சற்குரு நாதரின் விளக்கம்.

295

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•07•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி

(386) மனிதனே புனிதன் —
சற்குரு நாதரின் விளக்கம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குரு நாதர் அவர்கள் மேலும் கூறினார், “மகனே நீ பவானி – குமாரபாளையத்திலும் மற்றும் ஓர் இடத்திலும் வசிக்க வேண்டிய அவசியம் உண்டாகும். இனி உனக்குத் சோதனைகள் அதிகம் ஏற்படும். ஞானயோகியாய் விளங்கும் SSM.சுப்பிரமணியம் அவர்கள் குழந்தையின் உள்ளம் கொண்டு உன்னை வரவேற்பார். மற்றவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. அதனை நான் கவனித்துக் கொள்கிறேன். தினமும் சூரியனைப் பார்த்து தியானம் செய்யும் பழக்கத்தைக் கைவிட்டு விடாதே. அத்துடன் கண்களை விழித்தபடியே பஞ்சாக்கினி தவத்தில் வாழ்ந்து வரவேண்டும். உனக்குத் துணையாக நாகலக்ஷ்மி தேவி ராஜநாகவடிவில் பாதுகாக்க நீ இருக்கும் இடத்திற்கே வந்து விடுவாள். அவ்வப்போது நானும் உன்னைச் சந்திக்க வந்து விடுவேன். உனது சரீரத்தில் ஆறாதார சக்திகளை விழிப்புணர் வுடன் வைத்திருக்க பஞசாக்கினி சக்தி உதவிபுரியும் ” எனக்கூறி விட்டு நமது சுவாமியின் முகத்தையே கவனித்துக் கொண்டு இருந்தார். நாகராஜன் சுவாமி அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். பிறகு, “மகனே, அகத்திய மாமுனிவர் தென்பொதிகையில் இருந்து, ஒரு சிறுவன் வடிவம் கொண்டு அங்கு எழுந்தருள்வார். ராமாயண காலத்திய மறைக்கப் பட்ட பரிகார ஸ்தலத்தின் ரகசிய உண்மைகளை, ஓலைசுசுவடி யில் எழுதி வைத்துள்ளார். முனிவர்களுக்காக ராகு,கேது நாக தோஷத்தை நீக்கிடும் உபாயத்தைக் குருமலையில் வைத்து உபதேசித்த உத்தமரைக் காணப் போகிறாய். இத்தனை நன்மைகளைப் பெறப்போகும் உனக்கு அங்கு எத்தனை அவ மரியாதைகள், அவமானங்கள் ஏற்பட்டாலும் அவைகளை, தியானச் சங்கத் தலைவரும், எனது பக்தனுமான, SSM. சுப்பிரமணியம் அவர்களுக்காகப் பொறுத்துக் கொண்டு, எனது உண்மைச் சீடனாய் அங்கே வலம்வர வேண்டும்.”

“இன்றைய இரவில் உனக்கு “ஆறாதார வைபவம்” என்ற பாடத்தை நீ மீண்டும் கற்க வேண்டும். இனி உனக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. சமர்த்துப் பிள்ளை யாய் நீ நடந்து கொள்வது உனது சமார்த்தியமே! முக்கியமான ஒரு செய்தி எனது சீடன் வேணு கோபாலசாமியிடம் ஒரு முறை “மருத்துவ ரசமணி” ஒன்றை உருவாக்கச் சொல்லி வைத்தேன். அவனும் தட்டாமல் அதனைப் படைத்தான். பவானி தியான சங்கத்தை விட்டு விலகிச் செல்லும் போது, அற்புதமான அந்த மணியை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டான். அதனைக் கொண்டு மூலிகை ரகசியங்கள் அனைத்தும் நீ கற்றுக் கொள்ள
வேண்டும். அதனால் நாம்வெளிப்படுத்தப் போகும் பரிகார ஸ்தலத்திற்கு வரும் மெய்யன்பர்களுக்கு அது மிகுந்த பலன்களைத் தரும். இனி நான் கொஞ்ச நாட்கள் பழனியில் நமது சமாதிக்குள் தவமிருக்கப் போகிறேன். உனக்குத் தியானத் தில் கிடைக்கும் பாடங்களை முறையாகக் கற்றுவர வேண்டும். இனி நான் புறப்படுகி றேன். ஏதாவது சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள் ” எனக்கூறிப் புன்னகை புரிந்தார். நமது நாகராஜன் சுவாமி, “தந்தையே, தாங்கள் எனக்கு அளித்த பொறுப்பு எத்தனை வலிமை வாய்ந்ததென உணர்கிறேன். எனக்கு இனிமேல் பாடங்களில் சந்தேகவினா எழுந்தால் எழுதிவைத்துக் கொள்கிறேன். ஐயனே, சிறு வயது முதல் தங்களின் திவ்ய தரிசனம் பெறும் பேறு பெற்ற எனக்குத் தங்களை மறுபடியும் காணும் பாக்கியம் எந்நாளோ? ” இதனைக் கூறும் பொழுது நமது நாகராஜன் சுவாமியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்த சற்குருநாதர், “சரியாக ஒரு வருடம் சென்றதும் உன்னைக் காண வருவேன் ” எனறு கூறி விட்டு, “எங்கே? அருட்பெருஞ் ஜோதி பாடலைப் பாடு” என்று ஆணையிட்டதும் நமது சுவாமி பாடினார்.

“அருட்பெருஞ் ஜோதி ஆனந்த ஜோதி, ஆதி சிவமாகி வந்த ஈஸ்வர ஜோதி ” கண்களை மூடியபடியே இனிமையாக உயிரோட்டத்துடன் முழுப் பாடலையும், ஊண் கலந்து, உயிர் கலந்து உள்ளமகிழ்வுடன் பாடிக் கொண்டே இருந்தார். சற்குரு நாதர் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். கண்களில் ஆனந்தபாஷ்யம் வழியைப் பாடிக் கொண்டே இருந்தார். இனிய தென்றல் காற்று மேற்குத் தொடர்ச்சி மலையின் மூலிகை நறுமணங் களைக் கொணர்ந்து வந்து சற்குரு நாதரின் பொன்னார் மேனியைத் தழுவி மகிழ்ந்தது. இயற்கை ராகஸ்வரங்களில் தலையசைத்து ரசித்தது. ஞானத் திருமதி பொன்னம்மாள் பாட்டியின் குரல் கேட்டு நமது சுவாமி கண்விழித்துப் பார்த்தார். சற்குரு நாதர் புறப்பட்டுச் சென்றிருந்தார். சுவாமி எங்கே? என்று பாட்டி ஜாடையில் கேட்டார். நமது சுவாமி தனது மார்பில் வலது கையை வைத்து ஜாடையிலேயே பதில்
கூறினார். சற்குருவாகிய சிவம் தன்னோடு ஐக்கிய பாவனையில்
கலந்து மகிழ்ந்த சுகத்தைப் பெற்றார் நமது சுவாமி. நடப்பு வாரக்கடைசியில் பொள்ளாச்சி ஞான யோகினி திருமதி சுந்தரம்மாள் நடத்தி வந்த தியானக் கூட்டத்தில் நமது சுவாமி கலந்து கொள்ளச்
சென்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button