சந்திர மெளலீஸ்வரர்!

223

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•12•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(173) மனிதனே புனிதன் —
சந்திர மெளலீஸ்வரர்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புனித எச்சரிக்கை கனவில் கண்ட பிறகு குடும்பத்தினர் குற்றங்குறைப் பேச்சை, அறைகுறையாகக் கேட்டுப் பிறகு படிப்படியாக அவைகளை அறவே விலக்கிக் கொண்ட சுவாமியின் தகப்பனார், எல்லாவற்றிலும் ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார். சுவாமி அவர்களும், திருமதி. மீனாம்பாள் நாச்சியார் அவர்களும் தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டும், தவவாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டும், சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். ஒருநாள் சுவாமியின் துணைவியார், “நான் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல எண்ணியுள்ளேன். இயல்பாக நடப்பதைப் போன்ற கனவு அது! தயவு பண்ணிக் கேட்க வேண்டும் ” என்றார். கேட்க சுவாமி சித்தமானார்.

“கனவில் தான் ஓரு ஆண் குழந்தையைக் கருவில் சுமக்கும் தாயானேன்.கிராமத்தில் இருந்து பொள்ளாச்சி மருத்துவமனை போகும் போது சுவாமியின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தேன். அங்கேயிருந்து ஆட்டோ ரிக்சாவில் ஆசிரியை ஒருவருடன் மருத்துவமனை சென்றேன்.பிரசவத்துக்கு முன்பு மருத்துவ மனை செவிலி ஒருத்தி வயிற்றின் மீது அமர்ந்து கொண்டு அழுத்தினால் நான் துன்பமுற்று அழுதேன். ஆண்குழந்தை பிறந்ததைத் தான் சுயஉணர்வில் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்குருநாதர் ஓம் ஸ்ரீ ஈஸ்வரர் தோன்றி சந்திர மெளலீஸ்வரன் என்ற க
பெயரைக் குழந்தைக்கு வைத்து ஆசீர்வாதம் செய்தவுடன் எனக்கு கனவின் உறக்கம் நீங்கி விழிப்பு நிலை ஏற்பட்டு விட்டது. உடனே இதை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்” என்று கூறிவிட்டுச், “கனவில் கண்டதைப் போலவே நடைபெறும் என சற்குருநாதர் கூறினார்.” சுவாமி அப்படியே ஆகட்டும் என ஆசீர்வதித்தார். உண்மையில் அவர்கள் கனவில் கண்டது போலவே அனைத்தும் நடை பெறவும், மிகவும் ஜாக்கிரதை உணர்வு வரப்பெற்ற சுவாமியம்மா, செவிலி தனது வயிற்றில் அழுத்த உட்கார வரும் போது மறுத்து விட்டார். 31•10•1983, திங்கட்கிழமை, இரவு 10•10 மணி, கிருஷண பட்சத்து ஏகாதசி , பூரம் நட்சத்திரம், தமிழ் ருத்ரோத்காரி வருடம், ஐப்பசி மாதம், 14 – ந் தேதி. கனவில் கண்டபடியே நடை பெற்றது மீனாம்பாள் நாச்சியாருக்கு மகிழ்ச்சி. பெயர் முன்னமே தெரிந்து விட்டதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்தக் குழந்தைதான் உறவினர் யார்? எவர்? என்று தெரியாமல் தனிமையில் வாழப் போகின்றவன். சுவாமி மற்றும் சுவாமியின் துணைவியார் இருவரும் சொத்து, சுகங்களைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள்! சன்னியாசிகள் போன்று நலவாழ்வு வாழ்ந்து கொண்டு குழந்தைகளுடன் தவவாழ்வு வாழப் போகின்றார்கள்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button