சுற்றும் விதத்தைக் குறிக்கவே! இது மறைக்கப்பட்ட உண்மை! தீமையான எண்ணங்களை உருவாக்கும் சக்தியில் விருப்பமோடு அமானுஷ்யங்கள் தொழில் படும்.

பீட்டா அலைகளின் சக்தியைச் சித்தர்கள் தமது தவத்தால் கட்டுப்படுத்தி, அது கட்டுக்குள் அடங்கி இருப்பதைப் பரிசோதிக்கும் நிலையைக் காண்பவர்கள், அதனைச் சித்து விளையாட்டு என்று தவறுதலாகக் குறிப்பிட்டுக் கேலியும், அவ மரியாதையும் செய்து பரிகசிப்பதைப் பார்த்து இருக்கிறோம். அறிவின் இரகசியங்களை அறிந்து கொண்டு, தங்களை உயர்நிலைப் படுத்துதல் என்பதே சித்தர்கள் கையாண்ட வழி முறைகள்.

துறவு எண்ணம் ஏற்படும் காலத்தில் எதிலும் பற்றற்று மனம் ஒரு பரிபக்குவ நிலை பெற்று இருக்கும். அந்த நேரத்தில் பீட்டா அலைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சுலபம். இதனைச் சமன்பாடு செய்தல் என்பர். மருத்துவமும் கூட உடலில் எந்த சக்தியின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அச்சக்திக்கு உண்டான மருந்துகளைக் கொடுத்து உடலை சமநிலைக்குக் கொண்டு வருவார்கள். ஆற்றல் பெற்ற ஞானியர்களும் மனமண்டலத்தைக் கடந்து புத்தியின் வழியே சென்று அறிவை, பிரபஞ்ச சக்தியின் ஆற்றலைக் கொண்டு செயல்படுத்தி, விதியை வெல்லும் உபாயம் அறிகின்றார்கள்.

நமது சுவாமியின் இந் பயிற்சிக்குக் காலஅவகாசம் நிறையத் தேவைப்பட்டது. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சுவாமி அவர்களுக்குக் கொடுத்த ஓய்வை நன்றாகப் பயன்படுத்தி சாதனைகளில் இறங்கி விட்டார். தகப்பனார் திரும்பவும் பலசரக்கு வியாபாரத்தைக் கவனித்து வந்ததாலும், விவசாயத்தில் அக்கறை காட்டியதாகவும் குடும்பம் மீண்டும் நல்ல நிலைக்குப் பொருளாதாரத்தில் உயர்ந்தது.

தாயார் அவர்கள் பசுமாடுகள் பராமரித்தல், மிகுந்த பாலை கிராமத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்து உதவுதல், வழிபாடு என கவனத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டார். மகளிர் கந்து வட்டிக் கும்பல் விலகிச் சென்று விட்டது. பாட்டி அவர்கள் சுவாமியின் நலத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வரலானார். சுவாமி திரும்பவும் ஆற்றினுள் நீரில் நின்று ஜெபம் செய்து வரலானார். அதிகாலை நான்கு மணிக்குள் குளித்த நீரில் நின்று தனது ஜெபத்தைத் தொடர்ந்தார். அதிகாலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஜெபம் தொடர்ந்தது. கிராமத்தில் சுவாமி வயதுடைய மூன்று பேர் சுவாமி ஜெபம் செய்வதைக் கவனித்து வந்தவர்கள் இது பற்றி விசாரித்து, தங்களுக்கும் ஜெபம் கற்றுத்தரக் கேட்டார்கள். அதில் கோவிந்தன் என்பவர் விடாப் பிடியாக தினமும் ஆஜராகி விடுவார். அது வித்தியாசமாக சுவாமிக்கு மனதில் பட்டது. கோவிந்தன் தகப்பனார் ஆனைமலை அடிவாரத்தில் இருக்கும் செம்மனாம்பதி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில தங்கிப் பணி செய்து வந்தார். கோவிந்தன் எல்லோருடனும் நன்றாகப் பழகுவார். எப்பவும் கலகலப்பாக இருக்கும் அவர் மற்றவர்கள் ஏதாவது வேலைகள் சொன்னாலும் தட்டாமல் செய்து வந்தார். அனைவரும் அவர்மீது அன்பாக இருப்பார்கள். அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

