ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
24•11•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(147) மனிதனே புனிதன் —
சற்குருவே அதிசய வாழ்வு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவயோகினி திருமதி. சுந்தரம்மாள், தமது மூத்த மகன் திரு.சண்முகசுந்தரம் அவர்களை அனுப்பி நமது சுவாமி நாகராஜ் அவர்களை அழைத்து வரச் செய்தார். சுவாமி அங்கே சென்ற பொழுது, தவத்திரு. வேணு கோபால சுவாமி அவர்கள் அந்த அறைக்குள் தியானத்தில் அமர்ந்திருந்தார். நமது சுவாமியைப் பார்த்ததும் தவயோகினி, “வாப்பா தம்பி” என வரவேற்றார்கள். சங்கத்தின் ஞான குரு அருகில், சுவாமி அமர்ந்து கொண்டார். அவருக்கு ஞானகுரு என்ற பட்டத்தையும் வழங்கியவர், தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்களின் மருமகன் பொள்ளாச்சி திரு.ராமசாமி அண்ணார் அவர்களாவார்.
அதுவே நின்று நிலைத்து விட்டது.
ஞானகுரு என்று சொன்னால் இந்த ஞாலத்தில், அது தவத்திரு.வேணுகோபால சுவாமி என்றே குறிப்பிடும் அளவிற்கு, குறிப்பாக தமிழகத்தில் அவரது பக்தர்கள் எண்ணிக்கையைப் பெருக்கி விட்டது. பக்தர்களை ஈர்க்கும் காந்த சக்தி அவரிடம் பல்கிப் பெருகி இருந்தது. மற்றொரு விஷயம், ஒருமுறை நமது பெயரைக் கேட்டுத்தெரிந்து தெரிந்து கொண்டாரானால், எத்தனை வருடங்களானாலும் அப் பெயரை ஞாபகத்தில் வைத்திருப்பார். பெயர், ஊர் அனைத்தும், ஏன்? விலாசம் கூட அவர் ஞாபகத்தில் தங்கி இருக்கும்
அவரது தியானம் நிறைவு பெற்ற பிறகு கண் விழித்து நமது சுவாமியைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். பெயர், ஊர், விலாசம் எல்லாம் கேட்டு தனது ஞாபகத்தில் இருத்திக் கொண்டார். பிறகு உரிமையுடன், “தம்பி நாகராஜ் உங்களிடம் பிரம்மத்தைப் பற்றிய கேள்வியைக் கேட்கச் சொன்னவர், மிகவும் முக்கியமான நபர்தான் கூறியிருக்க வேண்டும். யார் அவர்? கூறுங்கள்” என்று பவ்யமாகக் கேட்டார். நமது சுவாமி அவரிடம், “அவர் உங்களுக்கு மிகவும் வேண்டியவர் என்று கூறினார். இந்தக் கேள்வியைக் கேட்டதுமே என்னைத் தெரிந்து கொள்வீர்கள் என்றார். ஆனால் நீங்கள் கோபப்படுவீர்கள் என்று அவர் கூறியிருந்தால் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டேன்” என்றார்.
தவத்திரு.வேணுகோபால சுவாமி, ” இன்னுமா அந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டேன். கேள்வியை என்னிடம் மட்டுமே கேட்கச் சொல்லி இருப்பார். இப்படி சபைநடுவே கேட்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திராது. இந்தக் கேள்வியைக் என்னிடம் கேட்க வருபவன் உலகில் முக்கிய நோக்கத்தை நிறைவேற்ற ரிஷிகளின் சார்பில் வருபவன் என்று அவர் கூறியிருக்கிறார்” என்றார்.
தவயோகினிக்குப இந்த சம்பாசனை பயத்தை உண்டு பண்ணி விட்டது.
“ஞானகுருவே யார் இவர்? நீங்கள் பேசிக் கொள்வது எனக்கு விளங்கவில்லை. பயமாக இருக்கிறது “என்றார்.
உடனே தவத்திரு. வேணுகோபால சுவாமி, ” அம்மா உங்கள் தத்துவ குருநாதர், உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க ஒருவர் பின்னாளில் வருவார் என்று குறிப்பிட்டது, இவரைத்தான் அம்மா. சரி, நாகராஜ் நீங்கள் பாடங்களைத் சரியான முறையில் கற்றுத் தேர்வீர்கள்! எனது உள்ளக்கிடக்கை ஒன்று அவசியம் நிறை வேற வேண்டும். அதை அவரிடம் தெரியப் படுத்துங்கள்! ஆகட்டும்’ சற்று நேரம் வெளியே சென்று வருவோம் வாருங்கள்” என்று அழைத்துப் போனார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.