சற்குரு நாதனின் தவம்!

0 215

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•07•2016,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(3) மனிதனே புனிதன் — சற்குரு நாதனின் தவம்!
••••••••••••••••••••••••••••••••••••
அன்பும், கருணையும் மிகுந்த ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் தமது பன்னிரெண்டாம் வயதில் பால சன்னியாசியாக, வீட்டை விட்டு வெளியேறி, நடந்து,

கங்கை நதிக்கரையில் கைலாசநாதர் பாதத்திலுள்ள ஹரித்துவாரில் தங்கி தவ வாழ்வில் ஈடுபட்டார்.

பாலயோகி கிடைக்கும் பொழுது உணவை உட்கொள்வதும், ஈஸ்வர மஹா ஜோதியை அகத்தில் இருத்தி தவம் புரிவதும் தொடர்ந்து நடைபெற்றது.

பன்னிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்ட அவர், அன்ன ஆகாரமின்றி காற்றினில் இருந்து சக்தியை ஈர்த்து எடுக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றார்.

ஒளிப்பிரகாசம் துலங்கும் இவரைக் கண்டு தரிசனம் பெற, அநேகத் துறவிகளும், பக்தர்களும் வந்தவண்ணம் இருந்தனர்.

இவரது முகவிலாச தரிசனம் கண்டவுடனே கவலைகள் நீங்கி மகிழ்ந்தவர்கள் ஏராளம்!

ஒருநாள் இரவில் யாரும் அறியாமல் அவ்விடத்தை விட்டு அகன்று கால்போன போக்கில் நடந்து சென்று, கொல்கத்தா காளி கோயிலை அடைந்தார்.

ஏழு ஆண்டுகள் அங்கும் தவம் தொடர்ந்தது. அன்னையின் அருளினால் தேவரகசிய உண்மைகளை அறிந்தார்.

அட்டமாசித்துக்கள் இவரிடம் தஞ்சம் புகுந்தன. அனைத்து சித்திகளும் கைவரப்பெற்றன.

பூரணத்துவம் அடைந்து, கேட்டதெல்லாம் கிடைக்கப் பெறுவதுடன், துன்பம் உள்ளவர்களுக்கு உதவிகள் புரிந்து வந்தார்.

இவர் தொட்டவுடன் சகலவித நோய்கள் நீங்கின.அங்கிருந்து புறப்பட்டு விக்கிரமாதித்தியன் அருள் பெற்ற, உஜ்ஜெய்னி மாகாளி கோயிலில் தங்கி தவமிருந்து வந்தார்.

தீமைபுரியும் சக்திகள் இவரைக் கண்டதும் மருண்டு ஓடின! மாந்திரீகர்கள் வணங்கி விலகிச் சென்றனர்.

பரபிரம்ம சக்தியான இவரிடம் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்து, பரிபூரண சச்சிதானந்தப் பொருளாகவே விளங்கி வரலானார்.

தெய்வங்கள் இவரை தந்தை தாய் எனப்போற்றினர்.
பராபரத்தையே எண்ணி தவம் புரிந்து வந்த இவர்,

எங்கும் எவ்விடத்திலும் நீக்கமற நிறைந்து விளங்கும், உன்னத, தெய்வீக சக்திக்கும் அப்பாற்பட்டு விளங்கும் மகோன்னத ஆற்றல் சக்தியாய் தோன்றினார்.

இவரைச் சந்திப்பவர்கள் யாராயினும் அவரவர்கள் மொழியிலேயே பேசும் வல்லமை பெற்றவரானார்.

ஆந்திர தேசம் வந்து அங்கும் பக்தர்களுக்கு உதவிகள் செய்து பிறகு தமிழகம் வந்து சேர்ந்தார்.
முருகனின் படை வீடுகளில் ஒன்றான பழனியம்பதியை அடைந்து போகரின் தொடர்பைப் பெற்று தவம் புரிந்து வந்தார்.

பித்தனைப் போன்றே சுற்றிவந்த இவரின் மகிமைகளை மக்களும் உணர்ந்து கொள்ளும் காலமும் வந்து சேர்ந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)

நன்றி!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரர் தொண்டன் மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button