அவரது தகப்பனாருடன் செம்மனாம்பதி பண்ணைக்குச் சென்றவரை அங்கு கீரி என்ற காட்டுப்பிராணி காலைக் கடித்து விட்டது. பெரும் முயற்சிக்குப் பிறகு அங்குள்ளவர்கள் கீரியிடம் இருந்து கோவிந்தனை மீட்டார்கள். கோயமுத்தூர் மருத்துவ மனைக்குச் கொண்டு சென்றார்கள். மூன்று மாதங்கள் சென்ற பிறகு கோவிந்தன் கிராமத்திற்கு வந்த போது கையில் கம்பு ஒன்றை ஊன்றி வந்தார். கீரி கடித்ததில் உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்யாமல் காலதாமதமாகிப் போனதால், காலில் சீழ் பிடித்து ஒரு காலை இழக்க வேண்டியதாயிற்று. குணம் பெற்று வந்த பிறகு மீண்டும் சுவாமி ஆற்றில் நின்று ஜெபம் செய்யும் போது கோவிந்தனும் ஜெபம் செய்து வந்தான். கம்பை ஊன்றியபடியே ஆற்றின் நீரினுள் கோவிந்தனும் ஜெபம் பழகி வந்தான். உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், விடா முயற்சியுடன் காரியம் ஆற்றும் கோவிந்தன் வாழ்வை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். காரணம் ஒன்றில்லாமல் சாதிப்பார் உலகில் இல்லை என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்வோம்.

சுவாமியின் தகப்பனார் நமது சுவாமிக்கு பெண் தேடி பல இடங்களில் சொல்லி வைத்திருந்தார். குறிப்பாக திரு.மணியின் மாமனார் வாழைக் கொம்பு நாகூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கையில் குடையுடன் பெண்தேடிப் புறப்பட்டு விட்டார். சுவாமி அவர்களின் பெரியப்பா திரு.கந்தசாமி அவர்களின் சம்மந்தி ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூரைச் சேர்ந்த நாட்டு வைத்தியர், மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தை சுவாமியின் தகப்பனாருக்கு விலைக்கு விற்ற கோவை சூலூரைச் சேர்ந்த ஐயா அவர்கள் மூவரும் தீவிரம் காட்டினார்கள்.

சுவாமி சாமியார் ஆகிவிடுவார் என்று நம்பி வந்த கிராமத்தினர் வியப்பும், சந்தோஷமும் கொண்டனர். சுவாமியின் தகப்பனாரின் பால்ய சிநேகிதர்கள், சின்னுக்கவுண்டர், கேரளா நல்லேப்பள்ளிக்காரர், சித்தூர் கவுண்டர் மற்றும் உறவினர்களால் வீடு கலகலப்பாக மாறியது.

கடைசி தரம் சுவாமி தனது பாட்டியிடமும், தாயாரிடமும் தனது துறவியாகும் எண்ணத்தைக் கூறினார். பாட்டி வருத்தத்தில் சாபமான வார்த்தைகளை வெளியிட்டார். “இல்லறம் ஏற்காது நீ இறந்தால் சந்நியாசிப் பிசாசாக மாறி விடுவாய்!”. இதுவரைக்கும் பாட்டி இத்தகைய வார்த்தைகளைப் பேசி சுவாமி கேட்டதே இல்லை. மறுநாள் முதற்கொண்டு சுவாமி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது ஆங்கில மருத்துவர்கள் பலரிடம் சுவாமியை அழைத்துப் போய் சிகிச்சை தொடர்ந்தது. மீண்டும் ஒரு ஆண்டு காலம் திருமணப் பேச்சு ஒத்தி வைக்கப் பட்டது. பாட்டி மெளனமாகி விட்டார். சுவாமி தனது குருநாதரைத் தேடி அலையத் துவங்கினார்.

இந்நிலையில் சுவாமி அவர்களின் மூத்த சகோதரி திருமதி விஜயலெட்சுமி தண்டபாணி என்பவர் ஒரு செய்தி கொண்டு வந்தார். அது…

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும் )

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button